திருவாரூர் மாவட்டத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள் என்னென்ன தெரியுமா?

திருவாரூர் மாவட்டத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய  சுற்றுலாத் தலங்கள் என்னென்ன தெரியுமா?
X

Tourist Places in Thiruvarur District- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் ( கோப்பு படம்)

Tourist Places in Thiruvarur District- பசுமையான திருவாரூர் மாவட்டத்தில் வியப்பூட்டும் சுற்றுலாத் தலங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

Tourist Places in Thiruvarur District-திருவாரூர் மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒன்பது ஒன்றியங்களையும் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு ஒன்றியத்தையும் சேர்த்து 1997ல் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் சோழ சாம்ராஜ்யத்தின் தலைநரகங்களில் ஒன்றாகவும் இருந்துள்ளது. முதலாம் குலோத்துங்க சோழ மன்னனின் காலத்தில் திருவாரூர் தலைநகராமாகவும் சைவ வளர்ச்சி மையமாகவும் திகழ்ந்துள்ளது.

வரலாற்று ரீதியாகவும் திருவாரூர் சமயம், கலை மற்றும் அறிவியில் ஆகிய துறைகளில் சிறந்தவர்களின் புகழிடமான திகழ்ந்துள்ளது. மாவட்டத்தில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் விவசாய தொழிலில் ஈடுபடுகின்றனர். பசுமை நிறைந்து காணப்படும் இம்மாவடத்தில் சுற்றிப் பார்ப்பதற்கு ஏராளமான ஆன்மிக தலங்களும், பொழுதுபோக்கு அம்சம் கொண்ட இடங்களும் உள்ளன.


தியாகராஜசுவாமி கோயில்

திருவாரூர் மாவட்டம் மடப்புரத்தில் அமைந்துள்ள இந்த கோயில் மிகவும் பழமையான மற்றும் பிரமாண்டமான கோயிலாகும். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான ஆழித் தேர் இந்த கோயிலுக்கு சொந்தமானது. சில படங்களின் பாடல் வரிகளில் திருவாரூர் தேரழகு இடம்பெற்றிருக்கும். அதற்கு ஆழித் தேர் தான் காரணம். மார்ச் மாதத்தில் ஆழித் தேர் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த கோயில் ஒன்பது ராஜகோபுரங்கள், 80 விமானங்களை உள்ளடக்கியது.

திருகொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில்

திருவாரூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. சனி பகவானால் உண்டாகும் அனைத்து தோஷங்களும் இத்தலத்திற்கு சென்று வழிபட்டால் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

பிறவி மருந்தீஸ்வரர் கோயில்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. பெளர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் இங்கு வழிபாடு செய்தால் துன்பங்கள் நீங்கி வளமான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.


உதயமார்த்தாண்டபுரம் பறவையகம்

இங்கு ஊதா மூரன் மற்றும் திறந்தவெளி கொக்கு, இந்திய ரீஃப் ஹீரோன், வெள்ளை-கழுத்துப் பற்கள், சாம்பல்-மண், குட், நைட் ஹெரோன், ஊதா-ஹெரோன், சிறிய காரோமொரான்ட், ஸ்பூன் பில் மற்றும் டர்டர் போன்ற பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்லும். திருவாரூரில் இருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில் இந்த பறவையகம் அமைந்துள்ளது.

வடுவூர் பறவையகம்

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் வடுவூரில் பறவை சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பறவையகம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருந்து பல வெளிநாட்டு பறவைகளை ஈர்க்கிறது.


முத்துப்பேட்டை சதுப்புநில காடுகள்

முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சதுப்பு நிலக்காடுகளாகும். இது திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இடையில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 119 கிலோ மீட்டர் ஆகும். இது பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளைவிட பத்து மடங்கு பெரியது. வனத்துறையின் அனுமதியை பெற்று தனியார் மீன்பிடி படகுகள் மூலம் அலையாத்தி காடுகளை சுற்றிப் பார்க்கலாம்.

கூத்தனூர் சரஸ்வதி கோயில்

தென் இந்தியாவிலேயே சரஸ்வதி தேவிக்கு அமைக்கப்பெற்ற ஒரே கோயில் கூத்தனூரில் உள்ளது. விஜயதசமி இந்த கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படும்.

Tags

Next Story