உடற்பயிற்சியின்போது என்ன சாப்பிடலாம்? எவையெல்லாம் சாப்பிட கூடாது?

உடற்பயிற்சியின்போது என்ன சாப்பிடலாம்? எவையெல்லாம் சாப்பிட கூடாது?
X

மாதிரி படம் 

தவிர்க்கவேண்டிய பொருள்களின் பட்டியலில், சர்க்கரையைப்போலவே வேறு சில உணவுப் பொருள்களும் இருக்கின்றன.

உடற்பயிற்சி செஞ்சுட்டு வந்தவுடனே, சர்க்கரைப் பொருள்கள், கேக், ஜூஸ் போன்றவற்றை உட்கொண்டால், செய்த உடற்பயிற்சிக்கான பலன் கிடைக்காது' என ஒரு கருத்து இருக்கிறது. தவிர்க்கவேண்டிய பொருள்களின் பட்டியலில், சர்க்கரையைப்போலவே வேறு சில உணவுப் பொருள்களும் இருக்கின்றன. அந்த வகையில், உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும் சாப்பிடக் கூடாதவை, சாப்பிடவேண்டியவை, எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும், உணவுக்கும் உடற்பயிற்சிக்குமான இடைவெளி எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம் வாங்க

வீட்டிலேயே உடற்பயிற்சி செய்பவர்கள், ஜிம்முக்குப் போய் பயிற்சி செய்பவர்கள் என இரண்டு வகையினர் இருக்கிறார்கள். வீட்டிலேயே பயிற்சி மேற்கொள்கிறவர்களில் சிலர், சாப்பிட்டவுடனேயே உடற்பயிற்சியை ஆரம்பித்துவிடுவார்கள். ஜிம்மில் வொர்க்-அவுட் செய்பவர்கள் சிலர் காலை எழுந்ததுமே ஜிம்முக்குக் கிளம்பிவிடுவார்கள். இவர்களெல்லாம் உடற்பயிற்சிக்கு முன்னர் சாப்பிடவேண்டிய உணவில் அக்கறை காட்டுவதில்லை. உடம்பில் எனர்ஜி இல்லாமல், உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. உண்மையில் தசை, தொடை போன்ற பகுதிகளுக்கான பயிற்சி செய்பவர்களிலிருந்து, மன அமைதிக்காக மெடிடேஷன் செய்பவர்கள் வரை அனைவருக்கும் அவரவர் செய்யும் பயிற்சிக்கேற்ப எனர்ஜி தேவை

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதைவிட, ஊட்டச்சத்துக்கள் கலந்த சமச்சீர் உணவை உட்கொண்டால் உடலின் செயல்திறன் மேம்படும்.

உடற்பயிற்சி செய்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாக வாழைப்பழம் அல்லது ஆப்பிள் சாப்பிடலாம். இவை உடலுக்கு போதிய ஊக்கம் அளித்து சோர்வில்லாமல் உடற் பயிற்சி செய்வதற்கு உதவும். எளிதில் செரிமானமாகக்கூடிய சிற்றுண்டியையும் சிறிதளவு சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சிட்ரஸ் பழங்கள், பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அவை உடலுக்கு அசவுகரியத்தை உண்டாக்கக்கூடும் என்பதால் உடற்பயிற்சியின் செயல்திறன் பாதிக்கப்படும். எண்ணெய் உணவுகளை சாப்பிட்டாலும் இத்தகைய பிரச்சினையை உண்டாகும். உடலில் நீர்ச்சத்தை பேணுவதும் அவசியமானது. அதனால் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் பருகலாம். தாகமாக இருந்து, அதிக தண்ணீர் பருகினால் உடனே உடற்பயிற்சி செய்யக்கூடாது.

உடற்பயிற்சிக்கு பிறகு சாப்பிட வேண்டியவை:

உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு பழங்கள், நட்ஸ் வகைகள், முழு தானியங்கள், முட்டை, கோதுமை பிரெட், சாண்ட்விச், தயிர், பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

வொர்க்-அவுட் செய்யும்போது, உடலிலிருக்கும் அமினோ அமிலம் அனைத்தும் நீங்கிவிடும் என்பதால், அமினோ அமிலம் அதிகமிருக்கும் உணவுகளை உட்கொள்ளலாம். தசைக்கான வலிமையை அதிகரிப்பதில் அமினோ அமிலத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அந்த வகையில், அவித்த முட்டை, தயிர், மோர், பால் போன்றவற்றை உட்கொள்வது மிக நல்லது. கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை முழுமையாக தவிர்த்துவிட வேண்டும்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாம். அப்படி உடற்பயிற்சி செய்யும்போது உணவுகளின் மூலம் ஆற்றலை பெறுவதற்கு பதிலாக உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உடல் பயன்படுத்திக்கொள்ளும். அத்துடன் புரதங்களையும் பயன்படுத்திக்கொள்ளும். அதனை ஈடு செய்வதற்கு ஊட்டச்சத்துமிக்க உணவை உட்கொள்வது அவசியமானது.

கடினமான உடற்பயிற்சி செய்பவர்களை தவிர்த்து இலகுவான உடற்பயிற்சி செய்பவர்கள் சிறிதளவு சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு பயிற்சியை தொடங்குவது உடலுக்கு ஆரோக்கியமானது.

* சர்க்கரைப் பொருள்களையும், கொழுப்புச்சத்துள்ள உணவுகளையும் அன்றாட உணவிலிருந்து முழுமையாகத் தவிர்த்துவிடுங்கள்.

* முழுதானிய உணவுகள், பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். உடலில் நீர் வறட்சி ஏற்படாத அளவுக்குத் தண்ணீர் குடிக்கவும்.

* அத்லெட்ஸ், பாடி-பில்டர்ஸ் போன்ற அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள், பயிற்சியாளர்களின் பரிந்துரைப்படி தண்ணீரோடு சேர்த்து ஸ்போர்ட்ஸ் டிரிங்ஸ், எலெக்ட்ரோலைட்ஸ் போன்றவற்றை அருந்தலாம்.

* தினசரி உணவில், 55-60 சதவிகிதம் கார்போஹைட்ரேட்ஸ் (ஓட்ஸ், பீன்ஸ், பழங்கள், காய்கறிகள், கோதுமை, பாஸ்தா போன்றவை), 15-20 சதவிகிதம் கொழுப்புச்சத்து (மீன், நட்ஸ்), 15-20 சதவிகிதம் புரதம் (மீன், சிக்கன், குறைந்த கொழுப்புச்சத்துள்ள பால் பொருள்கள்) உட்கொள்ளலாம்.

* முழு உணவாக ஒரே நேரத்தில் உட்கொள்வதற்குப் பதிலாக, உணவைப் பிரித்து 5 முதல் 7 தடவையாகச் சாப்பிடுங்கள்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா