Tamil Motivational quotes for success வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவர்களுக்கான உந்துதல் மேற்கோள்கள் தமிழில்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மோசமான கற்றல் திறன் காரணமாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இன்றைய நவீன இயற்பியலின் தந்தை என கூறுகிறோம்.
வாழ்க்கை என்பது வெற்றி தோல்வி இரண்டும் கலந்தது தான். வெற்றியை கொண்டாடும் நாம், தோல்வியை கண்டு துவண்டு விடுகிறோம். வீழ்வது தோல்வியல்ல, வீழ்ந்தும் எழாமல் இருப்பது தான் தோல்வி. இது போன்ற தோல்விகளில் நாம் துவண்டு விடாமல் இருக்க பல வெற்றியாளர்கள் தங்கள் வாழ்வில் அனுபவித்த தோல்விகள் மூலம் கற்று கொண்ட பாடத்தை உந்துதல் மேற்கோள்களாக அளித்துள்ளனர்.
நீங்கள் சில நேரங்களில் உந்துதல் இல்லாதிருந்தால் அல்லது பல சவால்களை அனுபவித்தால் இந்த பதிவு அவர்களுக்கு உதவக்கூடும்.
உங்கள் இலக்கு என்ன? நீங்கள் ஒரு பெரிய நடிகர் அல்லது பாடகர் ஆக விரும்புகிறீர்களா? உங்கள் அடையாளத்தை விளையாட்டுகளில் செய்ய விரும்புகிறீர்களா? நீங்கள் எதிர்காலத்தில் ஒரு சின்னமான வணிக தலைவராக உங்களை பார்க்கிறீர்களா? உங்கள் குறிக்கோள் எதுவாக இருந்தாலும், நீங்கள் அதை செய்ய முடியும். உங்களுக்கு தேவையான அனைத்து சரியான திசையில் ஒரு உந்துதல் ஆகும்.
இந்த மேற்கோள்கள் தாங்கள் செல்லும் ஒவ்வொரு நிலையை அடைய ஒரு நேரத்திற்குச் செலுத்தும் ஆற்றல் எப்போதும் போதாது என்று நினைப்பவர்களுக்கு உதவும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு...
எத்தனை கைகள் தள்ளிவிட்டாலும்
நம்பிக்கை என்றும் கை விடாது
இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்
சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை
விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே மலரும்...
பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்
தரையில் இருக்கவும் கற்றுக்கொள்...
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்...
நம்மை அவமானப்படுத்தும் போது
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகிறது.
துன்பம் நம்மை சூழ்ந்த போதும்
மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...
முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்
வலிகளும் பழகிப்போகும்...
அடுத்தவரோடு ஒப்பிட்டு
உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே
உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே.
பல முறை முயற்சித்தும்
உனக்கு தோல்வி என்றால்
உன் இலக்கு தவறு
சரியான இலக்கை தேர்ந்தெடு..
உன்னால் முடியும்
என்று நம்பு...
முயற்சிக்கும் அனைத்திலும்
வெற்றியே...
எந்த சூழ்நிலையையும்
எதிர்த்து நிற்கலாம்
தன்னம்பிக்கையும் துணிச்சலும்
இருந்தால்..
தோல்வி உன்னை துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு
எல்லாம் தெரியும் என்பவர்களை விட
என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே
வாழ்வில் ஜெயிக்கின்றார்...
முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்ததை
முடிக்கும் வரை.
தன்னம்பிக்கை இருக்கும்
அளவுக்கு முயற்சியும்
இருந்தால் தான் வெற்றி
சாத்தியம்...
எண்ணங்களிலுள்ள தாழ்வு
மனப்பான்மையால் திறமைக்கு
தடை போடாதீர்கள்....
முடியும் என்ற சொல்லே
மந்திரமாய்..
மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே,
தோல்வி பல கடந்து வென்றவர்களே...
எனக்கு பிரச்சினை என்று
ஒரு போதும் சொல்லாதீர்கள்
பிரச்சனை என்றால்
பயமும் கவலையும் வந்து விடும்
எனக்கு ஒரு சவால்
என்று சொல்லி பாருங்கள்
தைரியமும் தன்னம்பிக்கையும்
தானாக வந்து விடும்...
தோல்விகளை தவழும் போது,
ஏமாற்றமென நினையாமல்
மாற்றமென நினையுங்கள்...
பாதிப்பு இருக்காது...
உங்களுக்கும் மனதிற்கும்...
இதுவும் கடந்து போகும்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu