புத்தாண்டில் மகிழ்ச்சி பெருகட்டும்; தமிழில் வாழ்த்துகள் சொல்லுங்க...!

New Year Wishes in Tamil Words
New Year Wishes in Tamil Words-வாழ்க்கை காலத்தை அடிப்படையாக கொண்டது. வாழ்க்கையின் ஆரம்பம் முதல் முடிவு வரை, நேரத்தால் ஆனது. வயதுக்கு ஏற்ப வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. 5 வயது வரை குழந்தை பருவம், அதன் பின் சிறுவர் பருவம், மாணவ பருவம், இளமையில் திருமண காலம், நடுத்தர வயது காலம், உடல் தளர்ந்த முதுமை காலம் என வாழ்க்கை அந்தந்த வயதுகளுக்கேற்ப வாழ்க்கையை தீர்மானிக்கிறது. எனவே, வயதுகளை தீர்மானிப்பது ஆண்டுகள்தான். ஒரு ஆண்டை புதிதாக வரவேற்கிறோம் என்னும் போது, ஒரு பழைய ஆண்டை இழந்து விட்டோம் என்பதுதான் கசப்பான உண்மை. எனினும், ஒன்றை இழந்துதான் ஒன்றை அடைய முடியும் என்பது இயற்கையின் நியதியாக இருப்பதால், வருகிற புத்தாண்டு நமக்கு மகிழ்ச்சியும், வளங்களும் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும்.

இதோ நம்மை வந்து அடைந்து விட்டது ஆங்கில புத்தாண்டு 2023. மொழி, இனம், மதம் என அனைத்தையும் கடந்து உலகமே கொண்டாடும் ஒரு இனிய நாளாக இருக்கிறது புத்தாண்டு. இது புதிய ஆண்டின் துவக்கமாக மட்டும் இல்லாமல் பலருடைய புதிய முயற்சிகளின் துவக்கமாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த நன்னாளில் அனைவரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி மகிழ்வது இயல்பு. அப்படி நமது நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை பகிரும் வகையில் இங்கே அழகான பல புத்தாண்டு வாழ்த்துகள் கவிதை மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் உள்ளன. இதன் மூலம் நமது புத்தாண்டு வாழ்த்துகளை தமிழில் பகிரலாம்.
முதலில் இந்த புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய, எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். புத்தாண்டு வாழ்த்து தமிழில் பகிர்வது என்பது நமக்குள் ஒரு நல்ல உணர்வை கொடுப்பதோடு தாய் மொழியின் ஸ்பரிசமும் அதில் இருக்கும். அந்த வகையில் ஆங்கில புத்தாண்டு 2023 வாழ்த்துகள்.

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் 2023
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2023
சென்ற ஆண்டுக்கு நன்றியை கூறி புதிதாக பிறந்துள்ள இந்த ஆண்டை உற்சாகத்தோடு வரவேற்போம். இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2023.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2023
இந்த ஆண்டு மேலும் உங்களுக்கு மிகசிறந்த ஒரு ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2023
நிறைந்த வளம், மிகுந்த சந்தோஷம், வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டு வரட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
மகிழ்ச்சிகளும், வெற்றிகளும் நிறைந்த ஆண்டாக அமைய, இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
அன்பும், அருளும் நிறைந்த, செல்வங்கள் கொழிக்கும் ஆண்டாக அமைய, இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
விரும்பியவை எல்லாம் கிடைக்கட்டும்; நல்லவை எல்லாம் நடக்கட்டும்; வாழ்வு என்றென்றும் செழிக்கட்டும். இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இறைவனின் ஆசி நிறைந்த ஆண்டாகவும், நலமும், வளமும், செல்வமும், மகிழ்ச்சியும் கொண்டாடப்படும் நாட்களாக அமைய, இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
சிறந்த உடல் ஆரோக்கியமும், நிறைந்த மன நிம்மதியும், அன்பும், அமைதியும் என்றென்றும் நிலைத்திருக்கும் மகிழ்ச்சியான நாட்களை கொண்டதாக அமைய, இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
தொழிலில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி, ஆரோக்கியமான உடல் நலம், ஆனந்தமான மனநிலை தெய்வீகம் நிறைந்த ஆண்டாக அமைய, இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
இதுவரை நடந்தது, நடந்தவையாக இருக்கட்டும்; இனி, வருபவை அனைத்தும் நல்லவைகளாக மட்டுமே இருக்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ஒளிமயமான எதிர்கால வாழ்வு அமைய, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu