அதிக சத்துகளை அள்ளித்தரும் சூரை மீன், வாங்க தெரிஞ்சுக்கலாம்

அதிக சத்துகளை அள்ளித்தரும் சூரை மீன், வாங்க தெரிஞ்சுக்கலாம்
X

சூரை மீன் 

அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவான சூரை மீன் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க

Tuna in Tamil. சூரை மீன், இது கானாங்கெளுத்தி எனும் வகையை சேர்ந்தது. சூரை மீன் இனம் மிக வேகமாக நீந்தக்கூடிய மீன் வகையை சேர்ந்தது. சூரை மீன் ஆசிய கடல் பகுதியில் வாழும் மீன் வகையாகும். இது இந்தியாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. இந்த மீனில் அதிக அளவு புரதச்சத்தும் குறைந்த கொழுப்பு சத்துக்களும் உள்ளது.

சூரை மீன் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகம் வரை செல்ல கூடிய திறன் கொண்டது. சூரை மீன்களில் (Tuna Fish) மொத்தம் 15 இனங்கள் உள்ளன.

வளரும் குழந்தைகளுக்கு இந்த மீன் சிறந்த உணவாகும். குழந்தைகளின் ஹைப்பர் ஆக்டிவிட்டி குறைபாட்டையும், நடத்தைக் கோளாறுகளையும் சரி செய்யும் DHA என்ற வேதிப்பொருள் இந்த மீனில் அபரிமிதமாக இருக்கிறது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது.


பொதுவாக மன அழுத்தத்தை குறைக்க சூரை மீன் உதவுகிறது. மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ஏற்படுகிற மன அழுத்தத்தை விரைவில் குறைக்கிறது. இந்த சூரை மீன்களில் அதிகப்படியான ஒமேகா-3 உள்ளதால் இதில் அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதோடு கண் பிரச்சனை, மார்பக புற்றுநோய் வராமல் இருக்க பெரும் உதவியாக இருக்கிறது. வெப்பம் அதிகம் இருக்கும் கடல் பகுதியில் சூரை மீன் உயிர் வாழும். இதனை மக்களின் இறைச்சி தேவைக்காக பிடிக்கப்படுகின்றது.

சூரை மீனில் 136 கலோரிகள், 10.4 கிராம் நீர்ச்சத்து, 3.79 கிராம் நைட்ரஜன், 23.7 கிராம் புரோட்டின், 4.6 கிராம் கொழுப்பு, 1.0 கிராம் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம், 3.0 மி.கிராம் கொலஸ்ட்ரால், 26 மைக்ரோ கிராம் மற்றும் வைட்டமின் ஏ, டி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

சூரை மீனை வாரம் இரு முறை சாப்பிட்டால் வந்தால் உடல் நன்கு வலுவடைந்து நாம் ஆரோக்கியமாக வாழ வழி வழிவகுக்கும்.

சூரை மீன் புரதச்சத்து மிகுதியாக உள்ளதால் பக்கவாதம் பிரச்னைகளுக்கு தீர்வாக உள்ளது. மேலும் இந்த மீனில் ஒமேகா-3 – கொழுப்பு அமிலம் போன்றவை அதிகமாக உள்ளது. மேலும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

சூரை மீனை வாரம் இரு முறை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. இந்த மீனில் வைட்டமின் பி இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. சூரை மீனில் அதிக அளவு வைட்டமின் பி இருப்பதால் எலும்பு முறிவு போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

Tuna in Tamil சூரை மீன் சாப்பிட்டு வந்தால் குறைந்த ரத்த அழுத்தம் வராமல் சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அது மட்டும் இல்லாமல் மலச்சிக்கல் மற்றும் ஜீரணக் கோளாறுகள் வராமல் தடுக்கிறது.

சூரை மீன்களில் இருக்கும் நீல நிற துடுப்பு மற்றும் பெரிய கண்கள் உடைய வகை மீன் நாம் உடலுக்கு தீமைகளை விளைவிக்கின்றன. வாளை மீனுக்கு அடுத்து அதிகளவு பாதரசம் உள்ள மீன் இதுவாகும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!