வாழ்க்கையே சந்தோஷமும் சோகமும் கலந்ததுதாங்க... படிங்க..

Bad Life Quotes in Tamil
X

Bad Life Quotes in Tamil

Bad Life Quotes in Tamil-வாழ்க்கை என்பது மிகவும் ஆத்மார்த்தமானது. ரசித்து வாழ்ந்தால் நாம் எந்தவித மன உளைச்சலின்றி சந்தோஷமாக வாழலாம். பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை யாருக்கேனும் உண்டா?

Bad Life Quotes in Tamil

Bad Life Quotes in Tamil

வாழ்க்கை என்பது ஆத்மார்த்தமானதுங்க... அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் என்பது போல ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பல பிரச்னைகள் உண்டு. அது அவரவர்களின் வசதி வாய்ப்புக்கேற்ப மாறுபடும் அவ்வளவுதாங்க.

ஏழைக்கு ஒரு பிரச்னை என்றால், பணக்காரர்களுக்கு வேறுமாதிரி பிரச்னை உண்டுங்க. பிரச்னை இல்லாத மனிதர்கள் யாருமே இவ்வுலகில் கிடையாது. வாழ்க்கை என்பதே பள்ளம் மேடு போன்றதுதாங்க... சந்தோஷமும், துக்கங்களும் மாறி மாறி வரும்.ஆசையே துன்பத்துக்கு காரணம் .. அதிக ஆசைப்படுபவர்கள் எல்லோரும் பிரச்னைகளை பல ரூபங்களில் எதிர்கொள்றாங்க.. ஏதோ ஒருசிலர் மட்டும் இதிலிருந்து தப்பிக்கிறாங்க.அதேபோல ஏமாற்றங்களும் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக ஏற்படுகிறது. எதிர்பார்ப்பு இருப்பவர்கள் ஏமாற்றங்களும்இருக்கத்தான் செய்யும். எல்லா எதிர்பார்ப்புகளும் நிறைவேறும்னு எதிர்பார்க்க கூடாதுங்க.

இதேபோல் வாழ்க்கையிலே ஏற்படக்கூடிய இழப்புகள், ஏமாற்றம் தோல்வி ஆகியவற்றை அனைவருமே சகித்துக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். இழப்புகளுக்கோ, துன்பங்களுக்கோ நாம் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தால்நமக்குஆரோக்ய பாதிப்பு ஏற்படுவதோடு எதிர்கால செயல்பாடுகள் அனைத்துமே ஸ்தம்பித்துவிடும் என அனைவரும்நினைக்க வேண்டும். தற்கால பரபரப்பு உலகில் எதற்குமே நேரம் இல்லாத நிலையில் நடந்தவைகளை கண்டு யோசித்துக்கொண்டிருக்காமல் எதிர்கால செயல்பாடுகளுக்கு திட்டம் போட யோசிக்கணும் அப்போதுதான் வாழ்க்கையில் அனைவருமே ஜெயிக்க முடியும்.. நடந்ததை நினைத்து வருத்தப்படுவது என்பது நம்மை முடக்கிவிடும்..

Bad Life Quotes in Tamil

Bad Life Quotes in Tamil

சோக வாழ்க்கைக்கான வாசகங்கள் இதோ....

கடலில் நின்று கலசத்தை கவிழ்த்தான் சாம்பலாக கரைந்து சென்றார் நீந்த கற்றுக்கொடுத்த தந்தை..

நிஜத்தில் பாதி கனவில் மீதி என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது...வேடிக்கை பார்ப்பவனுக்கு இழப்பின் மதிப்பு புரியாது

நம் உறவாக இல்லாத போதும் அவர்களின் மரணம் மனதை பாதிக்கதான் செய்யுதுவழக்கம்போல் உலகம் அமைதியாகவே இயங்கிக்கொண்டிருக்கு ஆங்காங்கே உயிர்கள் துடிப்பதை ரசித்தவண்ணம்...

நினைவுகளும் சுமை மனதுக்கு தொல்லையாகும் போதுநேசித்தலை விட பிரிதலின் போது உன் நினைவுகள் இரட்டை சுமை... மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு உன் இதயத்தை...

ஏற்றுக்கொள்ள தாங்க முடியாத இழப்புகளிலும் துயரத்திலும் விதிமேல் பழிபோட்டு மனதை தேற்றிக்கொள்வோம்

கண்களில் மிதந்த அழகிய காட்சியெல்லாம் சில நேரங்களில் தூசியாகி கண்ணீரை தருகிறது.

தொட்டுச்செல்லும் நினைவுகளைதான் விடாமல் துரத்துகின்றது மனம்...சில ரணங்களை மறக்க ஏதோவொன்றை மனம் ரசிக்கதான் வேண்டும்

நிஜத்தின் வலியில் கற்பனை எல்லாம் இறந்து போனதுசில நேரங்களில் தனிமை கடினம் சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்...!

Bad Life Quotes in Tamil

பசித்தவருக்கு தெரியும் உணவின் அருமை... இழந்தவருக்கு புரியும் உறவின் அருமை....

.சிரித்த நிமிடங்களை விட, அழுத நிமிடங்களே... என்றும் மனதை விட்டு நீங்குவதில்லை....சிலரது வாக்குறுதிகள் தண்ணீரில் எழுதும் எழுத்துக்களை போன்றதே....

புகைப்படத்திலும் புன்னகைப்பதில்லை புன்னகைப்பதே மறந்துவிடுகிறது சிலருக்கு...

பிரிவின் வலி பிரிந்தவர்களுக்கு மட்டுமல்ல பிடித்தவர் அருகில் இல்லாதவர்களுக்கும் தான்...

சில காயங்கள் ஆறாதிருப்பதே நல்லது மீண்டும் காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க...

பேசி பயனில்லாத போது மெளனம் சிறந்தது பேசியே அர்த்தமில்லாத போது பிரிவே சிறந்தது

நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு இருந்து விட்டால் நினைவின் மொழியும் பிரிவின் வலியும் உணர முடியாமலே போய்விடும்

பிரிந்து போவாய் என தெரியும் மறந்து போவாய் என் தெரியாது

வானவில்லாய் நினைவுகள் வந்து மறைந்தாலும் வண்ணங்கள் மனதில் பதிந்துவிடுகிறது

மன காயங்கள் ஆறியபோதும் நினைவுக்கு வரும்போதெல்லாம் வலிகள் மட்டும் ஏனோ புதிதாககே இருக்கின்றது

காயங்கள் உருவாக கத்திகள் தேவை இல்லை புரிதலற்ற வார்த்தைகளே போதும் வலிக்க வலிக்க நின்று கொல்லும்

புரிதல் இல்லையெனில் பிரிதலே மேல் அது எந்த உறவாக இருந்தாலும்

நேசிக்க யாரும் இல்லாத போது தான் யோசிக்க வைக்கிறது வாழ்க்கை..!!

வழிகளைத் தேடித் தான் செல்கிறோம்.. ஆனால் போகும் இடமெல்லாம் காத்திருப்பது என்னவோ வலிகள் மட்டும் தான்..

என் புன்னகைக்குப் பின்னால் ஒரு புண்பட்ட இதயம் இருக்கிறது..

Bad Life Quotes in Tamil

Bad Life Quotes in Tamil

இருப்பதை விட இழந்ததைத் தான் மனம் அதிகம் தேடுகிறது...

கவலை இல்லாத மனிதர் இருவர். ஒருவர் கருவறையில்.. மற்றொருவர் கல்லறையில்..

எளிதில் கிடைப்பதில்லை.. எல்லா சூழ்நிலைகளிளும் நம்மை புரிந்துகொண்டு நம்முடன் நமக்காக இருக்கும் உறவுகள்...

கவலைப்படத் தொடங்கும் தருணத்தில் நாம் எப்போதும் காயப்படுகிறோம்..

வாழ்வதற்க்கு ஆயிரம் காரணம் கேட்கும் மனம் தான்.. சாவதற்க்கு ஒரு காரணம் போதும் என்கிறது..

எத்தனை உறவுகள் இருந்தாலும், நம் உணர்வுகளை புரிந்து கொள்ளும் உறவு நம்மோடு இல்லையெனில் வாழ்க்கை சற்று கடினம் தான்..

உங்கள் கண்ணீரின் மதிப்பு தெரியாத நபருக்காக ஒருபோதும் அழாதீர்கள்..

பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில் இதயம் தா(தூ)ங்காது..

இதயம் வெளிப்படுத்த முடியாத வார்த்தைகள் கண்ணீர்..

தவறை சரியாக செய்தவன் தலை நிமிர்ந்து நிற்கிறான்.. நல்லதை தவறாக செய்தவன் தலை குனிந்து நிற்க்கிறான்..

அதிகம் நம்பிக்கை வைக்கும் இடத்தில் அதிகம் ஏமாற்றம் அடைகிறோம்..

வாழ்க்கை என்று வெறுத்துப் போகிறதோ.. அன்று தான், ஒவ்வொருவரும் மரணத்தை விரும்ப ஆரம்பிக்கின்றனர்..

நேரம் காயங்களை ஆற்றவில்லை என்றாலும், அது வலியை பழக்கப்படுத்தும் அளவுக்கு பழையதாக ஆக்குகிறது..

Bad Life Quotes in Tamil

எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடு. ஆனால் அது யாருக்காக என்பதில் மட்டும் கவனமாக இரு..!!

அதிகமாக எதிர்பார்ப்பது நம்மை நாமே காயப்படுத்துவதற்கான ஒரு வழியாகும்..

நான் கற்றுக்கொள்ள விரும்பாத பாடங்களை வாழ்க்கை எனக்குக் கற்றுத் தருகிறது..

எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போல தான்... தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டுமே தெரியும்.. அருகில் சென்று பாருங்கள் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்....

நான் தனியாக இருக்கும்போதெல்லாம், துக்கம் என்னைத் தன் துணைக்கு அழைக்கிறது..

உலகில் உள்ள சித்திரவதைக்கு எல்லாம் செல்லப் பெயர் வைத்தால் அது தான் காதல்!!

நாம் பெரிய மனிதர்களாக வேண்டும் என்ற பெரிய முயற்சியில், சிறிய மனிதர்களாகி விடுகிறோம்..

அன்பின் ஏணியில் நாம் எவ்வளவு அதிகமாக ஏறுகிறோமோ, அவ்வளவு கடினமாக நாம் விழுகிறோம்...

Bad Life Quotes in Tamil

புன்னகையை விட கண்ணீரை நம்பலாம். ஏனென்றால் ஒவ்வொரு கண்ணீருக்கும் பின்னால் ஒரு உண்மையான காரணம் இருக்கும்.

நான் ஒருபோதும் காதலிப்பதை நிறுத்துவதில்லை, அதைக் காண்பிப்பதை நிறுத்திவிட்டேன்...

உடலுக்கு உயிர் கூட சுமை தான்.. நாம் உயிராக நினைக்கும் ஒரு உயிர் நம்மை மறந்து போகும்போது...

என்னைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு எவரும் என்னுடன் பழகவில்லை.. என்னை மறந்துவிடும் அளவிற்கு நானும் எவரிடமும் பழகவில்லை..

வாழ்க்கையில் கடினமான பகுதி புன்னகையை போலியாகக் காட்டவும், கண்ணீரை நிறுத்தாமல் மறைக்கவும் முயற்சிப்பது.

ஒருவரின் மனதை புரிந்துகொள்ள முடியவில்லையே என்னும் வேதனையை விட, முழுமையாக மனதை வெளிப்படுத்தியும் ஒருவர் புரிந்துகொள்ளவில்லை என்னும் வேதனை அதிகம்!!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!