Today Thoughts in Tamil இன்றைய சிந்தனை துளிகள்

Today Thoughts in Tamil  இன்றைய சிந்தனை துளிகள்
X
நம் சிந்தனைகள் தான் நமது செயல்பாடுகளை தீர்மானிக்கும் என்பதால் சிந்தனைகள் நேர்மறையாக இருக்க வேண்டும்

இந்த பதிவில் தன்னம்பிக்கை தரும் இன்றைய சிந்தனை துளிகள் பதிவை காணலாம்.

  • கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி வருத்தப்பட வேண்டாம்.. அந்த வாய்ப்பை பயன்படுத்தி நிம்மதியாகக் குளித்து விட்டு வா.
  • புத்தகம் இல்லாத வீடு – ஆன்மா இல்லாத கூடு
  • எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு உண்டு.
  • தன் குற்றம் மறப்பதும் பிறர் குற்றம் காண்பதும் முட்டாள்தனத்தின் விஷேட குணம்.
  • ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை.
  • எவருக்கும் நீங்களாக போய் அறிவுரை சொல்லாதீர்கள்.. நீங்கள் அழைக்கப்பட்டால் தவிர எதிலும் தலையிடாதீர்கள்.
  • வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது.. அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமே வேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம்.
  • கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி அதை தாமதப்படுத்துவது.
  • அதிஷ்டம் வீரனை கண்டு அஞ்சுகிறது.. கொலைகளை திணறடிக்கிறது.
  • சிக்கனமாக வாழும் ஏழை.. சீக்கிரம் செல்வந்தனாவான்.
  • வாழ்க்கை ஒரு சங்கீதம்.. அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே தவிர சட்ட திட்டங்களால் அல்ல.
  • மகத்தான சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையால் அல்ல, விடா முயற்சியினால்.
  • விஷயங்களை அறிந்துகொள்ளும் ஆர்வமுடையவன் அறிவாளியாகிறான்.
  • வெற்றிக்கு திட்டமிடாதவர்கள் தானாகவே தோல்விக்கு திட்டம்போட்டு விடுகிறார்கள்.
  • நேரம் வரட்டும் பல நல்ல செயல்களை ஒரேயடியாகச் செய்துவிடலாம் என்று காத்திருப்பவன் எந்த நேரத்திலும் எதுவும் செய்யமாட்டான்.
  • ஆற்றல் நிறைந்தவனாக இருப்பதைக் காட்டிலும் நேர்மையானவனாக இருப்பது மேலானது.
  • வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பதே, அனைத்து லட்சியங்களுக்குமான இறுதி முடிவு
  • மனிதன் மட்டுமே அழுகையுடன் பிறந்து, புகாருடன் வாழ்ந்து, ஏமாற்றத்துடன் இறக்கின்றான்.
  • நிழலின் குளுமையை இழந்தால் தான் சூரியனின் பிரகாசத்தை அடைய முடியும்.
  • சிக்கனமாக இல்லாமல் யாரும் செல்வந்தராக முடியாது. சிக்கனமாக இருந்தால் யாரும் வறியவராக முடியாது
  • பிரச்சனைகளோடு போராடி அவற்றை வெல்வதுதான் மனிதத் திறமையின் உச்சக்கட்டம்.
  • எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின் மூலம் வாங்கப்படுகிறது.
  • நீ தனிமையாய் இருக்கும் போது வேலையின்றிச் சும்மா இருக்காதே!
  • நீ வேலையின்றிச் சும்மா இருக்கும் போது தனிமையாய் இருக்காதே!
  • வளத்தின் ஒரு கை உழைப்பு. ஒரு கை சிக்கனம்.
  • போர் மனிதர்களை அழிக்கிறது, அதுபோல் ஆடம்பரம் மனிதாபிமானத்தையும், உடலையும், உள்ளத்தையும் அழிக்கிறது.
  • திருமணம் என்பது ஆண், பெண் நட்பு. நம்பிக்கையில்லாமல் நட்பு வளராது. நம்பிக்கையோ நேர்மையில் இருந்து மலர்வது.
  • அறிவில்லாத நேர்மை பலவீனமானது. நேர்மையில்லாத அறிவு ஆபத்தானது.
  • எண்ணங்களைச் சம்பவமாக்குவது அரசியல்.
  • நிகழ்காலத்தில் கவனம் எடுத்துக்கொள். எதிர்காலம் தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும்.

Tags

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை