முருங்கைக் கீரையை வைத்து இரண்டு புதுவிதமான ரெசிபிகள்!

முருங்கை கீரை (கோப்பு படம்)
Two new recipes with drumstick greens- முருங்கைக் கீரையை வைத்து இரண்டு புதுவிதமான ரெசிபிகள்!
முருங்கைக் கீரையின் ஆரோக்கிய நன்மைகள் நாம் அனைவரும் அறிந்தததே. இதனைக் வைத்து செய்யப்படும் ஆரோக்கியமான இரண்டு ரெசிபிகளை பார்க்கலாம்.
வெந்தயக் கீரை, கொத்தமல்லி, கருவேப்பிலை போலவே முருங்கைக் கீரையிலும் ஏராளமான மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன. பலருக்கும் விருப்பமான முருங்கைக்காயில் வைட்டமின் C, இரும்புச்சத்து, நார்ச்சத்து கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய பல ஊட்டச்சத்துக்கள் முருங்கை மரத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
ஆனால் பெரும்பாலானவர்களுக்கு முருங்கைக் கீரை பிடிப்பதில்லை. இருப்பினும் ஆரோக்கியம் நிறைந்து இந்த இலைகளை ஒதுக்கி விட முடியாது. இதனைக் கொண்டு சுவை மிகுந்த இரண்டு ரெசிபிகளை செய்ய கற்றுக் கொள்வோம்.
முருங்கை கீரை டீ
பொடிக்கு பதிலாக, ஃபிரெஷான முருங்க இலையை கொண்டு இந்த டீ ரெசிபியை தயார் செய்யலாம். சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை கீரையை வைத்து சுலபமாக இந்த டீயிணை தயார் செய்திடலாம்.
தேவையான பொருட்கள்
முருங்கை இலை 10
இலவங்க பட்டை - 1 அங்குலம்
இஞ்சி - 1 சிறிய துண்டு
பொடித்த வெல்லம் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
செய்முறை
டீ செய்வதற்கு முதலில் இஞ்சி மற்றும் முருங்க இலைகளை சுத்தம் செய்த தயாராக வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீருடன் இலவங்கப்பட்டை நறுக்கிய இஞ்சி மற்றும் முருங்கை இலை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதிக்கும் பொழுது பொடித்த வெல்லம் சேர்க்கவும்.
வெல்லம் கரைந்த பிறகு இதனை வடிகட்டி, சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பரிமாறலாம்.
சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த இந்த முருங்கை இலை டீயை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
முருங்கைக் கீரை பரோட்டா
எப்போதும் செய்யும் சப்பாத்தி அல்லது பரோட்டா வகைகளிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு ஆரோக்கியமான இந்த முருங்கை கீரை பரோட்டாவை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
முருங்கை இலை - 1 கப்
இஞ்சி - 1 அங்குலம்
பச்சை மிளகாய் - 1
கோதுமை மாவு - 2 கப்
ஓமம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
ஒரு அகண்ட பாத்திரத்தில் கோதுமை மாவுடன் ஓமம், உப்பு மற்றும் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இதனுடன் சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள இஞ்சி பச்சை மிளகாய் மற்றும் முருங்கை கீரையை சேர்க்கவும்.
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
இதிலிருந்து ஒரு சிறிய பகுதியை எடுத்து உருண்டையாக உருட்டி கொள்ளவும்.
உருட்டியே உருடுகளை மெல்லிய பரோட்டாக்களாக தேய்த்து, இருபுறமும் நன்கு வேகவிட்டு சுட்டெடுக்கவும்.
நீங்கள் விரும்பினால் சப்பாத்தி மாவுடன் மிளகாய் பொடி, சீரகப்பொடி , மஞ்சள் பொடி போன்ற மசாலாக்களையும் சேர்த்து செய்யலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu