Tamil nicknames தமிழில் பட்டப்பெயரும் புனைப்பெயரும்

ஆங்கிலத்தில் NickName என்பதற்கு தமிழில் பட்டப்பெயர், புனைப்பெயர் என அர்த்தங்கள் உண்டு,
பொதுவாக புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் நிகழ்வினை அனைவருமே நடத்துவார்கள். இருப்பினும் அந்த குழந்தை வளர வளர அந்த குழந்தையின் உறவினர்களும், நண்பர்களுக்கும், சுற்றி இருப்பவர்களும் புதிது புதிதாக ஏதாவது ஒரு நிக் நேம் என்று சொல்லக்கூடிய பட்டப்பெயரை வைப்பது வழக்கமாகவும் இருந்து வருகிறது.
ஒருவருக்கு பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடுவது, பள்ளிகளில் மாணவப் பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது. பட்டப்பெயர்கள் ஒருவரது உருவத்தையும் செயல்களையும் கேலி, கிண்டல் செய்யப் பயன்படும் பெயராகவே இருக்கும்.
இந்த உலகத்தில் இருக்கின்ற அனைவருக்குமே ஏதாவது ஒரு பட்டப்பெயர் கண்டிப்பாக இருக்கும். சிலர் அந்த பட்டப்பெயரினை செல்லமாகவும், பிரியமாகவும் சொல்லி அழைப்பார்கள். சிலர் கிண்டலுக்காகவும், கேலி செய்வதாகவும் பட்டப்பெயர்கள் வைத்து அழைப்பார்கள். சிலவகையான நிக் நேம்ஸ்னை இங்கு காண்போம் வாங்க..
எப்போதும் சாப்பிட்டு கொண்டே இருப்பவர்களுக்கு சோத்துமூட்ட
உயரமாக இருப்பவர்களுக்கு ஒட்டகச்சிவிங்கி, ஒட்டடை குச்சி
போதையிலேயே இருப்பவர்களுக்கு தண்ணிவண்டி
அனைத்து வேலைகளையும் மெதுவாக செய்பவர்களுக்கு வாத்து
வீட்டில் மற்றும் மற்றவர்களிடம் போட்டு கொடுப்பவர்களுக்கு ஏழரை
ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஒல்லிக்குச்சி, ஓமக்குச்சி
பில்டப் போடுபவர்களுக்கு சூனா பானா
முகத்தை சிடுசிடுவென வைத்துக்கொள்பவர்களுக்கு சிடுமூஞ்சி
எப்பொழுதுமே கருத்து சொல்லிக்கொண்டே இருப்பவர்களுக்கு கருத்து கந்தசாமி
என பல பட்டப்பெயர்களை கேள்விப்பட்டிருப்போம்.
பள்ளியிலும், விளையாட்டு மைதானத்திலும் சக நண்பர்களின் தோற்றத்தை வைத்து நக்கல் அடிக்கும் குழந்தைகளை உங்கள் குழந்தையும் எதிர்கொள்ள கூடும். இதுபோன்ற விஷயங்கள் உங்கள் குழந்தையின் மன உறுதியை சீர்குலைத்து, சமூகத்தில் இருந்து அவர்களை விலகியிருக்க செய்துவிடும். வீட்டிலும் கூட, குழந்தையின் தோற்றத்தை வைத்து நீங்கள் கிண்டல் செய்தீர்கள் என்றால், உங்கள் குழந்தைகள் பாதுகாப்பற்ற மனநிலையை உணரத் தொடங்கும். ஆகவே, அதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.
என்னதான் குழந்தைகளுக்கு பெற்றோர் அழகான பெயர் வைத்திருந்தாலும் கூட, சில பட்டப்பெயர்களை வைத்து அழைப்பார்கள். ஆனால், எல்லா சமயத்திலும் குழந்தைகள் அதை ரசிக்க மாட்டார்கள். விளையாட்டாகத்தான் இப்படி அழைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளும் பக்குவம் குழந்தைகளிடம் இருக்காது. இதனால், அவர்கள் தன்னம்பிக்கை இழக்கக் கூடும்.
பொதுவா காதலர்கள், சகோதரர்கள், நண்பர்கள் என எல்லாரும் தனக்கு புடிச்சவங்களுக்கு எதாவது செல்ல பேரு வெச்சி கூப்பிட ஆசைப்படுவாங்க. அதே போல எதிர்ல இருக்கவங்களும் தனக்கு புடிச்சவங்க தன்னை ஏதாவது செல்லமா கூப்பிடணும்னு ஆசை படுவாங்க. என்னதான் எல்லாரும் செல்ல பேரு வெச்சாலும் ஒரு காதலன் காதலியையும், அந்த காதலி தன்னோட காதலனையும் செல்லமா கூப்புட்ற அழகு இருக்கே அது தனி
சரி, இப்ப புனைப்பெயருக்கு வருவோம். பொதுவாக எழுத்தாளர்கள், கவிஞர்கள் புனைப்பெயருடன் பிரபலமடைந்துள்ளனர். சில பத்திரிக்கையாளர்களும் தங்கள் அடையாளத்தை மறைக்க புனைப்பெயரில் செய்திகளை வெளியிடுவார்கள்
அவ்வாறு பிரபலமானவர்களும் அவர்களது உண்மைப்பெயரும்
பாரதியார் - சுப்பிரமணியன்
பாரதிதாசன் - கனக. சுப்புரத்தினம்
சுரதா - இராசகோபாலன்
கவியரசர் கண்ணதாசன் – முத்தையா
கவிஞர் வாலி – ரங்கராஜன்
எழுத்தாளர் சுஜாதா - ரங்கராஜன்
கல்கி / 'கல்கி 'கிருஷ்ணமூர்த்தி - ரா. கிருஷ்ணமூர்த்தி
சாண்டில்யன் - பாஷ்யம் ஐயங்கார்
புஷ்பா தங்கதுரை - ஶ்ரீ வேணுகோபால்
அசோகமித்ரன் - ஜகதீச தியாகராஜன்
அம்பை - சி. எஸ். லஷ்மி
புதுமைப்பித்தன் - விருத்தாசலம் -
அப்துல் ஹமீது - மனுஷ்ய புத்திரன்
பிரபஞ்சன் - எஸ். வைத்திலிங்கம்
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu