வீடுகள் எப்போதும் சுத்தமாக பளிச் என இருக்க வேண்டுமா?

வீடுகள் எப்போதும் சுத்தமாக பளிச் என இருக்க வேண்டுமா?

Tips to keep the house clean- வீடுகளை தூய்மையாக பராமரித்தல் ( மாதிரி படம்)

Tips to keep the house clean- வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள பல வழிகள் உள்ளன. அதில் உங்களுக்கு உதவும் சில குறிப்புகளை தெரிநதுக் கொள்ளலாம்.

Tips to keep the house clean- அனைவரும் தங்களது வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளவே விரும்புவர். இது ஒரு மிகச் சிறந்த பழக்கமாகும். இப்பழக்கத்தைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமாயின் வீட்டில் இருக்கும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும். வீடு சுத்தமாக இருக்க பெண்கள் மட்டுமே முற்பட வேண்டுமா என்ன! வீட்டில் இருக்கும் ஆண்களும் வீட்டின் சுத்தத்தை மனதில் கொண்டு சில செயல்களை செயலாற்றுவது முக்கியம்.

எடுத்த பொருளை எடுத்த இடத்திலேயே வைத்தல்:

பொதுவாக வீட்டில் பலருக்கும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. அது என்னவென்றால் நாம் பயன்படுத்தும் ஒரு பொருளை எடுத்த இடத்திலேயே வைக்கும் பழக்கம் பலருக்கும் இருக்காது. இது மாதிரியான செயல்கள் பொதுவாக காலை நேரங்களில் தான் அதிகமாக நடக்கும். காலையில் வேலைக்குச் செல்லும் நபர்கள், பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் கிளம்பும் அவசரத்தில் எடுத்த பொருளை அதனிடத்தில் வைக்க மறந்து விடுகின்றனர். நீங்கள் எந்தப் பொருளை எடுத்துப் பயன்படுத்தினாலும், அந்தப் பொருளை அந்த இடத்திலேயே வைத்து விட்டால் வீடு எப்போதும் சுத்தமாக இருக்கும். ஆனால் இப்பழக்கத்தை பலரும் பின்பற்றாமல் இருப்பதால், இதனை சரிசெய்வதே வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தனி வேலையாகி விடும்.


சுத்தமான தரை:

வீட்டில் சிலரின் கவனக்குறைவால் சாம்பார், டீ மற்றும் தண்ணீர் தரையில் கொட்ட வாய்ப்புள்ளது. சுத்தத்தை விரும்புபவர்களுக்கு இது பிடிக்காது. இதனால் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய நிலை வரும். ஆகையால் அனைவரும் தண்ணீர் பொருள்களை கொஞ்சம் கவனமுடன் கையாள வேண்டும்.

திட்டமிடுதல்:

ஒரு நாளில் வீட்டை எத்தனை முறை சுத்தம் செய்ய வேண்டும்; துணிகளை எந்த நாளில் துவைக்க வேண்டும் என திட்டமிட்டு செய்தால் வீடு சுத்தமாக இருக்கும்.

தனி இடம்:

வீட்டில் சில பொருள்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தால் வீடு சுத்தமாகவே இருக்காது. வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி இடங்களை ஒதுக்கீடு செய்வதன் மூலம் வீட்டின் சுத்தத்தை உறுதிப்படுத்த முடியும்.

அன்றாடம் சுத்தம் செய்தல்:

தினசரி பயன்படுத்தும் பொருள்களை அதன் பயன்பாடு முடிந்ததும், அப்போதே சுத்தம் செய்து வைத்து விட்டால் அழுக்கு மற்றும் தூசுகளைத் தவிர்த்து விடலாம்.


இடத்தை அடைத்திருக்கும் பொருள்கள் :

வீடு பெரிதாக இருந்தாலும் தேவையற்ற சில பொருள்கள் வீட்டை அடைத்திருக்கும். இப்பொருள்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்தினால் வீடு சுத்தமாக இருக்கும்.

குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்:

குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே சுத்தத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, அவர்களைப் பக்குவப்படுத்த வேண்டும். அப்போது வருங்காலத்தில் அவர்களும் தங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டுவார்கள்.

Tags

Next Story