Thanimai quotes தனிமை: சிலருக்கு சுகம், பலருக்கு சோகம்

Thanimai quotes தனிமை: சிலருக்கு சுகம், பலருக்கு சோகம்
X

தனிமையிலே ஒரு ராகம், ஒரு தாளம் உருவாகும் 

தனிமை இல்லாமல் கவிஞனும் கலைஞனும் படைப்பாளியாக ஆகமுடியாது. தனிமை என்பது அன்பு இல்லாமை அல்ல அன்பின் தோழனே.

தனிமை என்பதும் மனதுடன் தொடர்புடைய, தனித்து இருப்பதாகத் தோன்றும் உணர்வு. இது மனதின் ஒரு நிலை. நாம் இந்த உலகத்துக்கும் சுற்றி இருப்போருக்கும் குடும்பத்துக்கும் தேவையற்றவராகி விட்டோமோ என்ற உணர்வே தனிமை

உண்மையில் தனிமையில் இருப்போர் உறவுகளைத் தேடுகிறார்கள். ஆனால் அவர்களால் மன ரீதியாகத் தொடர்பு கொள்ள முடிவதில்லை. சமூகரீதியாகத் தனிமைப்படுத்தப்படுவது, உள்முக உணர்வு, மன அழுத்தம், பிறருடன் தொடர்பு கொள்ளும் ஆளுமை குறைவாக இருப்பது ஆகியவற்றுடன் தனிமை உணர்வு தொடர்பு கொண்டிருக்கிறது.

தனிமையில் இரு வகைகள் இருக்கின்றன. ஒன்று தனிமைப்படுத்தப்படுவதாக உணர்வது. சிலர் தாமாகவே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு அதில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் பழைய நிலைமைக்குத் திரும்பும்போது அவர்கள் எல்லோருடனும் சஜகமாகப் பழகத் தொடங்கிவிடுவார்கள்.

தனியாக வாழ்வதும், தனியாக வேலை செய்வதும்கூட தனிமை உணர்வு ஏற்படுவதற்கான அடிப்படையான காரணங்கள்.சிலருக்கு திருவிழாக்கள், பண்டிகைகள், சுபநிகழ்வுகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றின்போது தனிமை உணர்வு ஏற்படுகிறது. இதை சோஷியல்ஃபோபியா அல்லது சமூகப் பதற்றம் என்கிறார்கள். தனிமை என்பது மனச் சோர்வுடன் மிக நெருக்கமான தொடர்புடையது

தனிமை என்பது ஒருவர் தனியாக இருந்தால் மட்டுமே வரக்கூடிய உணர்வு அன்று; பெருங்கூட்டத்தில் இருக்கும்போது, நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும்கூட உங்களுக்கு தனிமை உணர்வு வரலாம்


தனிமை இல்லாமல் காதல் வளராது. தனிமை இல்லாமல் உயிரினங்கள் வாழமுடியாது. தனியாக இல்லாமல் குழந்தை வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியாது. தனிமை இல்லாமல் கவிஞனும் கலைஞனும் படைப்பாளியாக ஆகமுடியாது. ஆகவே தனிமை என்பது அன்பு இல்லாமை அல்ல, அன்பின் தோழனே.

தனிமை பிரிதலும் கூடலும் வாழ்வின் சுழற்சியாகும் ஒன்றில்லாமல் பிரிதொன்றில்லை. தனியாக இருக்கக் குழுவிலிருந்து பிரிய வேண்டியதில்லை. ஆன்மாவின் குரலுக்குச் செவி சாய்க்கக் கிடைக்கும் கணநேரம் தனிமைக்குப் போதும். அந்தக்கணத்தில் ஒருவன் தன் வாழ்க்கையை எப்படிக் கொண்டு செல்லவேண்டும் என்று தீர்மானிக்க முடியும்.

தனிமையைக் கண்டு அஞ்சி நிற்கவோ மற்றவர்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று மருகி நிற்கவோ தேவையில்லை. நீங்கள் தனியாக இல்லாமல் இருந்தால் உங்களைப் பற்றி உணரமுடியாது. அப்போது தான் யார் என்றே தெரியாத ஒரு வெற்றிடத்தில் ஒருவன் வாழவேண்டிய நிலை உருவாகிவிடும்.


தனிமை என்பது ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்தது. சிலருக்கு சுகமானதாக இருக்கும். சிலருக்கு மிகவும் கொடுமையானதாக இருக்கும்.. தனிமை நமது வாழ்வில் பலவகையான விஷயங்களை கற்றுக்கொடுக்கும். இத்தகைய தனிமையை அதிகம் நேசிக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தனிமை குறித்து ஓஷோ கூறுகையில்,

தனிமை என்பது ஆரோக்கியமானது!

அது நீங்கள் நீங்களாகவே இருக்க முடிகிற மகிழ்ச்சி!

உண்மையான தனிமையை நோக்கி செல்வதுதான் அகமுகப் பயணம்!

அங்கே உங்களோடு யாரையும் அழைத்து செல்ல முடியாது!

தியானிப்பவர் தனக்குள் செல்கிற போது வெளியுலகம் மறைந்து போகிறது!

தனிமையில் தான் பரம சுகம் தோன்றுகிறது!

தியானம் ஒரு மனிதனின் உண்மையான சுயத்தை அக நிலைப் பண்பை உணர்த்துகிறது!

தன்னுடைய உண்மையான சுயத்தை கண்டு கொண்ட ஒருவன் தனித் தன்மை உடையவன் ஆகிறான்!

தான் பெற்ற மெய்யறிவுக்கு ஏற்ப அவன் வாழ்கிறான்!!

அவனுடைய வாழ்க்கை பேரழகும் நேர்மையும் கொண்டதாக ஆகிறது!



இந்த பதிவில் தனிமை பற்றிய சில மேற்கோள்களை பார்க்கலாம்

வாழ்க்கையில் நான்

நினைத்தது எதுவும்

கிடைக்காமல்

போகும் போதெல்லாம்

ஆதரவாய் வந்து

ஆறுதல் சொல்கிறது

இந்த தனிமை

உறவுகள் எல்லாம் ஒதுங்கிக் கொள்ள.. என் உயிர் நட்பாக ஒட்டிக்கொண்டது தனிமை..

வாழ்க்கை என்னும் வரைபடத்தில்

சந்தோஷம் என்னும் நதியை தொலைத்து,

கவலை என்னும் தீவில்,

கரை ஒதுங்கி நிற்கிறேன்.

ஒரு தனி மரமாக

தனிமையை நினைத்து

கவலை கொள்ளாதே.

தனிமைதான் உலகத்தையும்

வாழ்க்கையையும் புரிய வைக்கும்.

தனிமை கொடுமை தான்,

இருந்தாலும்,

அதில் காயம் இல்லை,

காயப்படுத்த யாரும் இல்லை.

தனிமை இனிமை தான்..!

தனிமை என்பது வலி அல்ல

தனிமை என்பது வழி..

நம்மை பற்றி நமக்கே புரிய வைக்கும் நிலை..

தனித்து விடப்படும் போது தான்

நம் பலமும் பலவீனமும் நமக்கே தெரிய வரும்.

தனிமை எதை புரிய வைத்ததோ இல்லையோ

இவ்வளவு காலம் மிக பெரிய முட்டாளாக இருந்து இருக்கிறோம் என்பதை புரிய வைத்தது.

தனிமைகொஞ்சம் வித்தியாசமானது தான்

நாமாக எடுத்து கொண்டால் அது இனிக்கும்

அடுத்தவர் நமக்கு கொடுத்தால்அது கசக்கும்.

Tags

Next Story
அமேசான்ல 5000 ரூபாய்க்கு ஸ்மார்ட் டிவி வாங்க முடியுமா? இப்பொவேய் போடுங்க ஆர்டர