இன்ஜினியரிங் படிக்க இனிப்பான செய்தி : இனி கணிதம், இயற்பியல் கட்டாயம் இல்லை

குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளில் சேர 12-ம் வகுப்பில் கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டியதில்லை, கணினி அறிவியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் படிப்புகளில் சேர வேதியியல் கட்டாயமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.
2021-22 ஆம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கை குறித்த விவர குறிப்பேட்டை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி, இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கல்வி தகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, இயற்பியல், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், உயிரி தொழில்நுட்பம், விவசாயம், தொழிற்படிப்புகள், இன்பர்மேட்டிக்ஸ் ப்ராக்டிசஸ் , இன்ஜியனிரிங் கிராபிக்ஸ் , பிசினஸ் ஸ்டடிஸ் , தொழில்முனைவோர் ஆகிய பாடங்களில் ஏதாவது மூன்றை படித்திருந்தாலே பொறியில் படிப்புகளில் சேரலாம் என ஏஐசிடியூ தெரிவித்துள்ளது.
இது குறித்து ஏஐசிடியூ தெரிவித்ததாவது, " கணிதம், இயற்பியல் பாடங்களை தவிர பிற பாடங்களை எடுத்து பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் இணைப்பு படிப்பு ஒன்றை நடத்தும். பிளஸ் டூ தேர்வில் 45 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுப்பவர்கள் பொறியியல் படிப்புகளில் சேரலாம். பட்டியல் இன மாணவர்கள் 40 சதவிகிதம் எடுத்தால் போதும்." என்று கூறப்பட்டுள்ளது.
ஏஐசிடியின் இந்த புதிய முடிவுக்கு கல்வியாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து கணித ஆசிரியர்கள் கூறும் போது, " Data Science, Aritifical intelliegence and Machine Learning போன்ற புதிய படிப்புகளுக்கு கணித அறிவு கட்டாயம் என தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu