ஆண்களை விட பெண்களுக்கு அதிக சோர்வு; என்ன காரணம் தெரியுமா?

ஆண்களை விட பெண்களுக்கு அதிக சோர்வு; என்ன காரணம் தெரியுமா?
X

Women are more tired- பெண்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு ( கோப்பு படம்)

Women are more tired- ஆண்களை விட பெண்களுக்கு அதிக சோர்வு ஏற்பட காரணம் என்னவென்று தெரிந்துக்கொள்வோம்.

Women are more tired- ஆண்களை விட பெண்கள் அதிக சோர்வாக உணர்கிறார்கள். பெண்கள் மருத்துவர்களை அணுகும் நிலையில் பொதுவான புகார்களில் ஒன்றாகும். பெண்கள் குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலைகள், அலுவலகம் என எதுவாக இருந்தாலும் அவர்கள் செய்வது அதிகமான வேலையாக இருக்கின்றது. அலுவலக வேலைக்கு செல்வதற்கு முன்னும் பின்னும் அவர்கள் குடும்பத்திற்கு வேலை செய்ய வேண்டும். இது சராசரியாக ஒரு மனிதன் வாரத்திற்கு ஆரோக்கியமான வேலை நேர வரம்பை மீறுகிறது. இது பல ஆய்வுகளின்படி 40-50 மணிநேரங்களுக்கு இடையில் உள்ளது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் 18-65 வயதுக்குட்பட்ட பெண்களில் அதே வயதினரை விட சோர்வாகவும், பலவினமாகவும் உணர்கிறார்கள் என்று சுட்டிக்காட்டியது. நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வில் பெண் நோயாளிகளாக இருப்பவர்களின் முதல் 8 கவலைகளில் சோர்வு இருப்பதாகக் கூறுகிறது. பஞ்சாப், லூதியானாவில் உள்ள Cloudnine Group of Hospitals இன் மூத்த ஆலோசகர், மகப்பேறு மருத்துவர் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரான Dr Schumailla Bassi-யிடம், பெண்கள் ஏன் சோர்வாக உணர்கிறார்கள் என்பதைப் பற்றிப் பேசியுள்ளார்.


ஹார்மோன் சமநிலை சோர்வுக்கு வழிவகுக்கிறது

ஹார்மோன் சமநிலையின்மை வெவ்வேறு வயது பெண்களை பாதிப்படைய செய்கிறது. உடல் பருமன், தைராய்டு மற்றும் பிசிஓடி போன்றவற்றின் அறிகுறிகளும் இதில் அடங்கும். இந்த நிலையில் இருக்கும் பெண்களும் சோர்வடைய செய்வார்கள். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிய தாய்மார்களும் ஹார்மோன் சமநிலையின்மையை அனுபவிக்கிறார்கள் இதுவும் சவால்களுடன் பெண்களை சோர்வாக்க செய்கிறது. பிறந்த குழந்தையை கவனித்துக்கொள்வதற்கான உடல், உணர்ச்சி தேவைகள், தூக்கமின்மை மற்றும் கூடுதல் பொறுப்புகள் ஆகியவை பெண்களை மிகவும் சோர்வாக உணர வைக்கும்.

மெனோபாஸ் சோர்வுக்கு வழிவகுக்கும்

மாதவிடாய் நிறுத்தம் உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் சமநிலையைத் தடுக்கிறது. இது நடுத்தர வயது மற்றும் வயதான பெண்களில் சோர்வுக்கு வழிவகுக்கும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கும் வழிவகுக்கும்.

தைராய்டு சோர்வை ஏற்படுத்தும்

நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் அறிக்கையின்படி இந்தியாவில் சுமார் 42 மில்லியன் பெண்களுக்கு தைராய்டு பிரச்சனைகள் உள்ளது. எடை அதிகரிப்பு, வைட்டமின் டி குறைபாடு, கால்சியம் குறைபாடு மற்றும் பலவீனம் ஆகியவை ஹைப்போ தைராய்டிசத்தின் சில அறிகுறிகளாகும். இவை அனைத்தும் சோர்வை அதிகரிக்க செய்யும்.

ஊட்டச்சத்து குறைபாடுகள் பெண்களை சோர்வுக்கு வழிவகுக்கும்

யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியப் பெண்களின் உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது. கருவுற்றிருக்கும் பெண்களின் உணவுப் பழக்கம் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும். இதனால் இந்தியப் பெண்களில் நான்கில் ஒரு பகுதியினர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. பல பெண்கள் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் டி3, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஈ, வைட்டமின் டி, கால்சியம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி12 ஆகியவற்றின் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இது பெண்களின் ஆற்றல் அளவைக் குறைத்து மிகுந்த சோர்வுக்கு வழிவகுக்கிறது.


நாள்பட்ட நோய்கள் மற்றும் மருத்துவக் கோளாறுகள் சோர்வுக்கு வழிவகுக்கும்

நாள்பட்ட நோய்கள் மற்றும் மருத்துவக் கோளாறுகளும் பெண்களிடையே சோர்வுக்கு வழிவகுக்கும். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் தன்னியக்க நோய் எதிர்ப்பு குறைபாடுகள் நாள்பட்ட சோர்வு நோய்க்குறிக்கு வழிவகுக்கும்.

மனநல பிரச்சினைகள் சோர்வை ஏற்படுத்தும்

மனநலப் பிரச்சினைகளும் பெண்களிடையே சோர்வை ஏற்படுத்துகின்றன. அதிகப்படியான சிந்தனை, மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவை பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. ஆனால் அவை இடையூறு விளைவிக்கும் தூக்க முறையால் ஒரு நபரை கடுமையாக சோர்வடையச் செய்கிறது.

தூக்கக் கோளாறுகள் சோர்வுக்கு வழிவகுக்கும்

தூங்க இயலாமை அல்லது சீர்குலைக்கும் தூக்க முறை புதிய தாய்மார்கள் மற்றும் பெண்களை சோர்வுக்கான மற்றொரு காரணமாக இருக்கிறது. அதிக தூக்கம் அல்லது உடல் வலிகளால் நாள் முழுவதும் சோர்வு மற்றும் சோம்பலுக்கு வழிவகுக்கிறது. சமூக ஊடகங்களில் அதிகமாக உலாவுதல் அல்லது இரவு உணவிற்குப் பிறகு திரை நேரம் ஆகியவற்றால் தூக்கக் கோளாறுகள் ஏற்படலாம். இதனை குறைத்து தூக்கத்தை ஊக்குவிக்க செய்வது நல்லது.


வேகமான வாழ்க்கை முறைகளில் வேலை தொடர்பான மன அழுத்தம் மற்றும் சோர்வு மிகவும் பொதுவானதாக மறிவிட்டது. பெண்கள் தங்கள் தொழில் மற்றும் வீட்டு வேலைகளை ஒரே நேரத்தில் கையாள வேண்டிய நிலைகளில் அவர்களுக்கு சேர்வு ஏற்படுகிறது. பெண்களுக்கு பல சமூகக் கட்டமைப்புகள் உள்ளதால் எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற போராட்டம் அவர்களை சோர்வு மற்றும் நாள்பட்ட மன அழுத்தத்தை உணர வழிவகுக்கிறது.

பெண்கள் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தி தாங்களாகவே உழைக்க வேண்டும். உணவில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் உங்களை முதலில் வைக்க வேண்டும். இது சோர்வுக்கு பெரிதும் உதவும். சோர்வு தொடர்ந்து இருந்தால், உங்கள் சுகாதார நிபுணரிடம் பேச வேண்டியது நல்லது.

Tags

Next Story