அதிகசுவைுயும், அற்புத ஊட்டச்சத்துள்ள ஜிலேபி மீன்: சாப்பிட்டுள்ளீர்களா?.....
Tilapia Fish in Tamil Name
Tilapia Fish in Tamil Name
திலாப்பியா என்று அழைக்கப்படும் மீன் வேறு விதங்களிலும் தமிழில் அழைக்கப்படுகின்றது. திலேப்பியா, சிலேபி, சிலேபிக் கெண்டை முதலானவை இம் மீனின் வேறுபெயர்களாகும்.திலாப்பியா ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து உலகெங்கும் கொண்டு செல்லப்பட்ட உயிரினமாகும். ஆப்பிரிக்க பழங்குடிகள் ஒன்றில் மீன் என்பதற்கு 'தில்' என்ற ஒலிக்குறிப்பு இருந்ததாகவும், அதுவே திலாப்பியா என்ற சொல்லுக்கு மூலம் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.
ஆப்பிரிக்காவில் 180 கோடி ஆண்டுகள் வயது கொண்ட உயிரினப் படிமங்களில் திலாப்பியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா, மற்றும் மத்திய கிழக்குப் பிரதேசங்களில் திலாப்பியா தோன்றி வாழ்ந்தது என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொசாம்பிகு திலாப்பியா என்னும் வகை இந்தோனேசியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து மலேசியாவிற்கும், இலங்கைக்கும், இந்தியாவிற்கும் கொண்டு செல்லப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் எகிப்தின் மன்னரால் நைல் திலாப்பியா ஜப்பானின் மன்னருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவற்றின் குஞ்சுகள் தாய்லாந்து மன்னருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு, அவரது சித்ரலாதா அரண்மனைக் குளத்தில் வளர்க்கப்பட்டன.
சிக்கிலிட்டுகள் என்று வழங்கப்படும் குடும்பத்தை சேர்ந்த மீனினம்தான் திலாப்பியா. ஒடுங்கிய உடல்வாகும், முட்டையிட்டுப் பொரித்த மீன்குஞ்சுகளை தாய் மீனோ, தந்தை மீனோ, அல்லது இரண்டுமோ இணைந்து கவனத்துடன் காப்பதும் இக் குடும்பத்தின் சிறப்பம்சங்களாகும்.உலகில் சுமார் 50 திலாப்பியா மீன் இனங்கள் (species) உள்ளன. அவற்றை மூன்று தொகுதிகளாக (genus) பிரிக்கலாம்:ஓரியோக்ரோமிஸ், சாராத்தெரடான்,திலாப்பியா ஆகும்.
சிவப்பு ஜிலேபி கெண்டை மீன் ... இந்த வகை மீன்களில் 50 வகையுள்ளதாம். (கோப்பு படம்)
ஜிலேபி கெண்டைமீன்
பொதுவாகவே மீன்களில் அதிக புரோட்டீன் சத்து உள்ளது என்பதால் இதனை பலரும் விரும்பி சாப்பிடுவர். ஆனால் ஒவ்வொரு மீனுக்கும் ஒவ்வொரு சத்துகள் உள்ளன. அந்த வகையில் திலோபியா என்று சொல்லக்கூடிய ஜிலேபி கெண்டை மீனில் நமது ஆரோக்யத்துக்கு தேவையான அற்புத ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளன. இது அதிக சுவை கொண்டதும்கூட.
இவ்வகை மீன்கள் வெள்ளை நிறத்தில் காணப்படும். ஜிலேபி ருசி போல இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்ததாம். இருந்தாலும் பலரும் இதனை வாங்கி சமைத்து விரும்பி உண்ணுவதுதான் இதன் சிறப்பு. கடல் கோழி என்ற பட்டப்பெயரும் ஜிலேபி கெண்டை மீனுக்கு உண்டு.
கடல்வாழ் உயிரினங்களைச் சமைப்பவரிடம் இந்த ஜிலேபி கெண்டை மீன் பற்றி கேட்டால் அவருக்கு அத்துப்படியாகவே தெரியும். சமையலில் சுவையைக்கூட்டவும்,மேலும் பல உணவுகளைத் தயாரிக்கவும் இந்த மீன் பயன்படுகிறது.
பேக்கிங் செய்வதற்காக ரெடி செய்யப்பட்டுள்ள ஜிலேபி கெண்டை மீன் (கோப்பு படம்)
ஜிலேபி கெண்டை மீன்
இந்த வகை மீன்களில் கடல் உணவுகளைப் போலவே ஊட்டச்சத்துகள் மிகுந்து காணப்படுகின்றன. நம் உடலுக்குதேவையான வைட்டமின் பி12 ,நியாசின், வைட்டமின் பி6,மற்றும் பாந்தேனிக் அமிலம் போன்ற அத்யாவசிய வைட்டமின்கள் மற்றும்ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. இதனால்தான் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப்பெண்கள் ஆகியோர் வாரம் 12 அவுன்ஸ் வரை இந்த மீனைச்சேர்த்துக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனவே அனைவரும் ஜிலேபி கெண்டை மீனை உண்பதால் பயனடையலாம்.
இதயத்துக்கு நல்லது
இந்த வகை மீனைச் சாப்பிடுபவர்களுக்கு இம்மீனில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மாரடைப்பு , பக்கவாதம், மற்றும் பெருந்தமனி தடிப்பு அழற்சி ஆகிய பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கின்றன.அத்யாவசிய கொழுப்பு அமிலங்கள் இதய அமைப்பின் ஆரோக்யத்தில் மிகப் பெரும் முக்கிய பங்குவகிக்கிறது. இந்த மீன் உங்கள் இதயத்திற்கு நன்மை செய்வதோடு இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளைக்கும் நன்மை பயக்க கூடிய ஒன்றாக உள்ளது. அவை அதிகமான நரம்பியல் செயல்பாடுகளுடன் தொடர்புடையதாக உள்ளன. மேலும் டிமென்சியா போன்ற மன நோயில் இருந்து பாதுக்காப்பதில் இது சிறப்பாக பங்காற்றுகிறது.
எடைப்பராமரிப்பு
நம்மில் பலர் இன்றளவில் அதிக உடல்ப ருமன் நோயால் சிரமப்பட்டு வருகின்றனர். இதனைக் குறைக்க என்ன? என்ன-? உடற்பயிற்சிகள், மற்றும் அதிக செலவு செய்து வருகின்றனர். இதுபோன்றவர்களுக்கு இந்த மீன் நல்ல உணவாக இருக்கும். இதில் ஒருவிசேஷம் என்னவென்றால் குறைந்த அளவு இதனைச் சாப்பிட்டாலே அதிகம் சாப்பிட்டது போன்ற திருப்தி ஏற்பட்டுவிடும். இவ்வகை மீனில் புரதச்சத்துகள் அதிகம் உள்ளது. கலோரிகள் மற்றும் கொழுப்பு இரண்டும்குறைவாக உள்ளதால் சால்மன் மீனுக்கு மாற்றுஉணவாகவும்இதனை உட்கொள்ளலாம்.
மனிதர்களாகிய நம் அனைவருக்கும் எலும்பு மிகவும் முக்கியமானதொன்றாகும். அந்த வகையில் இவ்வகை மீன் உணவுகளில் பாஸ்பரசின் அளவு அதிகம் உள்ளதால் இவை எலும்புகளின் ஆரோக்யத்தில் அதிகம் பயனளிப்பதாக உள்ளது.நம் உடல் வளர்ச்சி மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு பாஸ்பரஸ் முக்கியமான கனிமமாகும். பற்கள் மற்றும் நகங்களின் வலுவிற்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் நோயைத் தடுக்க உதவும்.
நம் உடலின் உள்ள உறுப்புகளில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தினைக் குறைப்பதற்கு செலினியம் மிக உதவிகரமாக உள்ளது. அந்த வகையில் ஜிலேபி கெண்டைமீனில் இது அதிகம் உள்ளதால் நம் உடல் ஆக்சிஜனேற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது.
புற்றுநோய் உருவாவதற்கான அபாயங்களை இது குறைக்கிறது. இது உடலில் ரத்த வெள்ளையணுக்கள் செயல்ப்பாட்டை அதிகரிக்கிறது. மேலும் நோயெதிர்ப்பு அமைப்பை நச்சுக்களில் இருந்து இது பாதுக்காக்கிறது. மேலும் தைய்ராய்டு சுரப்பிகளில் ஹார்மோன் செயல்பாட்டை ஒழுங்குப்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
பொட்டாசியம் ஒரு எலக்ட்ரோலைட் என்பதால் நம் உடலிலுள்ள திரவங்களின் சமநிலையினை பாதுகாப்பாக நிர்வகிக்க உதவுகிறது. மூளை, நரம்பு உள்ளிட்டவைகளின் செயல்பாடுகளுக்கு பொட்டாசிய சத்தானது மிகவும் துணையளிக்கிறது. இந்த சத்து இவ்வகை மீனில் அதிகம்உள்ளது.
இதுபோல் பலவிதத்திலும் நம் ஆரோக்யத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் சத்துகளைக்கொண்ட ஜிலேபி வகை மீன்களை அவ்வப்போது நாம் உணவாக எடுத்துக்கொள்ளும்போது நமக்குதேவையான சத்துகள் கிடைக்கின்றன.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu