Throgam Quotes In Tamil உடனிருப்பவர்கள் எட்டப்பனாக மாறுவதுதாங்க....துரோகத்திலும் துரோகம்....

Throgam Quotes In Tamil  உடனிருப்பவர்கள் எட்டப்பனாக  மாறுவதுதாங்க....துரோகத்திலும் துரோகம்....
X
Throgam Quotes In Tamil மற்றவர்களை பற்றி அவதுாறான செய்திகளை பதிவிடுதல் இதுபோன்ற கீழ்த்தரமான எண்ணங்கள் உடையவர்கள் எப்போதும் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியாது. ஆனால் இதனைப்போன்றவர்கள் செய்யும் துரோகத்திற்கு பெயர்தான் நம்பிக்கை துரோகம்.

Throgam Quotes In Tamil

வாழ்க்கையில் கஷ்டங்கள் வருவது இயல்பான ஒன்று. அந்த கஷ்டங்கள் அனைத்துமே எதிர்பாராதவை. அதனை தாங்கிக்கொள்ளலாம்.ஆனால் நாம் ஒருவரை நம்பி அவர் நம்மை ஏமாற்றிவிட்டாலோ அல்லது நம்மிடம் பேசிய வார்த்தையில்இருந்து மாறி பேசினாலோ அதுவே நம்பிக்கை துரோகம் என்று சொல்கிறோம்.

Throgam Quotes In Tamil


இந்த நம்பி்க்கை துரோகமானது பெரும்பாலும் பண விஷயங்களில்தான் நடக்கின்றன. கஷ்டம் என்று தானாக முன் வந்து ஒரு சிலர் எப்படியும் நல்ல நிலைக்குவந்தபின்னர் நமக்கு கொடுத்துவிடுவார். ஆனால் அவரும் நல்லநிலைக்கு வந்துவிடுவார். இவர் கேட்டாலும் அந்த காசை அவரிடமிருந்து இவர் பெற முடியாது. இதுவே நம்பிக்கை துரோகம்.

பெரும்பாலானவர்கள் தம் வாழ்க்கையில் கடந்த வந்த பாதையினை மறந்து இக்காலத்திற்கு தகுந்தாற்போல் வேஷம் போட்டு வாழ்கின்றனர். இயற்கை எப்போதும் அழியாது. ஆனால் செயற்கை அழிந்துவிடும். அதுபோல் வேஷம் போடுபவர்கள், துாண்டிவிடுபவர்கள், மற்றவர்களை பற்றி அவதுாறான செய்திகளை பதிவிடுதல் இதுபோன்ற கீழ்த்தரமான எண்ணங்கள் உடையவர்கள் எப்போதும் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியாது. ஆனால் இதனைப்போன்றவர்கள் செய்யும் துரோகத்திற்கு பெயர்தான் நம்பிக்கை துரோகம்.

Throgam Quotes In Tamil


இதுமட்டும் அல்ல கூடவே இருந்து குழி பறிப்பவர்கள் இந்த சமுதாயத்தில் நிறைய பேர் உள்ளனர். இப்போது என்ன தெரியுமா?, காசு... பணம்... துட்டு.. மணி... மணி... என்ற நிலைமையில் யாரை நம்புவது-? யாரை நம்பக்கூடாது? என்பன தெரியவி்ல்லை. டிப்டாப்பாக இருப்பவர்களும் ஏமாற்ற கற்றுக்கொண்டதால் நம்பிக்கைகள் விலைபோய் கொண்டிருக்கின்றன. உடனிருப்பவர்கள் எட்டப்பராக மாறிவிட்டால் அதற்கு என்ன பெயர்? நம்பிக்கை துரோகம்..

இதுபோன்ற துரோகிகளுக்கான அழகிய பொன்மொழிகள் இதோ...

ஏமாற்றுதல் என்பது சிறிய முள், அதைப் பிடுங்கி எறிவது கடினம்.

சரியோ, தவறோ, தைரியமாக எதையும் வெளிப்படையாக பேசக் கூடியவர்கள், யாருக்கும் துரோகியாக மாற மாட்டார்கள்!

துரோகம் ஒரு நாள் துரோகியையும் வேட்டையாடும்..!

நமக்கு வலிப்பது போன்று, மற்றவர்களுக்கும் வலிக்கும் என்ற எண்ணம் இருந்தாலே போதும், துரோகமும் பழிவாங்கும் எண்ணமும் எப்பவுமே நமக்கு தோன்றாது.

காதல்... சிலருக்கு சுகம்... பலருக்கு துரோகம்...

துரோகத்தின் வலியை விட, ஆச்சரியத்தைத் தருகின்றது! எப்படி இவ்வளவு சிறப்பாக, சிரித்து ஏமாற்றுகிறார்கள் என்று!

கோபத்தில் எடுத்தெறிந்து பேசும் சிலருக்கு ஒரு அரிய குணம் உண்டு. என்னவென்றால் அவர்கள் பிறருக்கு துரோகம் செய்யவும் மாட்டார்கள், பிறர் முதுகில் குத்தவும் மாட்டார்கள்.

இன்று நீ எனக்கு செய்த துரோகத்தின் வலி, நாளை நீ நம்பிய ஒருவர், உன்னை ஏமாற்றும் போது அதன் வலி உனக்கு புரியும்!

Throgam Quotes In Tamil


வாழ்க்கையில் நமக்கு அதிக பாடங்களை சொல்லிக்கொடுப்பது, துரோகிகளே!

துரோகிகள் மீது நம்பிக்கை வைத்ததற்காக வருத்தப்படாதே! நீ வைத்த நம்பிக்கை தான் துரோகிகளை உனக்கு அடையாளம் காட்டுகிறது!

நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றுவது சாமர்த்தியம் அல்ல - துரோகம்

பிடிக்கவில்லையெனில் நண்பனுக்கு எதிரியாய் கூட இருந்து விடு!ஆனால், துரோகியாய் நொடியேனும் மாறி விடாதே!

முதல் காதலைக் கூட மற, முதுகில் குத்தியவர்களை மறவாதே!

பிறர்க்கு நீ தரும் துரோகம், உன் வாழ்வில் உனக்கே அடிப்படை வலியாக வந்து நிற்கும்!

முன் பின் தெரியாதவர்கள் கூட முதுகில் குத்துவதில்லை. முகமறிந்த உறவுகள் தான் அதிகம் குத்துகிறார்கள்!

எதிரி முன்னாடி வீழ்ந்தாலும் பரவாயில்லை! ஆனால், துரோகி முன்னால் சும்மா கெத்தா வாழ்ந்து காட்டணும்!

அடுத்தவரின் துன்பத்தில் நீ இன்பம் காணாதே! அந்த துன்பம் கடுகளவு அல்ல, கடலளவு உன்னிடமும் ஒருநாள் வந்து சேரும்!

நெருக்கமான உறவுகளால் மட்டும் தான் துரோகம் என்ற வார்த்தையை உருவாக்க முடிகிறது...

எல்லா நண்பர்களும் துரோகிகள் அல்ல! ஆனால், துரோகிகள் எல்லாம் ஏதோ ஓர் காலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் தான்!

இன்று நான் இருக்கும் இடம், நாளை உனக்கும் வரும்!

துரோகம் கத்தி போன்றது! பிறரைக் குத்தும் போது சுகமாகவும், நம்மை திருப்பிக் குத்தும் போது கொடூரமாகவும் இருக்கும்!

துரோகம் செய்த மனிதர்களிடம், நேர்மையை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

"நம்பிக்கை துரோகம்" நம்பாத ஒருவரிடம் இருந்து கிடைக்காது! நீ அதிகம் நம்பியவர்களிடம் இருந்து மட்டுமே கிடைக்கிறது!

Throgam Quotes In Tamil


*ஒவ்வொரு வெற்றிக்கு பின்னால் உழைப்பை விட துரோகம்தான் அதிகமாக இருக்கும்

*ஒவ்வொரு உறவுகளுக்கு ஒவ்வொரு தேவை அதனால்தான் நாம் ஏமாற்றப்படுகிறோம்

*பொய்யாக நேசிப்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஆனால் உண்மையாக அன்பு செலுத்துபவர்கள் இறுதியில் ஏமாற்றப்படுகிறார்கள்.

Throgam Quotes In Tamil


*ஒரு சில உறவுகளின் உண்மை சுயரூபம் தெரிய வரும்போதுதான் புரிகிறது இவர்களையா உயிருக்கு மேல் நம்பினோம் என்று

*யாரையும் நம்பமுடியவில்லை என்ற வார்த்தையில் மறைந்திருக்கின்றது நெருங்கிய உறவு ஒன்றின் துரோகம்

*நம்மில் பலருக்கு எதிரிகளை எதிர்க்கும் துணிவு கூட துரோகிகளை எதிர்க்க இருப்பதில்லை.

*இங்கு கேட்டு அங்கு சொல்வதும் அங்கு கேட்டு இங்கு சொல்வதும் உறவுகளின்இயற்கை

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்