Sambar Recipe - வெண் பொங்கலுடன் ருசிக்க முருங்கைக்காய் சாம்பார் செய்வது எப்படி ?

Sambar Recipe-பொங்கலுடன் ருசிக்க முருங்கைக்காய் சாம்பார் (கோப்பு படம்)
Sambar Recipe - வெண் பொங்கலுடன் ருசிக்க முருங்கைக்காய் சாம்பார்
வெண் பொங்கலுடன் முருங்கைக்காய் சாம்பார் ருசித்திட முருங்கைக்காய் சாம்பார் ரெசிபி தரப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு வெண் பொங்கல் சாம்பாரை ருசிப்பதை விட வேறெதுவும் சிறப்பாக அமைந்திட முடியாது. வெண் பொங்கல் சமைப்பது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு சாம்பார் சமைப்பதும் அவசியமாகும். ஏனென்றால் சாம்பார் செய்வதில் குளறுபடி ஏற்பட்டால் வெறும் பொங்கலை மட்டும் சாப்பிட முடியாது. அதனால் சாம்பார் செய்யும் போது கவனம் தேவை.
பொங்கல் சாம்பார்
செய்யத் தேவையானவை
துவரம் பருப்பு
பாசி பருப்பு
இரண்டு முருங்கைக்காய்
சின்ன வெங்காயம்
தக்காளி
பூண்டு
பச்சை மிளகாய்
காய்ந்த மிளகாய்
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
தனியா தூள்
சீரகம்
கடுகு
வெங்காயம்
கறிவேப்பிலை
கொத்தமல்லி
உப்பு
நெய் நல்லெண்ணெய்
முருங்கைக்காய் சாம்பார் செய்முறை
முதலாவதாக குக்கரில் ஒரு கப் துவரம் பருப்பு, அரை கப் பாசி பருப்பு போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றவும்
அதன் பிறகு இரண்டு முருங்கைக்காயை நன்கு கழுவி தலா ஐந்து துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்
முருங்கைக்காயை முதலிலேயே சேர்க்க காரணம் அது நன்கு வெந்து சாம்பாருடன் கலக்க வேண்டும்
ஐந்து பூண்டு, 15 சின்ன வெங்காயம் , தேவையான அளவு கறிவேப்பிலை, மூன்று பச்சை மிளகாய், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் போடவும்
தொடர்ந்து ஒரு மீடியம் சைஸ் தக்காளியை நான்காக நறுக்கி குக்கரில் போட்டு அனைத்தையும் நன்கு கிளறிவிட்டு மூடிவிடவும்
குக்கர் நான்கு - ஐந்து விசில் அடித்திருக்கும் வரை காத்திருங்கள். ஐந்து விசில் அடித்தவுடன் அடுப்பை ஆஃப் செய்துவிடவும்
தற்போது ஒரு கடாயில் பருப்பை தாளிக்கும் அளவிற்கு தேவையான நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து, மூன்று காய்ந்த மிளகாய்களை கிள்ளி போடவும்
இவற்றுடன் ஐந்து சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு தாளிக்கவும்
நன்றாக வதங்கி வரும் நேரத்தில் இரண்டு மீடியம் சைஸ் தக்காளியை நறுக்கி போடவும்
அதனுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் தேவையான அளவு சேர்க்கவும், கொஞ்சம் தண்ணீரும் சேர்க்கலாம்
இந்த நேரத்தில் வேகவைத்த பருப்பு மற்றும் முருங்கைக்காயை கடாயில் போடவும்
தேவையான அளவிற்கு மட்டுமே தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்குக் கொதிக்க விடவும்
இறுதியாகப் பெருங்காயம் , கொத்தமல்லி போட்டு தேவையான அளவிற்கு நெய் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க விட்டால் சுவையான சாம்பார் ரெடி.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu