Somberi Chicken Recipe - சோம்பேறி சிக்கன் சாப்பிட்டு இருக்கறீங்களா? - கொஞ்சம் சுறுசுறுப்பா எப்படி செய்றதுன்னு தெரிஞ்சுக்குங்க!

Somberi Chicken Recipe-சோம்பேறி சிக்கன் சமைப்பது குறித்து தெரிந்துக் கொள்வோம் (கோப்பு படம்)
Somberi Chicken Recipe - எப்போதும் ஒரே மாதிரி சிக்கன் செய்து போரத்துவிட்டதா? சற்று வித்தியாசமான அதே சமயம் அதிகம் சிரமப்படாமல் ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சோம்பேறி சிக்கன் வறுவலை செய்யுங்கள்.
இந்த சோம்பேறி சிக்கன் ரெசிபிக்கு தக்காளி எதுவும் தேவையில்லை. முக்கியமாக அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. சிக்கனைக் கழுவி மசாலாக்களைப் போட்டு பிரட்டி, அடுப்பில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சோம்பேறி சிக்கன் தயார்.
இந்த சோம்பேறி சிக்கன் வறுவல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். குறிப்பாக இது பேச்சுலர்களுக்கு ஏற்ற ரெசிபி என்றே கூறலாம். உங்களுக்கு சோம்பேறி சிக்கன் வறுவல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள சோம்பேறி சிக்கன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* பெரிய வெங்காயம் - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* வெண்ணெய் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியில் கழுவிய சிக்கன், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, கசூரி மெத்தி, சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து கைகளால் நன்கு பிசைய வேண்டும்.
* பின்பு அந்த வாணலியை அப்படியே அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து, மூடி வைத்து 10 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் சிறிது வெண்ணெய் சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு, 2 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான சோம்பேறி சிக்கன் தயார்.
இதற்கு சோம்பேறி சிக்கன் என பெயர் வரக்காரணம், இது பேச்சலர்களுக்கு உடனடியாக தயாராகி விடும் சிக்கன். இதற்காக மணிக்கணக்கில் அவர்கள் சிரமப்பட வேண்டியது இல்லை. அதே போல், அசைவம் சமைப்பது என்றால் நிறைய வேலைகள் அதில் இருக்குமே என சோம்பேறித்தனமாக நினைப்பவர்களும் இதை உடனடியாக செய்துவிட முடியும் என்பதால், இந்த பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது.
சோம்பேறி சிக்கனையும் சுறுசுறுப்பாக சமைத்து சாப்பிடும்போது அதுவும் சுவையாகத்தானே இருக்கும். சாப்பிட்டு பாருங்க, அசந்துருவீங்க!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu