திருமணம் என்பது கான்ட்ராக்டா ? இந்த தலைமுறையினர் உணரணும் - நீதிபதி அட்வைஸ்

திருமணம் என்பது கான்ட்ராக்டா ? இந்த தலைமுறையினர் உணரணும்  - நீதிபதி அட்வைஸ்
X

திருமணம் மாதிரி படம்.

திருமணம் என்பது கான்ட்ராக்ட் அல்ல. அதை இந்த தலைமுறையினர் உணர வேண்டும் என்று நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.

திருமணம் என்பது ஒப்பந்தமல்ல என்றும் அது ஒரு சடங்கு என்றும் தற்போதைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ளோணும் - அப்படின்னு நீதிபதி அட்வைஸ்

சேலம் டிஸ்டிரிக்கில் மாட்டு டாக்டர் என்றழைக்கப்படும் veterinary doctor ஆக ஒர்க் செஞ்சிக்கிட்டிருந்தவர் சசிகுமார். திடீர்-னு குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் இவருக்கு எதிராக மனைவி இந்துமதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்கைச் சுட்டிக்காட்டி, சசிகுமாரை பணி இடைநீக்கம் செய்து கால்நடைத் துறை இயக்குனர் உத்தரவு பிறப்பிச்சிப்புட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியில் சேர்க்க கோரி சசிகுமார் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செஞ்சார். அந்த மனுவில், தன் ஒய்ஃப்- பா இருந்தவர் தன்னை துன்புறுத்தியதாகவும், ஒரு சூழலில் கைவிட்டுச் சென்று விவாகரத்து பெற்றதாகவும், அப்படி விவாகரத்து உத்தரவு பிறப்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன் தனக்கு எதிராக குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் விளக்கமா சொல்லி இருந்தார் .

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஏற்கனவே மனுதாரரின் வாதத்தை ஏற்று அவருக்கு விவாகரத்து வழங்கியுள்ள நிலையில், தேவையில்லாமல் மனுதாரரை துன்புறுத்தும் நோக்கில் குடும்ப வன்முறை தடைச் சட்டப் பிரிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, அந்த வழக்கை சுட்டிக்காட்டி சசிகுமாரை பணி இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து, 15 நாட்களில் அவரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டார்.

மேலும், மனைவி தான் கைவிட்டுச் சென்றார் என்ற அடிப்படையில் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளதால், குடும்ப வன்முறை தடைச் சட்ட வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டால், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்திற்கு, பணி செய்யாமல் ஊதியம் வழங்க வேண்டி வரும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கார்.

இதை எல்லாம் விட முத்தாய்ப்பாக திருமணம் என்பது ஒப்பந்தமல்ல என்றும் அது ஒரு சடங்கு என்றும் தற்போதைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ளோணும் அப்டீன்னு தெரிவிச்ச நீதிபதி, ஈகோ, சகிப்புதன்மையின்மை ஆகியவற்றை காலணிகளாக கருதி வீட்டுக்கு வெளியில் விட்டு விட வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்றும் அட்வைஸ் எல்லாம் சொல்லி இருக்காருங்கோ.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!