Uses of Samai Rice- சத்துக்கள் நிறைந்த சாமை அரிசியின் பயன்கள் குறித்து தெரிஞ்சுக்கலாமா?

Uses of Samai Rice- சத்துக்கள் நிறைந்த சாமை அரிசியின் பயன்கள் குறித்து தெரிஞ்சுக்கலாமா?
X

Uses of Samai Rice- சாமை அரிசியில் சாதம் செய்து சாப்பிட்டு இருக்கறீங்களா? (கோப்பு படம்)

Uses of Samai Rice- சாமை அரிசி சத்துக்கள் நிறைந்தது. அந்த காலத்தில் சாமை அரிசி சமைத்து சாப்பிட்ட மக்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்தனர். சாமை அரிசி தரும் பயன்களை தெரிந்துக்கொள்வோம்.

Uses of Samai Rice- சத்துக்கள் நிறைந்த சாமை அரிசியின் பயன்கள்!

நம் பாரம்பரிய சிறுதானியங்களில் சுவையும் சத்தும்மிக்க சாமை அரிசியை பற்றி தெரிந்துகொள்வோம்.

சாமை அரிசியில் இயற்கையான சுண்ணாம்புச் சத்து இருக்கிறதால் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல பலனளிப்பதாக இருக்கிறது. எலும்புகளுக்கு ஊட்டமளிக்க இது உதவுகிறது. சாமை அரிசியில் செய்யப்படும் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும்.


சாமையின் வரலாறு

சிறுதானிய தாவரங்களில் மிகவும் சிறப்புவாய்ந்த தானியமான சாமை, இந்தியாவில்தான் அதிகமாக விளைகிறது. இதை ஆங்கிலத்தில் 'Little Millet' என்று சொல்வார்கள். சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே தெற்கு ஆசியக் கண்டத்தில் தோன்றியதாகவும் சொல்லப்படுகிற சாமை, பழங்காலத்திலேயே தமிழர்களுடைய உணவாக இருந்ததாக பண்டைய கல்வெட்டுகளிலேயும், தொல்பொருள் ஆராய்ச்சிகளிலேயும் சொல்லப்பட்டிருக்கிறது.

பசையம் இல்லாத உணவுகள் தானியங்கள். சிறிய தினையான சாமை ஆரோக்கியத்தை அள்ளித்தரக்கூடியது. Panicum sumatrense அல்லது Little millet என்று அழைக்ககூடிய இவை அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிறந்த உணவாக இருக்கும். சைவ உணவு எடுப்பவர்களுக்கு புரதம் நிறைந்த இதை தினசரி ஒரு வேளையேனும் எடுக்கலாம். சாமை எளிதாக ஜீரணிக்க கூடியவை. கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிரம்ப கூடும். இந்த சாமை அரிசி நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

சாமையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்​

சாமை புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. 100 கிராம் சாமையில்..

புரதம் -9.7 கிராம்

நார்ச்சத்து -7.6 கிராம்

கார்போஹைட்ரேட் -60.9 கிராம்

கொழுப்பு -5.2

கால்சியம் -17.மி.கி

இரும்பு -9.3 மி.கி

தயமின் -0.30 மி.கி

நியாசின் -3.2 மி.கி

ரைபோஃப்ளேவின் -0.09 மி.கி

கார்போஹைட்ரேட் அதிகம் என்றாலும் இது எளிய சர்க்கரை கொண்ட கார்போஹைட்ரேட் உணவும் கூட. இதில் வைட்டமின் பி, வைட்டமின் பி 6, ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது.

​சர்க்கரை நோயாளிகள் சாமை சாப்பிடலாமா?​

சர்க்கரை நோய் இன்று பெரும்பாலோரை ஆக்கிரமித்துள்ளது. எப்போதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உணவு முறையில் கவனம் செலுத்துவது அவசியம்.சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து மிகுந்த சாமையை எடுத்து கொள்ளும் போது இது செரிமானத்தை மெதுவாக்கி இன்சுலின் சுரப்பை தூண்டி விட செய்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்திருக்கவும் செய்கிறது. ஆராய்ச்சியின் படி சிறிய தினை செதில்கள் கூட 52.11 என்னும் மிதமான கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்ட உணவுகள் பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.


பெண்களுக்கு சாமை அரிசி நன்மைகள்

பாரம்பரியமான உணவு பழக்கங்களை மேற்கொண்டவர்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் பிரச்சனைகள் அதிகம் இல்லை. தற்போது ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பெண்கள் மாதவிடாய் கோளாறுகள், அதிக உதிரப்போக்கு அல்லது குறைந்த உதிரபோக்கு, அதிக வலி, உடல் சோர்வு, உடல் பலவீனம் போன்ற பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.

போதுமான ஊட்டச்சத்து சரியான முறையில் சேரும் போது மாதவிடாய் கோளாறுகள் உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதோடு கருப்பை ஆரோக்கியமும் வலுப்படும். கருப்பை உயிர் சக்தி தந்து பெண்களுக்கு இரத்த சோகை இல்லாமல் செய்வதில் சாமை தனித்துவமானதாக விளங்குகிறது.


விந்தணுக்களின் ஆரோக்கியத்தை பலப்படுத்தும் சாமை​

ஆண்களும் பெண்களுக்கு இணையான குழந்தைப்பேறு பிரச்சனையை எதிர்கொள்வது அதிகரித்து வருகிறது. ஆண் மலட்டுத்தன்மையில் முக்கிய காரணம் விந்தணுக்கள் பிரச்சனை. ஆண்களுக்கு விந்தணுக்கள் உற்பத்தி சீராக இருக்கவும் விந்தணுக்கள் தரம் மற்றும் வீரியம் குறையில்லாமல் தடுக்கவும் வாழ்க்கை முறையோடு உணவு முறையும் அவசியம். ஆண்கள் உணவு முறை மாற்றங்களில் இதை சேர்த்து வந்தாலே போதும். விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். அவை பாதிக்காமல் தடுக்கும்.

எலும்பு வலிமைக்கு சாமை எப்படி உதவுகிறது?

சாமையில் இயற்கையாகவே சுண்ணாம்பு சத்து உள்ளது. புரதமும் நிறைந்துள்ளது. இது எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது. தளர்ச்சியை போக்கி எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்க செய்கிறது. முதுகெலும்பை பலப்படுத்துகிறது.

இதில் உள்ள புரதம் உடல் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் எலும்புகளின் வலுவுக்கு உதவுகிறது. உடல் தசைகள் வலுவாக்குகிறது. இது எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளையும் வலிமையாக்க செய்கிறது. எலும்பு முறிவு பிரச்சனைக்கு ஆளானவர்கள் உணவில் சாமையை சேர்த்து வந்தால் தசை வலிமைகள் பெறுவதோடு எலும்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.


​இரத்த சோகை தடுக்கும் சாமை

சிறுதானியங்களில் சிறந்தது சாமை என்று சொல்வதற்கு இதுவும் ஒரு காரணம். இதில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த சோகை வராமல் காக்கப்படுகிறது. ஒரு கப் சாமை நாள் ஒன்றுக்கு நமக்கு தேவையான இரும்புச்சத்து தேவையில் மூன்றில் ஒரு பங்கு கொடுத்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

இரும்புச்சத்து அதிகம் உள்ள கேழ்வரகு, கம்பை காட்டிலும் அதிகமாகவே இரும்புச்சத்தை சாமை கொண்டிருக்கிறது. இளவயதினர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என அனைவரும் சாமை எடுத்துகொள்ளும் போது இரத்த சோகை அபாயத்திலிருந்து பாதுகாக்கப்படலாம்.


​மலச்சிக்கலை போக்க கூடியது சாமை

மலச்சிக்கலுக்கு காரணம் உணவும் கூட. ஆரோக்கியமான உடலை கெடுக்க மலச்சிக்கல் ஒன்றே போதுமானது என்று சொல்லலாம். மலச்சிக்கல் வராமல் தடுக்கவும், வந்தால் அதை போக்கவும் மருந்துகளை நாடுபவர்கள் உணவு முறையில் அதை சரி செய்வது பாதுகாப்பானது. அந்த வகையில் உணவில் சாமையை எடுத்துகொள்ளலாம்.

இது எளிதில் செரிமானத்தை உண்டாக்கும். இது அதிக நார்ச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளதால் மலச்சிக்கல் தடுப்பதோடு உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றவும் செய்யலாம்.

Tags

Next Story
ai in future agriculture