திருப்பதி கோவில் லட்டு செஞ்சவரு வீட்டுல கட்டு கட்டாக நோட்டு..

திருப்பதி கோவில் லட்டு செஞ்சவரு வீட்டுல கட்டு கட்டாக நோட்டு..
X
வீட்டை கையகப்படுத்த சென்று பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுவந்த முன்னாள் ஊழியர் வீட்டில் கட்டுக்கட்டாக நோட்டு கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது

உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் தேவஸ்தானம் வழங்கிய வீட்டை கையகப்படுத்த சென்ற அதிகாரிகளுக்கு கட்டுகட்டாக பணம் முட்டை கிடைத்துள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தவர் சீனிவாசச்சாரி. பல ஆண்டுகளுக்கு முன்பு இவர் இந்த வேலையை புறக்கணித்து விட்டார். இருப்பினும் தேவஸ்தானம் சார்பில் அவருக்கு திருப்பதி சேஷாசலம் நகரில் ஒரு வீட்டை வழங்கியது.

இந்த வீட்டில் வசித்தபடி வாழ்ந்துவந்த சீனிவாச்சாரி எப்பொழுதும் திருமலையில் ஏழுமலையான் கோவிலை சுற்றி வந்து அங்குள்ளவர்களுடன் பழகி சுற்றி கொண்டு ஏழுமலையான் கோவிலுக்கு வரக்கூடிய முக்கிய பிரமுகர்களிடம் பிச்சை எடுத்தபடி சுற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு சீனிவாசச்சாரி உயிரிழந்தார்.

இதனால் அவர் வசித்துவந்த வீடு பூட்டியிருந்தது. சீனிவாச சாரிக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் தேவஸ்தனம் வழங்கிய விட்டை மீண்டும் தேவஸ்தனமே கையகப்படுத்த முடிவு செய்தது. அதற்காக இன்று தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் சீனிவாசச்சாரி வீட்டிற்கு சென்று பூட்டை உடைத்து பார்த்தனர்.

மூட்டையில் வைக்கப்பட்ட பெட்டியில் மூட்டையாக பண கட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது கட்டுகட்டாக பணம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பணம் என்னும் இயந்திரம் கொண்டு வந்து அவற்றை எண்ணியபோது சுமார் ரூ 10 லட்சத்திற்கும் மேல் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் இந்த பணத்தை என்ன செய்வது என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். .

Tags

Next Story
Weight Loss Tips In Tamil