போஷாக்கான தலைமுடி வேணுமா? பூந்திக்கொட்டை யூஸ் பண்ணுங்க
சோப்பெர்ரிகள் என்றும் அழைக்கப்படும் பூந்திக் கொட்டைகள், இரசாயன அடிப்படையிலான சோப்பிற்கு இயற்கையான மற்றும் நிலையான மாற்றாகும். இந்த சிறிய, பெர்ரி போன்ற பழங்கள் இந்தியா மற்றும் நேபாளம் உட்பட உலகின் சூடான மற்றும் வெப்பமண்டல பகுதிகளில் உள்ள மரங்களில் வளர்க்கப்படுகின்றன. பூந்திக் கொட்டைகளை சோப் போல பயன்படுத்துவதன் நன்மைகள் என்னென்ன? வாங்க பாக்கலாம்
அழகு பராமரிப்பில் புதியதாக இப்போது பயன்படுத்தும் பொருள் அல்ல. பாரம்பரியமாகவே நம் பாட்டிமார்கள் பயன்படுத்திய பொருள்கள் தான். இதை சீயக்காயில் முடி வளர்ச்சிக்காக சேர்த்து பயன்படுத்துவார்கள்.
பூந்திக் கொட்டைகள் சபோனின் எனப்படும் இயற்கையான சர்பாக்டான்ட்டைக் கொண்டுள்ளது. இவற்றை தண்ணீரில் ஊறவைக்கும் போது, சபோனின் வெளியிடப்படுகிறது, இது இயற்கையான சோப்பு போன்ற கரைசலை உருவாக்குகிறது, இது சுத்தம் மற்றும் சலவை செய்ய பயன்படுத்தப்படுகிறது.
நன்மைகள்
இயற்கையானது மற்றும் இரசாயனம் இல்லாதது: இவற்றில் சருமத்தில் மென்மையானவை மற்றும் தோல் எரிச்சல் அல்லது ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும் கடுமையான இரசாயனங்கள் இல்லை.
மக்கும் தன்மை: இரசாயபூந்திக்சோப்புக் கொட்டைகள் மக்கும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காது. பயன்பாட்டிற்குப் பிறகு அவை உரமாகும் என்பதால், அவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை எற்படுத்தாது பொருளாதாரம்: பூந்திக் கோட்டைகள் பாரம்பரிய சோப்புக்கு எதிரான ஒரு செலவு குறைந்த மாற்றாகும். இவற்றை பல முறை மீண்டும் பயன்படுத்தலாம், நீண்ட காலத்திற்கு அவை மிகவும் சிக்கனமான விருப்பமாக இருக்கும்.
பூந்திக்கொட்டையை தண்ணீரில் கலந்து பயன்படுத்தும் போது அது சோப்பை போல செயல்படுகிறது. அதனால் இதை ஷாம்புவாக, சோப்புக்கு மாற்றாக, சரும பிரச்சனைகளை தீர்க்க என பலவிதங்களில் தயாரிக்கப்படுகிறது.
பூந்திகொட்டை பயன்படுத்தும் போது இயற்கையாகவே சருமத்துக்கு ஈரப்பதம் கிடைப்பதால், சருமம் மென்மையாக மாசு இல்லாமல் இருக்கிறது. இவை எந்தவிதமான பக்கவிளைவுகளையும் உண்டாக்காது என்பதால் எல்லா வித சருமத்தினரும், எல்லா வயதினரும் இதை பயன்படுத்தலாம்.
பொதுவாக சோப்பு பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை சுத்தம் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். உண்மையில் சோப்பை காட்டிலும் பூந்திகொட்டை சருமத்தை அடி ஆழம் வரை சென்று சுத்தம் செய்கிறது.
முகத்தின் சோர்வு உடனடியாக மறைய கண்களுக்கு தெரியாமல் இருக்கும் அழுக்கை நீக்குவதற்கு ஃபேஸ் வாஷ் உடனடியாக கை கொடுக்கும். உங்கள் சருமத்துக்கேற்ற ஃபேஸ் வாஷ் கடைகளில் கிடைக்கும் என்றாலும் எல்லா வித சருமத்தினரை கொண்டிருப்பவர்களும் பயன்படுத்தலாம் என்றால் அது பூந்திகொட்டை தயாரிப்பில் உருவான ஃபேஸ் வாஷ் மட்டும்தான்
பேன் பொடுகு போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட தினசரி குளியலில் பயன்படுத்தலாம். பேன், பொடுகு தொல்லையிலிருந்து விடுபட, வாரமிருமுறை தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.தினசரி குளியலில் சோப்புக்குப் பதிலாக இந்த பூந்தி கொட்டையை தேய்த்துக் குளித்தால், தோல் நோய்கள் நம்மை அண்டாது.
பூந்திக்கொட்டை நன்றாக உடைத்து அதில் உள்ள கொட்டைகளை நீக்கி அதனுடைய தோலை மட்டும் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும். ஊறவைக்கப்பட்ட தண்ணீருடன் சீயக்காய் சேர்த்து தலைக்கு குளித்து வருவதன் மூலமாக தலைமுடி பளபளப்பாகவும், முடி உதிர்வது இல்லாமலும் இருக்கும்.
சருமத்தை சுத்தம் செய்ய பலவகையான செயற்கை க்ரீம் வகையறாக்களை பயன்படுத்துவதுண்டு. இதனால் சமயங்களில் சருமத்த்தில் வெப்பத்தை உண்டாக்கலாம். பூந்திக்கொட்டையை பயன்படுத்துவதன் மூலம் சருமம் சுத்தமாவதோடு குளிர்விக்கவும் செய்யப்படுகிறது.
முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளின் வடுக்களையும் படிப்படியாக மறைய வைக்கும். அதிகமான முகப்பருக்களையும், முகத்தில் கரும்புள்ளிகளையும் கொண்டிருப்பவர்கள் பூந்திகொட்டை வைத்தியம் பார்ப்பது நல்ல பலனை தரும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu