விடுகதையிலேயே நகைச்சுவைவை தரமுடியுமா? படிச்சு பாருங்க
Vidukathai Jokes
Vidukathai Jokes-விடுகதை என்பது மக்களின் சிந்தனை திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். விடுகதை என்பது மறைந்திருக்கும் பொருளை விளக்கும் முயற்சியே. வினா எழுப்பி விடையளிக்குமாறு இவ்விடுகதைகள் அமையும். அறிவூட்டுவது சிந்தனையைத் தூண்டுவது இதன் நோக்கமாகும். இத்தகைய விடுகதைகளை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விடுகதை மிகவும் பிடிக்கும். விடுகதைக்கு விடை தெரியவில்லை என்றால் அதற்கு விடை தெரிந்துகொள்ள வேண்டும் என்று அதிக ஆர்வம் கொள்வோம். அந்த வகையில் இந்த பதிவில் அனைவருக்கும் மிகவும் பிடித்த சில விடுகதைகளை விடையுடன் தந்துள்ளோம்
ஒரு மனிதன் கடும் மழையில், எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் வெளியே செல்கிறான். அவரது தலைமுடி ஈரமாகவில்லை?
விடை: அவருக்கு வழுக்கை
எந்த மாதத்தில் மக்கள் குறைவாக தூங்குவார்கள்?
விடை :பிப்ரவரி
காலை உணவுக்கு நீங்கள் சாப்பிட முடியாத இரண்டு உணவுகள் என்ன?
விடை : மதிய உணவு மற்றும் இரவு உணவு.
எல்லா நேரமும் தரையில் கிடக்கும், ஆனால் அழுக்காகாது?
விடை: நிழல்.
மேலும் கீழும் செல்லும் ஆனால் ஒருபோதும் நகராது?
விடை : படிக்கட்டுகள்
என்ன டாக்டர்! என்னை அறுவை சிகிச்சை பண்ணுவீங்கன்னு பார்த்தா கடி ஜோக்கா சொல்லிட்டிருக்கீங்க.
விடை: இதுதான் அறுவை சிகிச்சை
பேன் ஏன் மேலேயே சுத்துது? ஏன்?
விடை: உட்காருவதற்கு அதற்கு கால் இல்லை அதனால் தான்.
தயாரித்தவருக்குத் தேவையில்லை வாங்கியவருக்குப் பயனில்லை உபயோகிப்பவர் பார்ப்பதில்லை. அது எது?
விடை: சவப்பெட்டி
வானவில்லில் கடைசியில் இருப்பது என்ன?
விடை : ல் என்னும் எழுத்து
டாக்டர் ஊசி போட வரும்போது ஒருத்தன் தடுத்தானாம்? ஏன்?
விடை: அது தடுப்பூசியாம்
ஒருத்தன் தேர்வறைக்கு சென்றுவிட்டு திரும்பிட்டான் ஏன்?
விடை: அது ரிட்டன் எக்ஸாம்
எல்லா பெட்டியிலும் துணி வைக்கலாம், இதில் வைக்க முடியாது
விடை: தீப்பெட்டி
இந்த தாடியை ஷேவ் பண்ண முடியாது
விடை: காத்தாடி
கிரிக்கெட் மேட்ச் பாத்துகிட்டு இருந்த கொசு திடீர்னு செத்து போச்சு ஏன்?
விடை: அந்த டீம் ஆல் அவுட் ஆயிருச்சாம்
படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
விடை : பட்டாசு
ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன?
விடை : பற்கள்
உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?
விடை:அகப்பை
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
விடை : சூரியன்
கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன?
விடை : சோளக்கதிர்
கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?
விடை : உப்பு
ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன?
விடை : கடல்
காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்?
விடை : நிழல்
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
விடை : சைக்கிள்
அகராதியில் எந்த வார்த்தை தவறாக எழுதப்பட்டுள்ளது?
விடை: தவறு என்ற வார்த்தை
வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?
விடை : உளுந்து
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
விடை : முதுகு
கேடயமுள்ள வீரனுக்கு வாள் இல்லை அவன் யார்?
விடை : ஆமை
குடியிருக்க கோட்டை கட்டும் அந்த கோட்டையை உடைத்து வெளியே வரும் அது என்ன?
விடை : பட்டாம்பூச்சி
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu