சுயநல உறவுகளிடம் எப்போதும் விலகியே....இருப்பது...நல்லது...

Selfish Relatives Quotes in Tamil
உறவுகள் ஒரு தொடர்கதை...என்பார்கள். அந்த வகையில் மனிதர்களாக பிறந்த அனைவருக்கும்இரு சைடு உறவுகள் உண்டு. ஒன்றுஅப்பா வகையில் மற்றொன்று அம்மா வகையில்... மற்றொன்று துாரத்து உறவு...இதில் துாரத்து உறவுகளால் நமக்கு எப்போதும் பிரச்னை இருக்காது. ..காரணம் என்னவெனில் அவர்கள் எப்போதும் நம்மிடையே துாரமாக இருப்பவர்கள். ஏதாவது வீட்டு நிகழ்ச்சி, விசேஷம் என்றால் மட்டும் சந்திக்கும் உறவு அது. மற்றபடி இடையில் எந்த வித தொந்தரவுகளும் இல்லை.
ஆனால்...அப்பா... அம்மா வகை உறவுகளில் ஏதாவது ஒரு சைடு உறவில் நெருக்கமாக பழகி இருப்பார்கள். மற்ற சைடு உறவில் கொஞ்சம் விலகியே இருப்பார்கள். இது ஒவ்வொரு குடும்பத்தினைப் பொறுத்தது. பவர் யாருக்கு அதிகமோ அந்த உறவு வலுவாகஇருக்கும்.இவர்களுக்கும் அதிக நட்பு தொடர்பு இருக்கும். இதனால் ஒரு சைடு டிஸ்கனக்ட் ஆகி விடும். அவ்வப்போது சந்திக்கும்...
ஆனால் இந்த இருபுறத்திலும் ஏதாவது ஒரு குடும்பம் மட்டும் சுயநலமாகவே இருக்கும். இரண்டு புறமும் ஒட்டிக்கொள்ளும். தேவையானவற்றை நம்மிடம் சாதித்துவிட்டு பின்னர் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவார்கள். இவர்களைப் போன்ற உறவுகளைத்தான் நாம் சுயநல உறவுகள் என அழைக்கிறோம்.தேவை என்றால் வருவதும் தேவையில்லாவிட்டால் விலகி இருப்பவர்கள் இவர்கள்.
சுயநல உறவுகளின் வாசகங்கள்இதோ.....
எந்த சூழ்நிலையலும் எவரையும் நம்பாதிருங்கள்…இப்போதுள்ள மனிதர்கள் எல்லாம் எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் துரோகமிழைக்கக் கற்றுக் கொண்டுள்ளனர்..!
தேவைக்காக பேசுவோரையும் பிடிக்காதுதேவைக்காக பேசவும் தெரியாது.
மிகவும் நம்பிக்கை வைத்த இடத்தில் தான்…மிகவும் மோசமாக அவமானப்பட்டு நிராகரிக்கப்பட்டிருப்போம்…!!!
ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்கள்;ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாக இருக்காதீர்கள்…
இன்று பழகுவார், நாளை விலகுவர் உறவு தொடங்கும் முன்பே பிரிவிற்கும் தயாராகிக்கொள்!
பல முகமூடி மனிதர்களால் சில நல்ல மனிதர்களும் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறார்கள் இன்று…
இந்த உலகத்தில் யாரையும் நம்பாதே…
உன்னிடம் ஒன்று பேசிவிட்டு வெளியே ஒன்று பேசும் கேவலமான மனிதர்கள் வாழும் உலகம் இது…!
ஏமாந்து போறத விட பெரிய வலி,நாம் ஏமாந்துட்டு இருக்கோம்ன்னே இருக்குறது தான்…!!!
போலியானவர்கள் உங்களைப் பற்றி உங்களுக்கு முன்னால் நல்லதும், உங்களுக்குப் பின்னால் கெட்டதும் பேசுவார்கள்…
என்னை பிடித்து பழகியவர்களை விட என்னை ஒரு பொழுதுபோக்காய் நினைத்து நடித்து பழகியவர்கள் தான் அதிகம்…
தேவைக்காக பழகும் நண்பர்களை விட பழி தீர்க்கும் எதிரிகளே மேலானவர்கள்…
நம்மை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துபவர்களைத் தான் நாம் தேவையானவர்கள் என நம்பிக் கொண்டிருக்கிறோம்..
எவ்வளவு தான் பாசம் வைத்தாலும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு …நாம் மூன்றாவது மனிதர்கள் தான்..
கழன்றுவிழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்று நம்புகிறோம்..
துரோகத்தின் முதல் விதை அதிகபட்ச நம்பிக்கையால்தான் தூவப்படுகிறது !!!
போலி நண்பர்கள் நிழல் போன்றவர்கள் அவர்கள் உங்களை வெயிலில் பின்தொடர்வார்கள் ஆனால் இருட்டில் விட்டுவிடுவார்கள்…
காயப்படுவதற்குப் பழகுங்கள் உங்களுக்காக நிறைய போலி நபர்கள் காத்திருக்கிறார்கள்.
முகத்திற்கு முகமூடி போடுபவர்களை விட, அகத்திற்கு முகமூடி போடுபவர்கள் அதிகம் தான்..!
விஷத்தோடு பிறந்த பாம்பின் பிறவி குணத்தை மாற்ற நினைப்பது முட்டாள்தனம்..
அது போல் தான் சில உறவுகளும்..
வேசம் போடும் உறவுகளுக்கு நடுவில் உண்மையான பாசம் தோற்றுத்தான் போகிறது…
மானங்கெட்ட மனசுக்கு தான் தெரியவில்லை அது பாசம் அல்ல வேசம் என்று…!!!
நிரந்தரம் இல்லாத உலகம் சுயநலம் நிறைந்த உலகம் யாரும் யாருக்காகவும் இல்லை என்பது மட்டும் இங்கு நிஜம்…
போலியான உறவுகளுடன் பொய்யான வாழ்க்கை வாழ்வதை விட 'தனிமை' ஒன்றும் கொடுமை அல்ல…!
உண்மை இல்லாத உறவுகளுடன் ஒட்டி இருப்பதைவிட ஒதுங்கி இருப்பதே நல்லது…அன்பிற்கு அதிகம் ஆசைப்படாதே….
ஆரம்பத்துல மனதை அள்ளுவாங்க பின்பு மனதை கொல்லுவாங்க…
முகத்திற்கு முன்னால் பாசமும் …முதுகிற்கு பின்னால் வேசமும் போடும் உலகம் இது…!
சுடுகாட்டு பேயை நம்பு சொந்தகார னை நம்பாதே
தன் பொது நலத்திற்காக, நம்மை பலர் சுயநலமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள..!
வாழ்க்கை நேர்மையாக உள்ளவனை அழ வைக்கிறது நேரத்திற்கு ஏற்ப மாற்றி பேசுபவனை வாழ வைக்கிறது…
போலியானவர்கள் மேகங்கள் போன்றவர்கள், அவர்கள் களைந்து போனால் அந்த நாட்கள் வெளிச்சமாயிருக்கும்.
கண்மூடித் தனமாக ஒருவரை நேசித்து விட்டால்,அவர்கள் சொல்லும் பொய்கள் கூட உண்மையாகவே தெரிகிறது…!!
போலியான உறவுகளுடன் பொய்யாக வாழ்வதை விட , தனிமையே சிறந்தது
உங்கள் உண்மையான நோக்கத்தை மறைக்காதீர்கள், ஏனென்றால் காலம் எல்லாவற்றையும் அம்பலப்படுத்தும், எனவே உண்மையாக இருங்கள், போலியாக அல்ல
"உங்கள் கெட்ட நேரத்தில் உங்களுடன் நிற்கும் நண்பர்களை மதியுங்கள், உங்கள் கெட்ட நேரத்தில் உங்களை விட்டு வெளியேறுபவர்களிடமிருந்து விலகி இருங்கள்"
"வாழ்க்கையில் ஒரு போலியானா உறவை விட, எதிரிகளே மேல்"
"யார் உண்மையானவர்கள், யார் போலியானவர்கள் என்பதை காலம் காட்டும்"
உங்கள் பலவீனங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள், ஏனென்றால் உங்களுக்கு எதிராக யார் அவற்றைப் பயன்படுத்துவார்கள் என்று உங்களுக்குத் தெரியாது
சில நேரங்களில் நீங்கள் ஒரு முட்டாள் என்று பாசாங்கு செய்ய வேண்டும், ஏனென்றால் அவர்களால் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை பார்ப்பதற்காக
ஒருபோதும் யாரையும் சார்ந்து இருக்காதீர்கள், ஏனென்றால் அவர்கள் எப்போது உங்களை விட்டு வெளியேறுவார்கள் என்று உங்களுக்குத் தெரியாது
உன்னை விரும்புவதாக யாராவது சொன்னால் எளிதில் நம்பி விடாதே, ஏனென்றால் அவர்கள் எப்போது மனம் மாறுவார்கள் என்று உங்களுக்குத் தெரியாது
போலியானா உறவுகள் எப்போதும் உங்களுக்கு உதவுவது போல் என்று செயல்படுகிறார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் உங்களுக்கு உதவ விரும்பவில்லை
வாழ்க்கையில் ஒரு சிலரை மட்டுமே நம்புங்கள், ஏனென்றால் யார் உண்மையானவர் என்று உங்களுக்குத் தெரியாது
வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு போலி மனிதர்கள் இருந்தால், அவர்கள் உங்களை எப்போது தாக்குவார்கள் என்று உங்களுக்குத் தெரியாததால் கவனமாக இருங்கள்
உங்கள் வாழ்க்கை போலி மனிதர்களால் நிறைந்திருக்கும் போது யாருக்கு எதிரி தேவை
காலம் எல்லாவற்றையும் அம்பலப்படுத்தும், ஏனென்றால் போலியான விஷயங்களும் மனிதர்களும் வாழ்க்கையில் நீண்ட காலம் நீடிக்க மாட்டார்கள்
அந்த நட்பான முகத்தின் பின்னால் என்ன அசுரன் ஒளிந்திருக்கிறான் என்று உனக்குத் தெரியாது
விசுவாசமான மனிதர்கள் கிடைப்பது அரிது ஆனால் போலி மனிதர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்
ஒருவரின் செயல் அவர்களின் வார்த்தைகளுடன் பொருந்தினால் அவர்களை நம்புங்கள்
உங்களால் உண்மையாக இருக்க முடியாதபோது, போலியான வாக்குறுதிகளை அளிக்காதீர்கள்
போலியானவர்கள் உங்களைப் பற்றி உங்களுக்கு முன்னால் நல்லதும், உங்களுக்குப் பின்னால் கெட்டதும் பேசுவார்கள்
என்னைப் பயன்படுத்த என் வாழ்வில் நீ வந்தாய் என்றால், நான் உன்னை என் வாழ்க்கையிலிருந்து குப்பை போல தூக்கி எறிவேன்
உண்மையானவர்கள் யார் என்று நீங்கள் கண்டுபிடிக்க விரும்பினால், அவர்களின் முகத்தை அல்ல இதயத்தை பாருங்கள்
இந்த உலகில் மிகவும் நல்லவராக இருக்காதீர்கள்.. உங்களை முட்டாளாக்க அனைவரும் முகத்தில் முகமூடி அணிந்திருப்பார்கள்
ஒருமுறை நான் உன்னை நம்பினேன்... ஆனால் நீ அந்த நம்பிக்கையை உடைத்தாய்.. இப்போது நான் உன்னை விட்டு விலகி இருக்க விரும்புகிறேன்
என் வாழ்க்கையில் போலியானவர்களுக்கு இடமில்லை என்பதால் நீங்கள் வெளியேறுவது நல்லது
முகத்திரை அணிந்து பாசாங்கு செய்பவரிடம் இருந்து விலகி இருங்கள்...
வார்த்தைகளை அல்ல, செயல்களை நம்புங்கள்
சில சமயங்களில் போலி மனிதர்களை கூடவே வைத்திருப்பது நல்லது, ஏனென்றால் உண்மையானவர்கள் யார் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்
விழிப்புடன் இருங்கள் .. உங்கள் வாழ்க்கையில் உண்மையானவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியாததால்,..
போலி உறவுகள் எப்போதும் உங்களை வீழ்த்த முயற்சி செய்வார்கள்
போலி நபர்களிடமிருந்து விலகி இருங்கள், ஏனென்றால் அவர்கள் உங்களை எப்போது தூக்கி எறிவார்கள் என்று உங்களுக்குத் தெரியாது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu