அட்சய திருதியை அன்று தானம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும்?

அட்சய திருதியை அன்று  தானம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும்?
X

பைல் படம்.

அட்சய திருதியை அன்று உணவு தானம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும் என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

அட்சய திருதியை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது தங்கம் வாங்குவது தான். இருப்பினும் அட்சய திருதியை தினத்தன்று தங்கத்தை தவிர்த்து நீங்கள் எது தானம் செய்தாலும், அதற்கு ஏற்ப பலன் உண்டு. அந்த வகையில் என்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

1. தண்ணீர் தானம் செய்தால் செல்வம் சேரும்.

2. பாய், படுக்கை தானம் செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

3. புத்தாடை தானம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். பதவி உயர்வு உண்டாகும்.

4. குங்குமம் தானம் செய்தால் வாழ்வில் நல்ல நிலை உண்டாகும்.

5. சந்தனம் தானம் செய்தால் விபத்துக்களில் இருந்து தப்பலாம்.

6. தாம்பூலம் தானம் செய்தால் நாட்டை ஆளும் பாக்கியத்தைப் பெறலாம்.

7. தேங்காய் தானம் செய்தால் பித்ருக்களுக்கு நல்லது.

8. தயிர், மோர் தானம் செய்தால் உயர் கல்வி யோகம் கிடைக்கும்.

9. வெள்ளிக்குடத்தில் துளசி, வெற்றிலை கலந்து புனித நீரை தானமாக கொடுத்தால் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யலாம்.

10. செருப்பு தானம் செய்தால் மறைவுக்குப் பிறகு சொர்க்கம் கிடைக்கும்.

11. குடைகள் தானம் செய்தால் வாழ்வில் உள்ள தடைகள் அகலும்.

12. கோதுமை தானம் செய்தால் மழை பெய்து சுபீட்சம் உண்டாகும்.

13. உணவு தானம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும்.

14. பழ வகைகள் தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.

15. ஏழைகளுக்கு தேவையானதை கொடுத்தால் ராஜயோக வாழ்க்கை கிடைக்கும்.

16. ஏழைகளுக்கு போர்வை மற்றும் ஆடைகள் தானம் செய்தால் உடல் நலம் சீராகும். நோய், நொடிகள் வராது.

17. மோர் பந்தல், தண்ணீர் பந்தல் வைத்து கொடுத்தால் கல்விச் செல்வம் வளரும்.

18. உணவு தானியங்களை தானம் செய்தால் விபத்து, அகால மரணம் ஏற்படாது.

Tags

Next Story