சேலம் மாவட்டத்தில் காண வேண்டிய இடங்கள் என்னென்ன தெரியுமா?

சேலம் மாவட்டத்தில் காண வேண்டிய இடங்கள் என்னென்ன தெரியுமா?
X

Salem tourist attractions- சேலம் மாவட்டத்தில் காண வேண்டிய இடங்கள் ( கோப்பு படங்கள்)

Salem tourist attractions- மாம்பழ நகரமான சேலத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

Salem tourist attractions- தித்திக்கும் மாம்பழங்களுக்கு பெயர் பெற்ற சேலம் மாநகரம் தமிழகத்தின் ஐந்தாவது பெரிய மாநகராட்சி ஆகும். சேலம் மாவட்டம் நான்கு திசைகளிலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு சுற்றிப் பார்ப்பதற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும், ஆன்மிக தலங்களும் இருக்கின்றன.

ஏற்காடு

கிழக்கு தொடர்ச்சி மலை தொடரின் ஒரு பகுதியாக ஏற்காடு உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரத்து 326 அடி உயர மிகவும் குளிர்ச்சியான மலைப்பிரதேசமாக அமைந்திருக்கிறது. ஏழைகளின் ஊட்டி என்று சொல்லப்படும் ஏற்காட்டில் கிளியூர் நீர்வீழ்ச்சி, படகு இல்லம், தாவரவியல் பூங்கா, சேர்வராயன் கோயில் என சுற்றிப் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன.


மேட்டூர் அணை

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாக விளங்குகிறது. இந்த அணையின் உயரம் 214 அடி ஆகும். இதில் 120 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கின்றனர். அணைப்பகுதியில் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இது சேலத்தின் பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

1008 லிங்கம் கோயில்

சேலத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து வெளியே வரும் வரை மொத்தம் ஆயிரத்து 8 லிங்கங்கள் இருக்கும்.

முத்துமலை முருகன் கோயில்

சில ஆண்டுகளுக்கு முன்பு முருகரின் பக்தர்கள் ஒன்று சேர்ந்து உலகிலேயே மிகப்பெரிய முருகர் சிலையை அமைத்துள்ளனர். இதன் உயரம் 146 அடி ஆகும்.


குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா

ஏற்காடு மலையடிவாரத்தில் இந்த பூங்கா அமைந்துள்ளது. இங்கு சென்றால் குரங்குகள், மான்கள், வெள்ளை மயில், முதலைகள், வெளிநாட்டு பறவைகள் உட்பட பல உயிரினங்களை பார்க்க முடியும். வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அடுத்தபடியாக உள்ள பெரிய உயிரியல் பூங்கா இது தான்.

கைலாசநாதர் கோயில்

தாரமங்கலத்தில் உள்ள இந்த கோயில் சிற்பக் கலைக்கு மிகவும் பெயர் பெற்றது. 10 ஆம் நூற்றாண்டிலேயே இந்த கோயிலின் ஒரு சில பகுதிகள் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றன. வாலியை இராமன் வதைக்கும் சிற்பம் மிகவும் வியப்புக்குரியது. அங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல்லை உருட்ட முடியும். ஆனால் வெளியே எடுக்க முடியாது.

சங்ககிரி கோட்டை

இது சேலத்தில் இருந்து 38 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. 15ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசரால் இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறை இந்த கோட்டையை பராமரித்து வருகிறது. வரி வசூல் கிடங்காக ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை பயன்படுத்தியுள்ளனர். தீரன் சின்னமலையை தூக்கிலிட்டதும் இங்கே தான்.


சுகவனேஸ்வரர் கோயில்

பழைய பேருந்து நிலையத்தின் அருகே அமைந்துள்ள இந்த கோயில் 13 நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். சேலத்தின் முக்கிய வழிபாட்டு தலமாக இந்த கோயில் விளங்குகிறது.

பொன்மான் கரடு

சேலத்தின் பத்து கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பனைமரத்துப்பட்டி அருகே இந்த இடம் அமைந்துள்ளது. இங்கு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து பார்த்தால் மான் பாறை இடுக்குகளில் இருப்பது போல தெரியும். ஆனால் நெருக்கமாக சென்றால் அப்படி இருக்காது. அதனால் பொய்மான் கரடு என்று அழைக்கப்படுகிறது.

Tags

Next Story