Tips for glowing face- முகம் பளபளப்பாக இருக்க பெண்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இதுதான்!

Tips for glowing face- பெண்கள் தங்களது முகத்தை அழகாக பராமரிப்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம் (கோப்பு படம்)
Tips for glowing face - 30 வயதிற்குப் பின்னதாக பெண்களுக்கு முக சுருக்கம், சோர்வு போன்றவை ஏற்படுவது இயல்பான ஒன்று.
ஆண்கள், பெண்கள் என யாராக இருந்தாலும் அழகை விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள். குறிப்பாக பெண்கள் தங்களுக்குத் தெரிந்த சில அழகுக்குறிப்புகளைப் பயன்படுத்தி முகத்தைப் பளபளப்பாக வைத்திருக்க முயற்சி செய்வார்கள். ஆனால் இவை அனைத்துக் காலக்கட்டங்களிலும் எடுபடாது. 30 வயதிற்குப் பிறகு சருமத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். தோலின் துளைகள் பெரிதாகத் தொடங்கும் என்பதால் சருமம் தளர்வான தோற்றத்துடன் இருக்கும். இதை அப்படியே விட்டுவிடும் பட்சத்தில் முகத்தில் அதிக சுருக்கங்கள் வர ஆரம்பித்து வயதான தோற்றத்தைப் பெறக்கூடும். முகம் பளபளப்பு தன்மையை இழக்க நேரிடும். எனவே முறையான சரும பராமரிப்புகளைப் பின்பற்றினாலே பெண்கள் எப்போதும் தங்களுடைய முகத்தைப் பளபளப்பாக வைத்திருக்க உதவியாக இருக்கும்.
பெண்களுக்கான சரும பராமரிப்பு
தண்ணீர் குடித்தல்:
எந்த பருவக்காலங்களிலும் உங்களது சருமம் வறண்டு போகாமல் இருக்க வேண்டும் என்றால், சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். நமது உடலில் 70 சதவீதம் வரை நீர் தேவை என்பதால் அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும். இது தவிர உங்களது சருமத்திற்கு கற்றாழை ஜெல், ரோஸ் வாட்டர் போன்றவற்றையும் பயன்படுத்தவும்.
மாய்ஸ்சரைசர்:
பெண்கள் தங்களுடைய சருமம் எப்போதும் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் சருமம் வறண்டு விடுவதோ, பல சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதற்கு மாய்ஸ்சரைசர் சிறந்த தீர்வாக அமையும். இது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைத்து முக சுருக்கங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
வைட்டமின் சி:
முதுமைக்கு எதிராக பெண்களுடன் போராடுவதில் வைட்டமின் சி முக்கியமான ஒன்றாக உள்ளது. இரவில் நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன்னர் வைட்டமின் சி உள்ள சீரம், ஜெல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இது சருமத்தை எப்போதும் இறுக்கமாக வைத்திருக்க உதவுகிறது.
ஆவி பிடித்தல்:
பெண்கள் அனைவராலும் ப்யூட்டி பார்லர்களுக்குச் சென்று தங்களை அழகுப்படுத்திக் கொள்ள முடியாது. வீட்டில் இருந்தப்படியே உங்களது சருமத்தைப் பாதுகாக்க முடியும்.
நொச்சி, வேப்பிலை, குப்பைமேனி போன்ற மூலிகைகளை நன்றாக கொதிக்க வைத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்கும் போது சருமத்தில் பாக்டீரியாக்களை அழிக்கிறது. சருமத்தைப் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ளமுடியும். வாரத்திற்கு இருமுறைப் பயன்படுத்தினால் சிறந்ததாக அமையும்.
முகப்பரு பிரச்சனை:
பெண்களின் அழகைக் கெடுப்பதில் முகப்பருக்களுக்கும் பங்கு உண்டு. இதைக் கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை தூள் எலுமிச்சை கலந்த பேக், மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த பேஸ் பேக் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
குளிர் மற்றும் வெயில் காலங்களில் வெளிலில் சென்றாலும் நீங்கள் சன்ஸ்கிரீனை உபயோகிப்பது உங்களது சருமத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu