அரசு நலத்திட்ட உதவிகளை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்

அரசு நலத்திட்ட உதவிகளை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்
X
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பகுதிக்குட்பட்ட குண்டாயிருப்பு மற்றும் கொங்கன்குளம்பஞ்சாயத்து பகுதிகளுக்கு உட்பட்ட சுமார் 98 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பகுதிக்குட்பட்ட குண்டாயிருப்பு மற்றும் கொங்கன்குளம்பஞ்சாயத்து பகுதிகளுக்கு உட்பட்ட சுமார் 98 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் வழங்கினார். மேலும் விலையில்லா ஆடுகளுக்கு செட்டு அமைத்து பராமரிக்கும் செலவுக்காக ஒரு குடும்பத்திற்கு 2,500 ரூபாய் வீதம் வழங்கினார். இத்திட்டம்வேலையில்லாமல் தவிக்கும் ஏழை குடும்பத்தினருக்கு இது போன்ற கால்நடைகளை வளர்க்கும் வாய்ப்பும் கொடுத்து அதற்கு வளர்ப்பதற்கு உதவித்தொகையும் வழங்கிய தமிழக அரசுக்கு பொதுமக்கள் அனைவரும் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

இந்நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை யூனியன் வைஸ்சேர்மன் ராமராஜ் பாண்டியன் மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர்எதிர் கோட்டைமணிகண்டன், கவுன்சிலர் தமிழ்ச்செல்வி ,சிவக்குமார் மற்றும்கட்சி நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story
ai solutions for small business