முளைக்கட்டிய தானியத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
முளை கட்டிய பயற்றில் ஏராளமான புரதசத்துக்கள் அடங்கியுள்ளது. தினமும் உணவில் சேர்த்துகொள்வதால் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் போன்ற பல்வேறு சத்துக்கள் கிடைக்கிறது.
ஒரு நாளில் காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளைகளில் எந்த வேளையிலும் முளைகட்டிய தானியங்களை சாப்பிடலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முளை கட்டிய தானியங்களை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம்.
வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் முளை கட்டிய பயறை உட்கொள்வதும் நன்மை தரும். முளைக்கட்டிய பயறில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்து வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது.
முளை கட்டிய பயறை உட்கொள்வதால் இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கும் நன்மை பயக்கும்.
உடல் எடையைக் குறைக்க முளை கட்டிய பயறை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம். முளை கட்டிய பயறில் மிகக் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. இது எடையைக் குறைக்க உதவும்.
அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், ஹார்மோன்கள் சீராகச் சுரக்க வழிவகுக்கின்றன. புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலைத் தருகின்றன.
முளை கட்டிய பயறுகளில் உள்ள வைட்டமின் பி, மென்மையான சருமத்தைத் தருகிறது. தோல் புற்றுநோயைத் தடுக்கும். சருமம் புத்துணர்வு பெற உதவும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu