CIBIL Score: உங்கள் சிபில் ஸ்கோரை அதிகரிக்க வேண்டுமா?

CIBIL Score: உங்கள் சிபில் ஸ்கோரை அதிகரிக்க வேண்டுமா?
X
CIBIL Score: உங்கள் CIBIL ஸ்கோரை அதிகரிக்க வேண்டுமா? தெரிந்துகொள்வோம் வாங்க...

கடன் என்று வந்தாலே "சிபில் ஸ்கோர்" என்ற வார்த்தை முக்கியமாக இடம்பெறுகிறது. கடன் பெற எவ்வளவு சிபில் ஸ்கோர் இருக்க வேண்டும். வாங்க தெரிந்துக்கொள்வோம்.

சிபில் (CIBIL), என்று சுருக்கமாக அழைக்கப்படும் இது கடன் தகவல் நிறுவனம் ( Credit Information Bureau of India Limited ) என்பதாகும். இது 2000 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் முக்கிய பணி கடன் பெறுபவர்கள், கடன் அட்டை பயன்படுத்துபவர்கள் ஆகியோர் குறித்த தகவல்களைத் திரட்டி அவர்களின் நேர்மையை அளவிட்டு அதை புள்ளிகளாக வழங்குவதே ஆகும்.

வங்கிகள், நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் வாங்குபவர்கள் குறித்த தகவல்களை மாதந்தோரும் இந்த நிறுவனத்திற்கு தெரிவிக்கவேண்டும். இந்த புள்ளிகள் மூலம் ஆபத்து குறைந்த கடன்களை வழங்க முடியும் என்று வங்கிகள் கருதுகின்றன. அதாவது வாங்கிய கடனை திரும்பக் கட்டும் பழக்கம் உடைய நல்ல வாடிக்கையாளர்களைப் பெறுவதே இந்த அமைப்பின் நோக்கம்.

அனைத்து வாடிக்கையாளர்களின் பெயர், பிறந்த தேதி, அடையாளத்திற்காக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை - பாஸ்போர்ட் - ஓட்டுனர் உரிமம் - ரேஷன் கார்ட் - பான் கார்டு போன்றவற்றின் எண்களும் இந்த தகவல் கிடங்கில் சேமிக்கப்படுகின்றன. எனவே வாங்கிய கடனைத் திரும்ப செலுத்தாத வாடிக்கையாளர்கள் இந்த பட்டியலில் சிக்குவது உறுதி. இவ்வாறு சிக்கும் ஒரு வாடிக்கையாளர் பிறகு வேறெந்த வங்கியிலோ, நிதி நிறுவனத்திலோ கடன் பெற முடியாது.

இது உலகத்தின் பல பகுதிகளிலும் பின்பற்றப்படும் ஒரு நடைமுறைதான். அமெரிக்கா போன்ற முன்னேறிய(தாகக் கூறப்படும்) நாடுகளில், கடன் வரலாறு சிறப்பாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு மிகக்குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது.

CIBIL ஸ்கோரை அதிகரிப்பது மற்றும் அதை நல்ல நிலையில் வைத்துக்கொள்வது எப்படி?

எந்தவொரு வங்கியிலிருந்தும் கடன் அல்லது கிரெடிட் கார்டைப் பெறுவதற்கு நல்ல கிரெடிட் ஸ்கோரை வைத்திருப்பது முக்கியம். அதற்கான சில முக்கியமான குறிப்புகள் பற்றி பார்ப்போம்.

ஒரு நல்ல CIBIL மதிப்பெண்ணுக்கு கடன் பயன்பாட்டு விகிதம் 30 சதவீதமாக இருக்க வேண்டும்.

தற்போதுள்ள கார்டு (card limit ) வரம்பிற்குள் இருக்க நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், அதிக உச்ச வரம்புடன் கிரெடிட் கார்டைப் பெறுவது அறிவுறுத்தப்படுகிறது.

கடன்கள் அல்லது கிரெடிட் கார்டு நிலுவைத் திருப்பிச் செலுத்துதல் உங்கள் CIBIL Score மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, CIBIL ஸ்கோரை நல்ல முறையில் பராமரிக்க ஏதேனும் கடன் (loan) அல்லது கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

அதிக CIBIL ஸ்கோரைப் பெற, கடன் போர்ட்ஃபோலியோவை, பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற கடன் இரண்டின் நல்ல கலவையுடன் வேறுபடுத்துவது நல்லது.

கிரெடிட் கார்டு என்பது பாதுகாப்பற்ற கடனாகும். அதேசமயம் வீடு அல்லது வாகனக் கடன் என்பது பாதுகாப்பான கடனாகும்.

CIBIL ஸ்கோர் என்றால் என்ன?

CIBIL ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண்ணாகும். இதில் அதிக மதிப்பெண் பெறுவது சிறந்தது. பொதுவாக, இந்தியாவில் 750 க்கு மேல் மதிப்பெண் இருந்தால், கடன் அனுமதிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

இந்த மதிப்பெண்ணைக் கொண்ட அறிக்கை CIBIL அறிக்கை என்று அழைக்கப்படுகிறது.

CIBIL அறிக்கையானது, ஒரு நபரின் கடன் வரலாற்றை, அந்த நபர் எப்போதாவது அவரது முந்தைய கடனைத் திருப்பிச் செலுத்தவில்லையா என்பது உட்பட, வங்கி தெரிந்துக் கொள்ள அனுமதிக்கிறது.

அந்த நபர் இதுவரை எத்தனை கடன்களை எடுத்துள்ளார் என்பது முதல் முந்தைய கடன் தொகை மற்றும் கால அளவு உட்பட வரலாற்றை அனைத்து வங்கிகளுக்கு காண்பிக்கிறது. இது வங்கிகள் கடன்தொகையின் அபாயங்களைக் குறைக்க உதவுகிறது மற்றும் அதனால் இழப்புகளைக் குறைக்கிறது.

CIBIL மதிப்பெண் மற்றும் கடன் விகிதம்

கடனுக்கான எளிதான ஒப்புதலைத் தவிர, ஒரு நல்ல CIBIL மதிப்பெண் கடன் வாங்குபவர்களுக்கு மலிவான கடன்களைப் பெற உதவுகிறது. உதாரணமாக, வீட்டுக் கடன்களில், ஸ்டேட் வங்கி (SBI) கடன் வாங்குபவரின் கிரெடிட் ஸ்கோரின் அடிப்படையில் கடன் விகிதங்களை வழங்குகிறது.

750க்கு மேல் CIBIL மதிப்பெண் பெற்றவர்களுக்கு 9.15 சதவீதமும், 700-749 மதிப்பெண் பெற்றவர்களுக்கு 9.35 சதவீதமும், 650-699 CIBIL மதிப்பெண் பெற்றவர்களுக்கு 9.45 சதவீதமும் வழக்கமான வீட்டுக் கடனை வழங்குகிறது. CIBIL மதிப்பெண் 550-649 உள்ளவர்கள் 9.65 சதவீதத்தில் வீட்டுக் கடன் பெறமுடியும்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil