Mokka jokes: உங்களை சிரிக்க வைக்க சில மொக்க ஜோக்ஸ்
![Mokka jokes: உங்களை சிரிக்க வைக்க சில மொக்க ஜோக்ஸ் Mokka jokes: உங்களை சிரிக்க வைக்க சில மொக்க ஜோக்ஸ்](https://www.nativenews.in/h-upload/2023/09/16/1780604-jo.webp)
Mokka Jokes : நாள்தோறும் வேலைக்கு செல்பவர்கள் சிலர் பணி நிமித்தமாக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கெல்லாம் இந்த பதிவு சற்று நிம்மதியை ஏற்படுத்தும். அவ்வாறு சில ஜோக்குகளை படித்து தெரிந்துகொள்வோம்.
சார் ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
பதில்: நோயோட தான்
காதலிக்கிறங்கவுங்க ஏன் எப்ப பார்த்தாலும் பொய்யே பேசுறாங்க?
பதில்:ஏன்னா அவங்க தான் மெய் மறந்து காதலிக்கிறாங்களே.
எங்க அம்மா சர்க்கரை டப்பால உப்பு னு எழுதி வெச்சாங்க ஏன்?
பதில்: எல்லா எறும்பையும் ஏமாத்துறதுக்கு
ஒரு போலீஸ் தேங்காயை ஒடச்சி ஸ்டேஷன் க்கு எடுத்துகுடு பொன்ராம் ஏன் ?
பதில்: பொய் கைதியை துருவி துருவி கேள்வி கேக்க
எந்த ஆத்துல மீன் பிடிக்க முடியாது.?
பதில்: ஐயர் ஆத்துல
எந்த எழுத்தை எழுத முடியாது.?
பதில்: தலையெழுத்து
எந்த கடிகாரம் correct time காட்டும்.?
பதில்: எந்த கடிகாரமும் காட்டாது நம்ம தான் பார்க்கணும்.
கடற்கரையில வீடு கட்டுனா என்ன ஆகும்.?
பதில்: காசு செலவாகிடும்.
கதவு மூடிட்டு தான் மருந்து குடிக்கணுமாம் ஏன்.?
பதில்: டாக்டர் மருந்து அறை மூடி குடிக்கணும்னு சொன்னாராம்.
ஒருத்தன் speed அபைக் ஓட்டிட்டு போனான் தீடிர்னு பைக் நிறுத்திட்டினாம் ஏன்.?
பதில்: ஏன்னா அவன் வீடு வந்துருச்சா.
தலைவலிக்கு முக்கிய காரணம் என்ன.?
பதில்: தலை தான் தாங்க
எலுமிச்சைப்பழம் ஏன் மஞ்சள் நிறமாக இருக்கு.?
பதில்: ஏன்னா அது பல் வழக்கல
எந்த காட்டிலும் கிடைக்காத பூச்சி என்ன பூச்சி.?
பதில்: கண்ணாமூச்சி
டாக்டர் ஊசி போட வரும் போது ஒருத்தன் தடுத்தான் ஏன்.?
பதில்: அது தடுப்பூசி
ஒருவர் 15 மணி நேரம் chair – லே இருந்தாராம் ஏன்.?
பதில்: ஏன்னா அவர் Chairman
ஒரு பச்சை கல்லை கடலில் எறிந்தால் அது என்னவாகும்.?
பதில்: ஈரமாகும்
மரம், செடி இல்லாத காடு எது.?
பதில்: சிம்கார்டு
கல்யாண வீட்டில் ஏன் வாழை மரம் கட்றாங்க.?
பதில்: கட்டலானா கீழே விழுந்துடும்
கோலம் போடுவதற்கு முன்னடி எதுக்கு தண்ணீர் தெளிக்கணும்.?
பதில்: கோலம் போட்டதுக்கு அப்புறம் தெளிச்ச கோலம் அழிஞ்சுடும்.
ஒருத்தன் தினமும் இரவில் தலைக்கு அடில dictionary book வெச்சு தூங்குறானாம் ஏன் ?
பதில்: ஏன்னா அவனுக்கு தினமும் நைட் அர்த்தமில்லாத கனவு வருதாம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu