ஊரும் பேரும் - தெரிந்த ஊர் தெரியாத வரலாறு - சாத்தான்குளம்

ஊரும் பேரும் - தெரிந்த ஊர் தெரியாத வரலாறு - சாத்தான்குளம்
X
அதென்ன ஊருக்கு பேரு சாத்தான்குளம் அப்படின்னு வெச்சு இருக்காய்ங்க-அப்படின்னு நீங்க கேட்கிறது நியாயம் தான்-ஆனால் சாத்தான் என்றால்.சாஸ்தா. சாத்தா, சாத்தன் என்று பொருள்.

இது என்ன ஊருக்கு சாத்தான்குளம் அப்படின்னு வெச்சு இருக்காய்ங்க... அப்படின்னு நீங்க கேட்கிறது நியாயம் தான்...ஆனால் சாத்தான் என்றால்...

சாஸ்தா. சாத்தா, சாத்தன்.

பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை யாட வைத்தார்

சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம்

கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதிய நல்ல

தீர்த்தமுஞ் சடையில் வைத்தார் திருப்பயற்றூரனாரே.

என்பது அப்பர் வாக்கு.

சாத்தான் என்ற பெயரில் வழிபடுவது கேரளாவில் மிகுதியாகக் காணப்படுகிறது. (சாஸ்தா என்றும், சாத்தான் என்றும் இரண்டுவிதமாகவும் சொல்கிறார்கள்.)

ஆங்கிலத்தில் சாத்தான் க்கு பொருத்தமான வார்த்தையை தமிழில் தேடினார்கள். நம்முடைய புராணங்களில் சாத்தான் கிடையாது. இங்கே, ராவணன், துரியோதனன் எல்லோரிடத்திலும் கூட நற்குணங்களும் இருக்கும்.

இறைவனுக்கு எதிரான கலகக்காரன் யாருமே இல்லை. சூரபத்மனைக் கூட, வகிர்ந்து, மயிலாகவும் சேவற்கொடியாகவும், தன்னில் ஒரு பகுதியாகவே இறைவன் ஏற்றுக்கொண்டான். பார்த்தார்கள். ஒலியில் கிட்டத்தட்ட பொருந்தி சோதித்து பார்த்ததிலி சாத்தான் மாட்டினார். பிடிச்சு Satanக்கு இணையாக தமிழில் போட்டு விட்டார்கள். இல்லாட்டிப் போனா, சாத்தான்குளம் என்றொரு ஊர் இருக்க முடியுமா?


சரி வாங்க வரலாறு பார்ப்போம்..

தூத்துக்குடியிலிருந்து 70 கி.மீ தொலைவிலும் திருச்செந்தூரில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவிலும் சாத்தான்குளம் நகரம் உள்ளது. சிறிய நகராகவும் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு சந்தை பகுதியாகவும் சாத்தான்குளம் இருந்து வருகிறது.

'' 17 வது நூற்றாண்டு வரையில் வீர மார்த்தாண்ட நல்லூர் என்றே சாத்தான்குளம் அழைக்கப்பட்டதாம் . அந்த காலத்துல இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையே வர்த்தகம் நடைபெறும் முக்கிய பகுதியாகவும் சரக்குகளை கொண்டு வந்து சாத்தி வைக்கும் இடமாகவும் இந்த ஊர் இருந்ததாம். அதனால், குலசேகரம் பாண்டியன் ஆட்சி காலத்துல சாத்துகுளம் அல்லது சாந்தகுளம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் அதுதான் பின்னாடி சாத்தான்குளம் என்று ஆனதாகவும் ஒரு தரப்பு காரங்க சொல்கிறாய்ங்க ''

இன்னொரு தரப்பு காரங்க அதெல்லாம் கிடையாது 17 வது நூற்றாண்டு வரை திருமரிக்கொழுந்தநல்லூராக இருந்த இந்த ஊருல இருந்த எங்க ஜமீன்தார் சாத்தான் சாம்பான் என்பவர்தான் இந்த ஊரில் நிறைய குளங்களை வெட்டுனாரு. அவருடைய நினைவாகவே இந்த ஊருக்கு சாத்தான்குளம் என்று பெயர் மாறியதாக சொல்றாய்ங்க.

தற்போது ஊர் பொதுமக்கள் சாத்தான்குளம் பெயரை மாற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வெச்சுருக்காய்ங்க. ஏன்னா ஊர் பேருல பேய்(சாத்தான்) இருப்பதால் பயமா இருக்கு அப்படின்னு சொல்லி பழையபடி எங்களுக்கு 17 ம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட திருக்கொழுந்தாபுரம் அல்லது வீர மார்த்தாண்ட நல்லூர் பெயரை சாத்தான்குளத்திற்கு சூட்ட வேண்டும் என்று அரசை கேட்டு இருக்காய்ங்க..

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!