இரவில் கால்களில் இந்த அறிகுறிகளா? - கல்லீரல் பிரச்னையாக இருக்க வாய்ப்பு... உஷார்

கல்லீரல் பாதிப்புகள் குறித்து தெரிந்துக்கொள்வோம் (கோப்பு படங்கள்)
நமது உடலில் கல்லீரல் மிகவும் பெரிய மற்றும் முக்கியமான உறுப்பு. இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவது, மெட்டபாலிசத்திற்கு உதவுவது, செரிமான ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்வது போன்றவற்றில் முக்கிய பங்கை வகிக்கிறது.
இப்படிப்பட்ட முக்கியமான வேலைகளை நாள் முழுவதும் செய்து வரும் கல்லீரல் நமது ஒருசில உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையினால் சேதமடையக்கூடும். எனவே அவ்வப்போது கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் சுத்தப்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், ஒரு கட்டத்தில் கல்லீரலின் செயல்பாடு குறைந்து, கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
கல்லீரலில் உள்ள பிரச்சனைகளை சரியாக கவனித்து அதற்கு சிகிச்சை எடுக்காமல் போனால், கல்லீரல் செயலிழந்து, அதன் விளைவாக இதயத்தில் சேதயம், கணைய செயலிழப்ப போன்ற பல்வேறு உறுப்புக்களின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படக்கூடும் எனவே எப்போதும் ஓருவர் தங்கள் கல்லீரலின் ஆரோக்கியத்தின் மீது கவனத்தை செலுத்த வேண்டும்.
ஒருவேளை கல்லீரல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், அது நமக்கு பல்வேறு அறிகுறிகளை வெளிக்காட்டும். கீழே கல்லீரல் செயலிழக்கப் போகிறது என்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த அறிகுறிகள் இரவு நேரத்தில், அதுவும் கால்களில் தான் வெளிக்காட்டும்.
அந்த அறிகுறிகள் என்ன
கால் வீக்கம் கல்லீரல் செயலிழக்கப் போகிறது என்றால் முதலில் வெளிப்படும் ஒரு அறிகுறி தான் கால்கள் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்படுகிறது. ஏனெனில் கல்லீரலானது சரியாக செயல்படாமல், நச்சுக்களை வெளியேற்றாமல் இருந்தால், அதன் விளைவாக உடலில் உள்ள திசுக்கள் திரவங்களை கால் பகுதிகளில் அப்படியே தங்க செய்துவிடுகிறது. இதன் விளைவாக கால்களில் நீர்தேக்கத்தால் வீக்கத்தை சந்திக்க நேரிடும்.
தொடர்ச்சியான அரிப்பு கல்லீரல் செயலிழக்கப் போகிறது என்றால் வெளிப்படும் மற்றொரு அசாதாரண அறிகுறி தான் கால்களில் கடுமையான அரிப்பை சந்திப்பது. ஆம், உங்கள் கால்களில் திடீரென்று காரணமின்றி கடுமையான அரிப்பு ஏற்படுகிறது என்றால், உங்கள் கல்லீரலில் ஏதோ தீவிர பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
வீக்கமடைந்து வலிக்கும் நரம்புகள் உங்கள் கால்களில் நரம்புகள் புடைத்துக் கொண்டு, கடுமையான வலியை ஏற்படுத்துகிறது என்றால், உங்கள் நரம்புகள் சரியாக செயல்படுவதில்லை என்று அர்த்தம். அதுவும் சிலந்தி நரம்புகள், அதாவது கால்களில் ஆங்காங்கு இரத்த நாளங்கள் விரிவடைந்து காணப்பட்டடால், கல்லீரல் ஆபத்தான நிலையில் உள்ளது என்ற அர்த்தம். இப்படியான சூழ்நிலையில் மருத்துவரை அணுகி உடனே சிகிச்சை பெற வேண்டும்.
சரும நிற மாற்றம் ஒருவரது கால் மற்றும் பாதங்களின் நிறம் வழக்கத்தை விட வித்தியாசமான நிறத்தில் காணப்பட்டால், கல்லீரல் செயலிழக்கும் நிலையில் உள்ளது என்று அர்த்தம். கல்லீரல் தான் பிலிரூபினை மெட்டபாலிசம் செய்கிறது. இப்படிப்பட்ட கல்லீரல் சரியாக செயல்படாமல் போனால், பிலிரூபின் பித்தப்பையில் குவிந்து, சருமத்தின் நிறத்தை மஞ்சள் நிறத்தில் வெளிக்காட்டும். அத்துடன் அரிப்பையும் ஏற்படுத்தும்.
கால்கள் மற்றும் பாதங்களில் வலி கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டால் கால்களில் வெளிப்படும் மற்றொரு அசாதாரண அறிகுறி, இரவு நேரத்தில் கால்களில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும். அதுவும் கல்லீரல் சரியாகச் செயல்படாதபோது உடலில் நீர் தேங்குவதால் இது முக்கியமாக நிகழ்கிறது. இந்த வலிக்கு பெறும் நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, இரவில் இந்த வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
தசை பலவீனம் மற்றும் வலி உங்களால் திடீரென்று நடக்க முடியவில்லையா? அப்படியானால் உங்கள் கல்லீரல் சரியாக செயல்படுவதில்லை என்று அர்த்தம். வழக்கத்திற்கு மாறாக தசைகளில் கடுமையான வலி மற்றும் பலவீனத்தை ஒருவர் உணர்ந்தால், அவர் கல்லீரல் ஆரோக்கியத்தை முதலில் சோதனை செய்து பார்க்க வேண்டும்.
ஏனெனில் தசைகளின் செயல்பாட்டிற்கு அவசியமான புரதங்களை உற்பத்தி செய்வதில் கல்லீரல் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்படும் போது, புரத தொகுப்பு பலவீனமடைந்து, அதன் விளைவாக தசை வலி, தசை பலவீனம் போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் இம்மாதிரியான தசை வலியை அதிகம் சந்திக்க நேரிடும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu