தித்திக்கும் திலோபியா மீன் ஜிலேபி கெண்டை சாப்பிடிருக்கீங்களா?
திலாப்பியா எனப்படும் ஜிலேபி கெண்டை
ஜிலேபி கெண்டை ஒரு பிரபலமான மீன் ஆகும். இந்த ருசியான மீன் பல வீடுகளில் பிரதான உணவாக மாறியுள்ளது. ஜிலேபி கொண்டை மீன் உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளை வழங்கக் கூடியது. மிக அற்புத சுவை கொண்ட இந்த மீனில் அற்புதமான ஊட்டச்சத்துக்களும் ஏராளமாக நிறைந்திருக்கிறது.
உடலுக்கு தேவையான வைட்டமின் பி12, நியாசின், வைட்டமின் பி6, மற்றும் பந்தேனிக் போன்ற சிறப்பு வாய்ந்த ஊட்டச்சத்துக்களை உங்கள் உடலுக்கு வழங்குகிறது.
இதயத்திற்கு ஆரோக்கியம்
ஜிலேபி கொண்டை மீனில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மாரடைப்பு, பக்கவாதம், மற்றும் பெருந்தமனி தடிப்பு, அலர்ஜி நோய்கள், ஏற்படுவதற்கான அபாயத்தை முற்றிலும் குறைத்து விடுகிறது.
மூளை ஆரோக்கியம் மேம்பட
இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஊட்டச்சத்துக்கள் மூளைக்கு பல்வேறு வகையான நன்மைகளை வழங்குகிறது. மேலும் டிமென்ஷியா போன்ற நோய்களில் இருந்து பாதுகாப்பதில் இது சிறப்பாக இருக்கிறது.
உடல் எடையை பராமரிக்க
உடல் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் தவறாமல் இந்த ஜிலேபி கொண்டை மீனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஜிலேபி கொண்டை கொஞ்சம் சாப்பிட்டாலே உங்களை அதிகம் சாப்பிட்டது போல் உணரவைக்கும் மேலும் இதில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது.
கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக உள்ளதால்,சால்மன் மீனுக்கு மாற்றாக இந்த மீனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
எலும்பு ஆரோக்கியம்
எலும்பு ஆரோக்கியத்தில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் புரதச்சத்து மிக முக்கியமானதாக இருக்கிறது, ஜிலேபி கொண்டை மீனில் அதிகம் பாஸ்பரஸ் உள்ளது. இது உங்கள் பற்கள் மற்றும் நகங்கள் கூட வலுவானதாக நீடித்து இருக்க உதவுகிறது.
பொட்டாசியம்
பொட்டாசியம் ஊட்டச்சத்து ஒரு எலக்ட்ரோலைட் ஆகும். இது உங்கள் உடலில் உள்ள திரவங்களின் சமநிலையை மேம்படுத்துகிறது மூளையின் செயல்பாடு உட்பட சரியான நரம்பு மற்றும் தசை செயல்பாடு இருக்கும். ஜிலேபி கொண்டை மீனில் பொட்டாசியம் ஊட்டச்சத்து அதிக அளவில் உள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu