உலகில் 3000 வகை பாம்பு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது-உலக பாம்புகள் தினம்
உலக பாம்புகள் தினம் இன்று... ஜூலை 16
உலகில் கிட்டத்தட்ட 3000 வகையான பாம்பு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன கண்டறியப்படாதது இன்னும் எத்தனையோ எனத் தெரியாது!...
வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாம்புகள் அனைத்தும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப் பட்டுள்ளன. அரசின் அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் அவற்றை பிடித்தலோ, அடித்து கொன்றாலோ அல்லது ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றாலோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
ஏனெனில் பாம்புகள் தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கது. அவைகள் மனிதர்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகின்றன. பாம்பு விஷம் மருத்துவ துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பாம்புகளும் ஆந்தைகள் போன்று எலிக்கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகித்து உணவுச்சங்கிலியில் முக்கிய இடத்தில் உள்ளதால் பாம்புகளைப் பாதுகாப்போம்...
சென்னை கிண்டி பாம்பு பண்ணையில் உள்ள பல விதமான ஊர்வனைகளில் இவைகளும் ஒன்று.கிண்டி பூங்காவில் பல்லிகள், முதலைகள் பாம்புகள் என பல விதமான ஊர்வன வகைகள் உள்ளன.
"இங்கு சுமார் 10 நல்ல பாம்புகள், 6 கண்ணாடி விரியன், 8 விரியன் பாம்புகள், 6 சுருட்டை விரியன், வெளி நாடுகளில் இருந்து வந்த 4 கோப்ரா பாம்புகள், மலைப்பாம்பு மற்றும் மலைப்பாம்பு குட்டிகள் இருக்கின்றன. இவற்றுக்கு எல்லாம் உணவாக வாரத்திற்கு 80 - 150 எலிகள் தேவைப்படும்" என்கிறார் பாம்புப் பண்ணையின் பராமரிப்பாளர் செல்வம்,
இந்த பாம்புப் பண்ணைதான் இந்தியாவின் முதல் ஊர்வன பூங்கா ஆகும். அமெரிக்காவில் பிறந்த இந்திய ஊர்வனவியல் ஆய்வாளர் ரோமுலஸ் விட்டேகர் இதனை 1972 ஆம் ஆண்டு தொடங்கினார்.
அழியும் நிலையில் இருக்கும் பாம்புகள் மற்றும் .முதலைகளுக்கு இந்தப் பண்ணைதான் இனப்பெருக்க மையமாக திகழ்கிறது. கடந்த ஆண்டு கூட ஆபத்தான அழியும் நிலையில் இருக்கும் கேன்ஜெடிக் கரியல் என்ற முதலை இங்கு இனப்பெருக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
"குறைந்த வருமானத்தால் கடந்த ஓராண்டாக வாரம் ஒரு முறைதான் விலங்குகளுக்கு உணவு கொடுத்து வருகிறோம். இது மிகவும் வருத்தமாக உள்ளது. பாம்புகளும் மனிதர்களைபோலத்தான். அவற்றுக்கும் உணவு தேவைப்படும். பாம்புகள் வாழ்ந்தால்தான், நமக்கு வாழ்வும் வாழ்வாதாரமும் இருக்கும்" என்கிறார் பாம்புப் பண்ணையின் பராமரிப்பாளர் செல்வம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu