மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாத உறவு.

Miss You Sister Quotes in Tamil
Miss You Sister Quotes in Tamil-ஒரே குடும்பத்தில் பிறந்து, வளர்க்கப்பட்ட சகோதரர்களிடம் ஒரு கலவையான அன்பும், நட்புணர்வும் விளங்கி வரும். ஒரே ஒரு குழந்தையை மட்டும் கொண்ட குடும்பங்களில் சகோதர உறவுகள் இல்லையென்பதால், அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் வித்தியாசமான மற்றும் அற்புதமான உறவையும், சகோதர அல்லது சகோதரி பாசத்தையும் இழந்து விடுகிறார்கள்.
சகோதரர்கள் இருவருமே பிறந்ததில் இருந்தே ஒருவரையொருவர் அறிவார்கள். சகோதர உறவு முறைகள் ஒட்டு மொத்த குடும்பத்தின் நிலையையும் உணர முடியும். மிகவும் நல்ல புரிந்துணர்வுடன் இருக்கும் குடும்பங்களில் உள்ள சகோதரர்கள், நட்புக்கு எடுத்துக்காட்டாக இருப்பார்கள்.
சகோதரி உறவு குறித்த கவிதைகள் உங்களுக்காக
வாழ்க்கை என்னும் பயணத்தில்
தங்கைளின் ஜன்னல் ஒர
இருக்கைகள் அண்ணன்களே
தன் தந்தையை விட
தங்கையின் மேல் நூறு மடங்கு
பாசம் வைப்பது.அண்ணன் என்ற
ஒருவனால் மட்டுமே முடியும்
கோபத்தில் ராட்சசி ,குட்டிப்பிசாசு
என்று சொன்னாலும் எல்லா
அண்ணன்களின் மனதிலும் எப்போதும்
தன் தங்கை தேவதையே

ஒரு தங்கை அவள்
அண்ணன் மீது காட்டும்
அதிகபட்ச பாசமே,
அவன் மீது காட்டக் கூடிய
சண்டை தான்
சிறு வயதில் தேவதையை காண ஆசைப்பட்டேன் அப்போது எனக்கு தெரியவில்லை கூட விளையாடுவது ஒரு குட்டி தேவதை என்று
கண்கள் அழவில்லை ஆனாலும் இதயம் அழுகிறது என் தங்கை திருமணமாகி பிரிந்து செல்கையில்
தம்பிகளுக்கு தான் தெரியும்
தன் அக்காவின் அரவணைப்பும்
கண்டிப்பும் இன்னொரு
தாய்க்கு சமம் என்று
எனக்கு எதுன்னாலும்
என் அண்ணன் வருவான்
என்று நம்பும் தங்கையின்
நம்பிக்கையே அண்ணனின் பலம்
என்னை புரிந்து கொள்ளாமல்
சண்டையிடுபவள் என் மனைவி;
என்னை புரிந்து கொண்டு
சண்டையிடுபவள் என் தங்கை
உடன் பிறந்தால் மட்டும் தங்கை
அல்ல;உள்ளத்தால் அன்பை
உணர்ந்து அண்ணா என்று
என்னை அழைத்தால் அவளும்
என் தங்கையே
தம்பியின் கோபத்திற்கு
அடங்கவும் அதே தம்பியை
தன் அன்பால் அடக்கவும்
தெரிந்தவள் அக்கா
நேரம் காலம் பார்த்து
சண்டை போடுவதல்ல
அக்கா தம்பி பாசம்..
நினைத்த நேரம் எல்லாம்
சண்டை போடுவது தான்
அக்கா தம்பி பாசம்
அக்கா தம்பி
உறவைப் பற்றி கவிதை
எழுத முயன்று தோற்றேன்.
அக்கா, தம்பி உறவே
அழகிய கவிதை
என்பதை உணர்ந்தபிறகு
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu