வெற்றிலையின் நன்மைகள் தமிழில்..

Vetrilai Uses in Tamil
X

Vetrilai Uses in Tamil

Vetrilai Uses in Tamil-செரிமான பிரச்சனைகள், தலைவலி, வலி நிவாரணி; வெற்றிலையின் நன்மைகளை இங்கு பார்ப்போம்

Vetrilai Uses in Tamil

நம் முன்னோர்கள் மிக கொடிய நோய் நொடிகள் ஏதுமின்றி வாழ காரணமாக இருந்தது அவர்களின் சிறந்த உணவு பழக்கம் தான். உணவு சாப்பிடும் போது அதனுடன் சேர்த்து சில மருத்துவ குணமிக்க மூலிகைகள் அல்லது மூலிகை பொருட்கள் உட்கொண்டனர். நமது நாட்டின் பாரம்பரியத்தில் எந்த ஒரு விருந்து நிகழ்ச்சியிலும் இறுதியாக "வெற்றிலை" சாப்பிடும் பழக்கம் பல காலமாக பின்பற்றப்படுகிறது.

சிலருக்கு கல்யாண வீடுகளில் சாப்பிட்டு விட்டு வெற்றிலை போட்டால் தான் திருப்தி அடையும். வெற்றிலை இந்திய உணவு கலாச்சாரத்தின் தவிர்க்க முடியாத பகுதி மட்டுமல்ல, ஆரோக்கிய நன்மைகளின் களஞ்சியமாகவும் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை வெற்றிலையானது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வெற்றிலையில் வைட்டமின் சி, தியாமின், நியாசின், ரிபோஃப்ளேவின் மற்றும் கரோட்டின் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன மற்றும் கால்சியத்தின் சிறந்த மூலமாகும். வெற்றிலையை தொடர்ந்து உட்கொள்வது மனித உடலின் வாத மற்றும் கப தோஷங்களை சமநிலைப்படுத்த உதவுகிறது என்று ஆயுர்வேதம் நம்புகிறது.

இது ஒரு வலுவான, காரமான மற்றும் நறுமண சுவை கொண்டது மற்றும் வாய் புத்துணர்ச்சியாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வெற்றிலையின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்.

செரிமானத்தை மேம்படுத்தும்

வெற்றிலையின் கார்மினேடிவ், வாயு எதிர்ப்பு மற்றும் காஸ்ட்ரோப்ரோடெக்டிவ் பண்புகள் செரிமானத்தை மேம்படுத்துகிறது. வெற்றிலை சாற்றுடன் சிறிது மிளகு கலந்து சாப்பிடலாம். இதை வடிகட்டி, குழந்தைகளுக்கு இந்த கலவையை இரண்டு தேக்கரண்டி வீதம் ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுக்க, அவர்களின் செரிமானத்தை அதிகரிக்கும்.

இரைப்பை வலியைக் குறைக்கும்

வெற்றிலைகள் உடலில் உள்ள PH அளவைப் பராமரிக்க உதவுகின்றன, தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் நச்சுப் பொருட்களிலிருந்து இரைப்பையை பாதுக்காக்கிறது.

மலச்சிக்கலுக்கு தீர்வு

வெற்றிலைகளை மென்று சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கலை போக்குகிறது. வெற்றிலையை வெதுவெதுப்பான நீருடன் மென்று வர மலச்சிக்கல் தீரும்.

உடலில் வாதம் தன்மை அதிகரிக்கும் போது வயிற்றில் வாயுத்தொல்லை போன்றவை ஏற்படுகிறது. மேலும் சிறு குழந்தைகள் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு, அவர்களை மிகுந்த அவதிக்குள்ளாகும்.

இச்சமயங்களில் ஒரு சில வெற்றிலைகளை எடுத்து கொண்டு, அதில் விளக்கெண்ணெய் தடவி நெருப்பில் காட்டி வயிற்றின் மீது வைத்து எடுக்க வேண்டும். இது போல் பத்து நிமிடங்கள் வரை செய்தால் வயிற்றில் இருக்கும் வாயு நீங்கும்.

பசியை தூண்டும்

ஒரு நாளைக்கு ஒரு வெற்றிலையை உட்கொள்வது உடலில் உள்ள அனைத்து நச்சுகளையும் வெளியேற்றுவதன் மூலம் வயிற்றின் சாதாரண pH அளவை மீட்டெடுக்க உதவுகிறது. எனவே, இது பசியை அதிகரிக்கிறது மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நாம் உண்ணும் உணவுகள் நன்கு செரிமானம் ஆனால் மட்டுமே உடலுக்கு தேவையான சக்திகள் கிடைத்து உடல் ஆரோக்கியமாக இருக்கும். வெற்றிலைகள் அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் அந்த வெற்றிலையில் இருக்கும் இயற்கையான அமிலங்கள் வயிறு, குடல் போன்றவற்றில் இருக்கும் நச்சுகள், அழுக்குகள் போன்றவற்றை நீக்கி, உணவு செரிமானம் செய்யும் திறனை அதிகரிக்கிறது.

தலைவலிக்கு தீர்வு

தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு, வெற்றிலையில் உள்ள வலி நிவாரணி மற்றும் குளிர்ச்சியான பண்புகள் காரணமாக, வெற்றிலை ஒரு சரியான தீர்வாகும். தலைவலியைப் போக்க வெற்றிலையை இடித்து நெற்றியில் தடவலாம்.

குளிர்காலங்களில் சிலருக்கு காரணமாக காதுகளில் வலி ஏற்படும். குறிப்பாக குழந்தைகளுக்கு காதுகளில் வலி மற்றும் குடைச்சல் உணர்வுகள் ஏற்படும். இச்சமயங்களில் சிறுது வெற்றிலைகளை கொண்டு வந்து நன்றாக அரைத்து அதன் சாறுகளை இரண்டு காதுகளிலும் இடுவதால் காது வலி குறையும், காது குடைச்சல்கள் நீங்கி காதுகளில் இருக்கின்ற கிருமிகளையும் அழிக்கும்.

வலி நிவாரணி

வெற்றிலை சிறந்த ஒரு வலி நிவாரணியாக இருக்கிறது. உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் நோய்கள், அடிபடுதல் போன்றவற்றால் மிகுந்த வலி ஏற்பட்டு அவதிபடும் நேரங்களில் ஒரு முழு வெற்றிலையை சுத்தம் செய்து வாயில் போட்டு நன்கு மென்று நீரருந்தினால் சீக்கிரத்தில் வலி குறையும். வெட்டு காயங்கள், சிராய்ப்புகள் வீக்கங்கள் போன்றவற்றிற்கு வெற்றிலைகளை நன்கு அரைத்து காயங்களின் மீது பற்று போட்டால் அவை சீக்கிரத்தில் குணமாகும்.

Vetrilai Uses in Tamil

மந்தத் தன்மையை போக்கும்

நீங்கள் மந்தமாக உணர்ந்தால், வெற்றிலை ஒரு சிறந்த தீர்வாகும். ஒரு டீஸ்பூன் வெற்றிலை சாற்றுடன் ஒரு துளி தேன் கலந்து கொள்ளவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட வேண்டும். இது மன செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் பலவீனத்திற்கு சிகிச்சையளிக்கிறது.

இருமல் நீங்கும்

வெற்றிலையில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் நன்மை நிரம்பியுள்ளது, இது தொடர்ந்து இருமலைக் குறைக்க உதவுகிறது. வெற்றிலையில் உள்ள இந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் சளியை எளிதாக்குகிறது மற்றும் இருமல் காரணமாக ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது.

குளிர்காலங்களில் ஏற்படும் சளி தொந்தரவுகளால் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுபவர்களுக்கும், ஆஸ்துமா நோய் இருப்பவர்களுக்கும் சிறந்த நிவாரணம் அளிக்க வல்லது வெற்றிலை. நுரையீரலில் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்படும் காலங்களில் ஒன்றிரண்டு வெற்றிலைகள் எடுத்து, அதில் கடுகு எண்ணெய் தடவி நெருப்பில் காட்டி உங்கள் நெஞ்சில் சிறிது நேரம் வைத்து எடுத்து வர சுவாசிப்பதில் இருக்கின்ற சிரமங்கள் நீங்கி நன்கு சுவாசிக்க முடியும்.

வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

வெற்றிலை எண்ணெய் பல் சிதைவைத் தடுக்க உதவுகிறது மற்றும் உங்கள் வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைப்பதன் மூலம் ஈறுகள் மற்றும் பற்களை பலப்படுத்துகிறது. ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் வெற்றிலை சாறை கலந்து தினமும் காலை மற்றும் இரவு வாய் கொப்பளிக்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டாலும், இறுதியில் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் அதிகமிருந்தது. தற்காலங்களில் அதை பெரும்பாலானோர் மறந்து விட்டனர். பலவகையான உணவுகளை சாப்பிடும் போது அந்த உணவில் இருக்கும் பாதகமான பொருட்கள், உணவு துணுக்குகள் போன்றவை பல்லிடுக்குகளில் மாட்டிக்கொள்கிறது. எத்தகைய உணவை சாப்பிட்ட பின்பும், வெற்றிலைகளை நன்கு மென்று அதன் சாறுகள் பற்கள், ஈறுகளில் தங்கியிருக்கும் கிருமிகளை அழிக்கிறது. பற்சொத்தை, பற்கூச்சம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

முகப்பருவை குணப்படுத்தும்

வெற்றிலையின் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் பருக்கள் இல்லாத, மிருதுவான சருமத்தை நமக்கு வழங்க உதவும். இது தோல் ஒவ்வாமை, சொறி, வெயில், தோல் புண், அரிப்பு மற்றும் உடல் துர்நாற்றம் ஆகியவற்றைத் தடுக்கிறது. மஞ்சளுடன் வெற்றிலையை நசுக்கி சாறு கலந்து முகத்தில் தடவினால் பல்வேறு தோல் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
is ai the future of computer science