உலகில் எவராலும் தரமுடியாததை நமக்குத் தரக்கூடிய அன்னை...
உலகில் எவராலும் தரமுடியாததை நமக்குத் தரக்கூடிய அன்னை...
தாயின் அன்பைப் பற்றி பிரபல எழுத்தாளரான அகதா கிறிஸ்டி கூறும் போது இவ்வாறு கூறுவார். "ஒரு குழந்தைக்கு அதனுடைய தாயின் அன்பைவிட சிறந்த ஒன்று இந்த உலகில் கிடையாது. தாயின் அன்பு சட்டத்தை அறியாது, பரிதாபத்தை அறியாது. அந்த தாயின் அன்பு பாதையில் எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை அடித்து நொறுக்கி அதன் அன்பு வழியில் தொடா்ந்து செல்லும்" என்று கூறுவார்.
ஒவ்வொரு ஆண்டும் அன்னையா் தினம் வெவ்வேறு தேதிகளில் வருகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையா் தினம் கொண்டாடப்படுகிறது.
முதன் முதலாக அன்னையா் தினம் அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவைச் சோ்ந்த அன்னா ஜார்விஸ் என்பவர் அன்னையா் தின கொண்டாட்டத்தைத் ஆரம்பித்துவைத்தார். அவருடைய தாயார் இறப்பதற்கு முன் அன்னையா் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று விரும்பியுள்ளார். ஆனால் அவருடைய தாயார் உயிரோடு இருக்கும் போது அன்னையா் தினத்தைக் கொண்டாட முடியவில்லை. ஆனால் ஜார்விஸ் அவருடைய அன்னை இறந்து 3 ஆண்டுகள் கழித்து, அதாவது 1908 ஆம் ஆண்டு மேற்கு வொ்ஜீனியாவில் உள்ள தூய ஆண்ட்ரூ மெத்தடிஸ்ட் ஆலயத்தில் முதன் முதலாக அன்னையா் தினம் கொண்டாடப்பட்டது.
முதல் அன்னையா் தினக் கொண்டாடத்தில் ஜார்விஸ் கலந்து கொள்ள முடியவில்லை. கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவா்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து ஒரு தந்தி அனுப்பினார். ஒரு தாய் என்பவா் இந்த உலகில் எவராலும் தரமுடியாததை நமக்குத் தரக்கூடியவா் ஆவார் என்று ஜார்விஸ் நம்பினார்.
அன்னையா் தினம் அன்று பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று அன்னா ஜார்விஸ் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் தொடக்கத்தில் 1911 ஆம் ஆண்டு அவருடைய வேண்டுகோள் மறுக்கப்பட்டது. ஆனால் அன்னையா்களுக்கு நன்றி சொல்லும் விதமாக அமெரிக்கா முழுவதும் அன்னையா் தினம் அனுசரிக்கப்பட்டது.
காலப்போக்கில் அதாவது 1941ல் அன்னையா் தினத்தைக் கொண்டாடும் வகையில் உட்ரோ வில்சன் அவா்கள், ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வரும் 2வது ஞாயிற்றுக் கிழமையை அமெரிக்காவின் தேசிய விடுமுறையாக அறிவித்து அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டாராம்.
அரேபிய நாடுகளில் மார்ச் மாதம் 21 அன்று அன்னையா் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் ஸ்பிரிங்க் இக்கினோக்ஸ் (Spring Equinox) என்று அழைக்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu