Spectacles Marks on Face - கண் கண்ணாடி போட்ட தழும்பு குறித்து இனி கவலைப்படாதீங்க!

Spectacles Marks on Face- கண் கண்ணாடி அணிபவர்களுக்கு இந்த டிப்ஸ் முக்கியம் (கோப்பு படங்கள்)
Spectacles Marks on Face -கண்ணாடி போட்ட தழும்பை… இயற்கையான முறையில் எப்படி மறைக்கிறதுன்னு தெரிஞ்சிக்கோங்க!
முன்பெல்லாம் 40 வயதைக் கடந்தால் தான் கண்ணாடி அணிய வேண்டும் என்ற நிலை மாறி, இப்போது சின்னச்சிறிய குழந்தைகள் கூட கண்ணாடி போட ஆரம்பித்துவிட்டார்கள். மிகவும் இளம் வயதிலேயே கண்ணாடி அணிவதால், அது இளம் பருவத்தை எட்டும் போது மூக்கின் இருபுறமும் தழும்பாக மாறுகிறது. இதையடுத்து சரியான வயதை அடைந்த பிறகு கான்டெக்ட் லென்ஸ் அணிந்தாலும், மூக்கின் மீதுள்ள தழும்பு அவ்வளவு எளிதில் மறைவது கிடையாது. இதனால் முகத்தின் அழகு கெடுவதோடு, நீங்கள் கண்ணாடி அணிந்ததற்கான அடையாளமும் நிரந்தரமாகிவிடுகிறது.
இருப்பினும், இப்போதெல்லாம் மக்கள் ஃபேஷன் காரணமாக கண்ணாடி அணிய விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் மூக்கில் கண்ணாடியின் அடையாளங்கள் தோன்றும், அவை மிகவும் அசிங்கமாக இருக்கும். நீங்களும் இந்தப் பிரச்சனையில் போராடிக் கொண்டிருந்தால், உங்களுக்காக சில வீட்டு வைத்தியங்களை தந்துள்ளோம்.
எளிமையான வீட்டு வைத்தியங்கள்
உருளைக்கிழங்கு:
கண்ணாடியால் ஏற்பட்ட மார்க்கை அழிக்க, உங்களுக்கு உருளைக்கிழங்கு சிறந்த பலனளிக்கும். இதைப் பயன்படுத்த, பச்சை உருளைக்கிழங்கை அரைத்து அதன் சாறு எடுக்கவும். இந்த சாற்றை பருத்தி பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். சில நாட்களில் வித்தியாசத்தை காண்பீர்கள்.
வெள்ளரி சாறு:
வெள்ளரிச் சாறு கண்ணாடி போட்ட அடையாளங்களை அகற்றுவதில் மிகவும் பயனுள்ளது. வெள்ளரிக்காயை சாறு எடுத்து விரலால் தழும்பு உள்ள இடத்தில் தடவினால் போதும். சில நாட்களில் இதிலிருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
ரோஸ் வாட்டர்:
சரும பிரச்சனைகளை நீக்குவதற்கு ரோஸ் வாட்டர் பெரிதும் உதவுகிறது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முகத்தில் உள்ள கண்ணாடியின் அடையாளங்களை நீக்கலாம். இதற்கு, நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒரு பஞ்சு உருண்டையை ரோஸ் வாட்டரில் நனைத்து, தூங்கும் முன் மூக்கின் அருகே இருபுறமும் தழும்பு உள்ள இடத்தில் வைக்கவும்.
ஆரஞ்சு தோல்:
ஆரஞ்சு தோல் பேஸ்டில் சில துளிகள் ரோஸ் வாட்டர் கலந்து தழும்புகள் மீது தடவவும். இதனால் ஏற்படக்கூடிய பலனை சில நாட்களிலேயே நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.
தக்காளி சாறு:
தக்காளி சாற்றின் உதவியுடன், உங்கள் முகத்தில் உள்ள கறைகள், தழும்புகளை ஈசியாக நீக்கலாம். தக்காளி சாற்றை தழும்புள்ளஇடத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.
கற்றாழை ஜெல்:
சருமத்தின் பலவகையான பிரச்சனைகளை போக்க கற்றாழை ஒரு நல்ல தீர்வாக இருந்து வருகிறது. கண்ணாடி அணிவதால் முகத்தில் ஏற்படும் தழும்புகளை மறைக்க தினமும் இரவில் தூங்கும் முன், கற்றாழை ஜெல்லை பருத்தி பஞ்சில் நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் உள்ள தழும்புகள் சில நாட்களில் மறைந்துவிடும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu