Sugarcane Juice- உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கணுமா? கரும்பு ஜூஸ் குடிங்க!

Sugarcane Juice- உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கணுமா? கரும்பு ஜூஸ் குடிங்க!
X

Sugarcane Juice- உடல் ஆரோக்கியத்துக்கு கரும்பு ஜூஸ் சாப்பிடுங்க! (கோப்பு படம்)

Sugarcane Juice- உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, கல்லீரலுக்கு பலம் என பலவிதங்களில் கரும்பு ஜூஸ் நமக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது. அதுபற்றித் தெரிந்துக்கொள்வோம்.

Sugarcane Juice, Health- தித்திப்பு நிறைந்த அனைத்து உணவுப்பொருட்களுமே கெடுதல் இல்லை.. அப்படித்தான் இளநீரும்.. அப்படித்தான் கரும்புச்சாறும்.. இந்த கரும்பு சாறில் உள்ள நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

கரும்பு சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தாராளமாக நிறைந்துள்ளன.. இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம் உட்பட பிற எலக்ட்ரோலைட்டுகள் இந்த சாறில் கலந்துள்ளன.. அதனால்தான், நோய் எதிர்ப்பு சக்தியை சாறு நமக்கு தருகிறது. உடலிலுள்ள நோய்களை எதிர்த்தும் போராடுகிறது.

கல்லீரல்: கல்லீரல், சிறுநீரகம், உள்ளிட்ட உள்ளுறுப்புகளின் செயல்பாட்டுக்கு இந்த கரும்பு சாறு உதவுகிறது.. கல்லீரலை வலிமையாக்குகிறது. கல்லீரலில் தேங்கி கிடக்கும் நச்சுக்களை வெளியேற்ற தூண்டுகிறது.. மஞ்சள் காமாலை நோயாளிகளுக்கு இந்த கறும்பு சாறு நல்லது. காமாலைக்கு தீர்வு தருகிறதாம் இந்த சாறு.. மேலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று முதல், சிறுநீரகத்தில் உள்ள கற்கள் வரை கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது இந்த சாறு.


கரும்பு சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தாராளமாக நிறைந்துள்ளன.. இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம் உட்பட பிற எலக்ட்ரோலைட்டுகள் இந்த சாறில் கலந்துள்ளன.. அதனால்தான், நோய் எதிர்ப்பு சக்தியை சாறு நமக்கு தருகிறது. உடலிலுள்ள நோய்களை எதிர்த்தும் போராடுகிறது..

சிறுநீரகம்: கல்லீரல், சிறுநீரகம், உள்ளிட்ட உள்ளுறுப்புகளின் செயல்பாட்டுக்கு இந்த கரும்பு சாறு உதவுகிறது.. மஞ்சள் காமாலை நோயாளிகளுக்கு இந்த கறும்பு சாறு நல்லது.. காமாலைக்கு தீர்வு தருகிறதாம் இந்த சாறு.. மேலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று முதல், சிறுநீரகத்தில் உள்ள கற்கள் வரை கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது இந்த சாறு.

உடலிலுள்ள கழிவுகளும், நச்சுக்களும் நீங்குவதால், உடல்எடையும் மெல்ல குறைகிறது. வைட்டமின் C நிறைந்துள்ளதால், தொண்டைப்புண், வயிற்றுப்புண்களை இந்த ஜூஸ் ஆற்றுகிறது. தொண்டையில் அரிப்பு, எரிச்சல் போன்ற உணர்வு இருந்தால், கரும்பு சாறு குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்..

பற்கள்: இந்த சாறு குடித்து வரும்போது, பற்களுக்கும், ஈறுகளுக்கும் பலம் கிடைக்கிறது.. பற்கள் சேதாராமும் தடுக்கப்படுகிறது.. மூளையின் செயல்பாட்டை அதிகரித்து, நம்மை சுறுசுறுப்புடன் இயங்க செய்ய இந்த சாறு தூண்டுகோலாகிறது.

பெண்களுக்கு கரும்புச்சாறு மிகவும் நல்லது.. மாதவிடாய் கோளாறுகள் இருந்தால், மாதவிடாய் ஏற்படுதற்கு ஒரு வாரம் முன்பேயே, சமயத்தில் கரும்பு சாறை குடித்து வந்தால் போதும்.

சரும பாதுகாப்பு: அதேபோல, சரும பாதுகாப்பை இந்த சாறு தருகிறது.. முகப்பருக்களை போக்குகிறது.. கரும்பு சாறை குடித்து வருபவர்களுக்கு எளிதில் தோலில் சுருக்கங்கள் ஏற்படாது.. சருமத்துக்கு மட்டுமல்ல, தலைமுடிக்கும் இந்த சாறு மிகவும் நன்மை தரக்கூடியது.. இந்த சாற்றினை தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லைகள் நீங்கிவிடும்.

மலச்சிக்கல், அஜீரண கோளாறு உள்ளவர்கள், தாராளமாக இந்த கரும்பு சாறு குடிக்கலாம். மலச்சிக்கலை போக்குவதுடன், வயிற்றில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களையும் இந்த கறும்பு சாறு தடுத்து நிறுத்துகிறது.

நீரிழிவு நோயாளிகள்: இந்த கரும்பு ஜூஸில், குறைந்த கிளைசெமிக் பண்புகளை கொண்டுள்ளது. இயற்கை சர்க்கரை இதில் அடங்கியுள்ளதால் சர்க்கரை உடலில் மெதுவாக உறிஞ்சப்படுகிறது... உயர் கிளைசெமிக் பானங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.. டைப் 2 சர்க்கரை நோயாளிகள் கரும்புச்சாறை மிதமான அளவில் எடுத்துகொள்ளும்போது, அது சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.

கரும்பு சாறை அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது.. கரும்புச்சாறு குடிப்பதால் உடலில் இருந்து பாலிஃபீனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வெளியாகின்றன. இதனால் கணையம் தேவைக்கு அதிகமாக இன்சுலினை உற்பத்தி செய்யும் என்பதால், பிரஷ்ஷான கரும்பு ஜூஸை, வாரம் ஒருமுறை அரை கிளாஸ் மட்டுமே குடித்தால் போதும் என்கிறார்கள்.. அதுவும் மருத்துவரின் ஆலோசனைபேரில் குடிக்க வேண்டும்.

மற்றபடி, உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள், ஒரு நாளைக்கு 2 முறை கரும்பு சாறு குடிக்கலாம்.. தேவைப்பட்டால், எலுமிச்சை சாறு அல்லத தேங்காய்த் தண்ணீரை கலந்து குடித்தால் கூடுதல் நலன் கிடைக்கும்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself