காதலர் தின ஸ்பெஷல்: நீங்க என்ன கலர் டிரஸ் செலக்ட் பண்ண போறிங்க

பைல் படம்.
காதலர்கள் கொண்டாடும் நாள் தான் காதலர் தினம். காதல் சம்பந்தமான ஒவ்வொரு நிகழ்வும் அரங்கேறும் சுவாரஸ்யமான நாள் என்று கூட சொல்லலாம். லவ் ப்ரப்போஸ் பண்ண உகந்த முகூர்த்த நாள்னு கூட சொல்லலாம். மத்த நாள்ல மூஞ்சிய கூட கழுவாம உர சுத்தி வர பையன் அன்னைக்கு மட்டும், அதிகாலை அஞ்சு மணிக்கே எழுந்தானா "இவனும் பாதிக்கப்பட்டிருக்கான்" னு அர்த்தம்.
மற்ற நாட்கள்ல கலர்கலரா சட்டை போட்டுட்டு போனா கண்டுக்கவே மாட்டாங்க. இந்த காதலர் தினத்துக்கு மட்டும் நிம்மதியா ஒரு சட்டைய போட்டு வெளியப் போக முடியாது. ஒவ்வொரு சட்டைக்கும் புதுசா காரணம் கண்டுபிடுச்சு வைச்சு இருக்காங்க.
ஏன்னா இந்த காதலர் தினத்திலதாங்க உடைகளின் வண்ணங்களே இளைஞர்களோட எண்ணங்களை பிரதிபலிக்கிற விதமா இருக்கும். ஒவ்வொரு கலர் உடை அணிவதற்கும் ஒவ்வொரு காரணம் உள்ளதாம். அது என்னதான்னு பார்க்கலாம் வாங்க
ரோஸ் நிற உடை- இப்பதான் காதலை ஏற்றேன்
நீல நிற உடை- இன்னும் தனியாகத்தான் இருக்கிறேன்
மஞ்சள் நிற உடை- காதல் தோல்வியடைந்தேன்
கறுப்பு நிற உடை – காதல் நிராகரிக்கப்பட்டது
ஆரஞ்சு நிற உடை- நிச்சயதார்த்தம் செய்ய ரெடி
சிவப்பு நிற உடை- என்னை விட்டுவிடுங்கள்
கிரே கலர் உடை- காதலில் இன்ரெஸ்ட் இல்லை
வெள்ளை நிற உடை- ஏற்கனவே காதலிக்கிறேன்
பச்சை நிற உடை:
பச்சை வண்ண உடையை விரும்புபவர்களிடம் எளிதில் மனதில் என்ன உள்ளது என்பதை அறிய இயலாது. இவர்கள் அதிகம் பேச மாட்டார்கள். காதலை வெளிப்படையாக கூறமாட்டார்கள், காதல் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால் இதிலிருந்து பெண்கள் வேறுபடுவார்கள். இவர்களுக்கு காதல் உணர்வுகள் அதிகமானதாக இருக்கும். காலம் முழுக்க காதலித்துக் கொண்டு இருக்கவேண்டும் என நினைப்பர்.
ரோஸ் நிற உடை:
ரோஸ் நிறத்தை விரும்புபவர்கள் காதல் கனவுகள் நிறைய காண்பவராக இருப்பார்கள். தினமும் சிலரிடமிருந்து காதல் அழைப்பு வந்துகொண்டே இருக்கும். காதலை அனுபவித்து உணர்வார்கள்.
நீல நிற உடை:
இவர்களின் காதல் ஆராய்ந்து தெளிந்து எடுக்கப்பட்டதாக இருக்கும். காதல் ரசம் சொட்டச் சொட்ட அனுபவிப்பவர்களாக இருப்பார்கள். ஒரு முடிவு எடுத்தால் அதிலிருந்து மீளமாட்டார்கள். இவர்கள் காதல் செய்வது அரிது. காதலித்ததால் காதலுக்காக உயிரையே கொடுக்கக் கூடிய அரிய வகையினர்.
மஞ்சள் நிற உடை:
இவர்களின் காதல் அளவுக்கு அதிகமாக இருக்கும். காதலிக்கும்போதே தன் துணை இப்படி இருக்க வேண்டும் என மனக்கோட்டை கட்டி விடுவர். இவர்களுக்கு துணை கிடைப்பது அரிது. இருந்தாலும் அது பொய்யான அன்பாகவே இருக்கும். தன் மனைவியை காதலித்து மகிழ்வர்.
கருப்பு நிற உடை:
இவர்கள் இயல்பாகவே அமைதியாக இருப்பார்கள். எளிதில் அனைவரையும் பேச்சின் மூலம் கவர்ந்துவிடுவர். இருந்தாலும் காதல் என்று வரும்போது காரணமில்லாமல் இவர்களின் காதல் நிராகரிக்கப்படும். மனஅழுத்தம் அதிகம் உண்டு. இறுக்கமான முகத்துடன் காணப்படுவதால் இவர்கள் ரொமான்ஸ் பக்கமே செல்லமாட்டார்கள்.
ஆரஞ்சு நிற உடை:
இவர்கள் இயற்கையிலேயே கூச்ச சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். எளிதில் எதையும் நம்பிவிடுவார்கள். காதலித்த சில மாதங்களிலேயே நிச்சயதார்த்தத்துக்கு ரெடியாகிவிடுவார்கள். இவர்கள் நிச்சயாதார்த்தம் செய்த பெண்ணிடம் தன் மனதில் உள்ளவற்றை கூறிவிடுவர். பெண்கள் இதற்கு நேர்மாறாக தைரியமாக இருப்பர். எதையும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பர்.
கிரே கலர் உடை :
இவர்களின் மனநிலை எப்போதும் காதலை பற்றி யோசிக்காது. காதலுக்கு எதிராகவே பேசிக்கொண்டு இருப்பர். காதலிப்பவர்களை தூற்றிக்கொண்டே இருப்பர். திருமணமான பின் மனைவியை காதலிப்பர்.
சிவப்பு நிற உடை:
இவர்கள் தீவிர பக்தி பழமாக இருப்பர், எந்நேரமும் கோயிலை சுற்றி வருவர். இவர்களிடம் காதல் விருப்பம் தெரிவித்தாலும் தத்துவ மழை பொழிந்து நிராகரித்து விடுவர். இவர்களை சாமியார்கள் எனலாம்.
வெள்ளை நிற உடை:
இவர்கள் ஆசைப்பட்டதை அடையாமல் விட மாட்டார்கள். வெள்ளை நிறம் பிடிப்பவர்கள் அனைவருக்கும் பிடித்தவர்களாக இருப்பார்கள். பரந்த மனதுடன் உதவுவார். காதலை நன்கு ஆழ்ந்து ரசிப்பார். ஆனால் தப்பித்தவறி மட்டும் காவிச்சட்டை பக்கத்தில போய்டாதீங்க அம்புட்டுதான்.
அப்புறமென்ன உங்களுக்கு பிடிச்ச கலர் சட்டையை போட்டுகிட்டு கிளம்பவேண்டியதுதானே....
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu