மனப்பொருத்தம் இருந்தாலே போதுமுங்க... வாழ்க்கை வசீகரமாகும்.... படிச்சு பாருங்க...
திருமணத்தின் போது நடத்தப்படும் பாரம்பரிய நிகழ்ச்சிகள்(கோப்பு படம்)
tamil Jathagam porutham
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. பிறக்கும்போதே அவர்களுக்கான ஜோடி நிச்சயிக்கப்படுகிறது என்றெல்லாம் சமூகத்தில்பேசுபவர்கள் பலர் உள்ளனர். இருந்தாலும் இன்றைய யதார்த்த வாழ்க்கையில் ஆண்கள் 40வயதுக்குமேலேயும் பெண்கள் 35 வயதுக்கு மேலே ஆகியும் கல்யாணமே பண்ணிக்காமல் காலம் கடத்துகிறார்களே எப்படி? வரும் வரன்களை ஒவ்வொரு குறையாக சொல்லி தட்டிக்கழி்த்து கடைசியில் வயது முதிர்ந்து போய் வயதை தட்டிக்கழித்துவிடுவதால்தான் இந்த நிலை. எல்லாமே சரியாக வருவது என்பது எப்போதும் ஆகாது தெரியுங்களா...வசதி இருந்தால் பெண் அழகாக இருக்காது... வசதி இருந்தா பையனுக்கு சரியான வேலை அமையாது என பல விஷயங்கள் நெகடிவ்ல இருக்கலாம். அதனை சமாளித்துவிடலாம் என யார் துணிந்து கல்யாணம் செய்கிறார்களோ அவர்களே இன்றளவில் புத்திசாலிகள். தட்டிக்கழித்தால் தட்டிக்கழித்துக்கொண்டே போய்விடும்..ஜாக்கிரதை...இனியாவது விழித்தெழுங்க.... படிச்சு பாருங்க...மனம் பொருந்தினால் போதும் மற்ற எதுவுமே வேண்டாம்..ஜாதகம் எல்லாம் நம் மனசுக்குதாங்க....
tamil Jathagam porutham
tamil Jathagam porutham
கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிரு என்றுதான் முன்னோர்கள் சொல்லிட்டு போனாங்க.,ஆனா இக்காலத்தில் அந்த மாதிரி ஆயிரம் வருஷம் வரைக்கும் போறாங்களா,? ... அடுத்த வருடமே மணவாழ்வு முறிவுக்கு வந்துடுதுங்க..அப்படி என்ன தான் நடக்குது? ஆமாங்க கூட்டுக்குடும்பம் சிதைந்துபோனதால இளசுகளுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்ற சகிப்புத் தன்மை கொஞ்சம் கூட இல்லாததால் பல திருமணங்கள் ஓராண்டிற்கு மேல் ஒண்ணா வாழ முடியாம விவாகரத்து என்ற மணமுறிவை நோக்கி பயணம் செய்ய ஆரம்பிச்சுடராங்க... என்ன செய்ய?.
tamil Jathagam porutham
tamil Jathagam porutham
மனப்பொருத்தம் முக்கியம்
விவாஹம் நடத்துவதற்கு முன் எவ்வளவோ விஷயங்களை நாம் அனுசரித்துப்பார்க்கவேண்டிய நிலையில்உ ள்ளோம். சதிபதிகளை ஆயிரங்காலத்துப்பயிர் என்றும், வாழையடி வாழையாக வாழவேண்டும் என்றும் பெருவாழ்வு வாழ வேண்டும் என்றும் பெரியவர்கள் ஆசிர்வதிப்பார்கள். வளம் பெற்ற வாழ்க்கையாக அமைய வேண்டுமானால் , முதலில் ''மனப்பொருத்தம்'' மிகவும் அவசியம். பந்துத்துவம் அல்லது உறவு முறை போய்விடுமே என்று நிர்ப்பந்தப்படுத்தி விவாஹம் செய்யக்கூடாது. பணத்துக்காக ஆசைப்பட்டு பெரிய இடம் விவாஹம் செய்வதும் மிக மிக தவறு ஆகும்.
tamil Jathagam porutham
tamil Jathagam porutham
கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு என்றார்கள். இதில் எவ்வளவோ பொருள்கள் அடங்கிக்கிடக்கின்றன. இதனை மனதில் முக்கியமாகக் கொண்டு நடத்த வேண்டும். ஆக எதிர்காலத்தில் இன்பத்துடன் வாழவேண்டிய சதிபதிகளின் இஷ்டத்தினை மனதை அறிந்து விவாஹம் செய்வது என்பது மிக மிக முக்கியம். எனவே பெற்றோர்களே ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் உங்களுடைய பெண்ணோ , அல்லது பையனோ அவரவர்களுக்கு மனதளவில் பிடித்திருந்தால் மட்டுமே அடுத்த விஷயத்தினை நீங்கள் பேச வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்...ஏன் என்றால் அவர்கள்தான் இ ணைந்து வாழப்போகிறார்கள் எதிர்காலத்தில்.....அப்படி மனதளவில் பொருந்திவிட்டால் மட்டுமே ஜாதகப் பொருத்தம் பார்க்க துவங்குங்கள்.
tamil Jathagam porutham
tamil Jathagam porutham
இந்த மாதிரி பல குடும்பங்களில் நடக்குது. இதற்கு ஒரு சில பெற்றோர்களும் காரணம் என சமுதாயத்தில் சொல்றாங்க... அவங்க காலம் வரைக்கும் கூட பெண் இருப்பாங்க... அதற்கப்புறம்... இவர்களின் நிலைமை என்னாகுமுங்க... ஒரு சில பெண்கள் இரண்டாவது கல்யாணத்துக்கு ஒத்துக்காம அப்பா, அம்மாவோடவே காலம் தள்ளிட்டு வர்றதுதான் காரணம்... அவர்கள் அவர்களுடைய மனசை மாற்றி மற்றொரு கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யணுமுங்க.. அதுதான் கரெக்ட். அது சரிங்க இந்த கல்யாணம்னாலே பொருத்தம் பார்க்கணும்னு சொல்றாங்களே அதைப்பத்தி பார்த்துடுவோமா ....வாங்க ....பார்க்கலாம்....
tamil Jathagam porutham
tamil Jathagam porutham
விவாஹத்திற்கு பொருத்தம் பார்க்க முயன்றால் அனேக விதமான பொருத்தங்களைப் பார்ப்பதென்பது மிகவும் சிரமம். தினப்பொருத்தம், கணப்பொருத்தம், யோனிப்பொருத்தம், ரஜ்ஜி்ப்பொருத்தம், வசியப்பொருத்தம், வேதைப்பொருத்தம், ராசிப்பொருத்தம், ராசிஅதிபதிப் பொருத்தம், ஸ்திரி தீர்க்கப்பொருத்தம், நாடிப்பொருத்தம் என்பன போன்ற பொருத்தங்களைப் பார்க்க வேண்டும். ஆயினும் 10 பொருத்தங்கள் மட்டும் பார்ப்பது வழக்கத்தில் இருந்தாலும் முக்கியமான பொருத்தங்கள் மட்டும்இருந்தாலோ விவாஹம் செய்யலாம். அந்த வகையில்
முக்கிய பொருத்தங்களாக தினப்பொருத்தம், கணப்பொருத்தம், யோனிப்பொருத்தம், ராசிப்பொருத்தம், ரஜ்ஜீப்பொருத்தம் இந்த 5 பொருத்தங்களும்இருந்தாலே விவாஹம் செய்யலாம்.வது வரன்களின் நக்ஷத்திரங்களைக் கொண்டு பார்க்கும் இந்த பொருத்தங்களுடன் ஜாதகரீதியாக அங்காரக தோஷம், ஸதிபதிகளின் ஒற்றுமை, ஆயுள், சந்தான பாக்யம், அதிர்ஷ்ட யோகங்கள், இவைகளையும், பார்க்க வேண்டும். முக்கியமாக ஆயிரங்காலத்துப் பயிர்களாக இருக்க வேண்டிய ஸதிபதிகளுக்கு மனப்பொருத்தம் இருக்க வேண்டும். வலுக்கட்டாயமாக விவாஹங்களைச் செய்யக்கூடாது.
tamil Jathagam porutham
tamil Jathagam porutham
ஆகவே பெண்ணுக்கு ஆணையும், ஆணுக்கு பெண்ணும் மனதளவில் பிடித்திருக்க வேண்டும். பெரியவர்களுக்கு பிடித்திருந்தது, பெற்றவர்களுக்கு பிடித்திருந்தது என்ற டயலாக்கையெல்லாம் ஆணோ, பெண்ணோ பேசிவிடக்கூடாது. அவரவர்களின் மனதிற்கு பிடித்திருக்க வேண்டும். ஏனெனில் தினமும் இருவரும்தான் சேர்ந்து வாழப்போகிறார்கள். எனவே நடைமுறையில் ஜாதகம், 10 பொருத்தம் என இருந்தாலும் முக்கியமாக மனப்பொருத்தம் அதாவது இருவருக்கும் மனதளவில் பிடித்திருக்கவேண்டும் என்பது மிக மிக முக்கியமாகும். யாரும் யாரையும் வற்புறுத்தாதீர்கள்.,இந்த விஷயத்தில்...
ஜாதகத்தினைப் பொருத்தும் விதம்
எந்த ஜாதகமாயினும் முதன் முதலில் தனித்தனியே இரு பாலரின் ஆயுளையும், தசாபலன்களையும், அறிந்து கொள்ள வேண்டும். ஏழாமிடத்தினைக்கொண்டு இந்த ஜாதகத்துக்கு இதுபொருந்துமா? என்று பார்த்துக்கொள்ளுதல் நலம். பின், மேலேசொல்லப்பட்டுள்ள தசப்பொருத்தங்களும் சரியாக இருந்தாலும் லக்னம், சந்திரன், சுக்கிரன் இந்த மூன்றையும் லக்னம் போல் வைத்துக்கொண்டு இதற்கு 2,4,7,8,12, ஆகிய இந்த இடங்களில் பாபிகள் இல்லாமலிருக்கிறார்களா? என்று பார்த்து யோசித்துப் பொருத்த வேண்டும்.
tamil Jathagam porutham
tamil Jathagam porutham
பாபிகள் இருப்பின், இருபாலருக்கும் அப்படியே இருக்க வேண்டும். ஒருவருக்கு (பெண்ணுக்கு) லக்னத்துக்கு 2ல் செவ்வாய் இருந்து, பிள்ளைக்கு லக்னத்துக்கு 8லோ, சந்திரனுக்கு 12லோ, அல்லது சுக்கிரனுக்கு 7லோ இருந்தாலும் போதும், அதாவது அந்தப் பாப சம்பந்தம் ஏதாவது ஒரு இடத்தில் இருத்தல் வேண்டும். இதற்கு ''தோஷஸாம்யம் '' என்று பெயர்.
பெண்நக்ஷத்திரம் மூலமானால் மாமனாருக்கு ஆகாது, பெண்நக்ஷத்திரம் ஆயில்யமானால் மாமியாருக்கு ஆகாது. பெண் நக்ஷத்திரம் கேட்டையானால் மூத்த மைத்துனருக்கு ஆகாது, பெண் நக்ஷத்திரம் விசாகமானால் இளைய மைத்துனருக்கு ஆகாது.சுத்தமான ஜாதகங்களாக இருந்தால் மேற்கண்ட நக்ஷத்திர தோஷங்கள் அனுபவத்திற்கு வருவதில்லை. இந்த தோஷங்கள் ஆண் நக்ஷத்திரத்துக்குக் கிடையாது என்பது அறியத்தக்கது.
விவாஹப்பொருத்தத்தைப் பார்க்காமலே, மிருகசீரிஷம், மகம், சுவாதி, அனுஷம் இந்த நான்கு நக்ஷத்திரங்கள் பெண் அல்லது ஆண் நக்ஷத்திரமாக இருந்தால் விவாஹம் செய்யலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu