சோகமாக இருக்கிறீங்களா?... வாசகத்தினை படியுங்களேன்....

சோகமாக இருக்கிறீங்களா?...  வாசகத்தினை படியுங்களேன்....
X
Sad Quotes in Tamil-வாழ்க்கையில் கஷ்டம் என்பது வராமல்இருக்கவே இருக்காது. கஷ்டங்கள் வரும்போது நாம் மனதைரியத்துடன் எதிர்த்து போராட வேண்டும். சோகம் என்பது நிரந்தரமானது அல்ல..

Sad Quotes in Tamil-



sad quotes in tamil

வாழ்க்கை என்பது ஆத்மார்த்தமானது. அன்பு, பாசம், நேசம், பக்தி, உள்ளிட்ட நல்ல பண்புகளை கொண்டது. அதேபோல் வாழ்க்கையானது எப்போதும் சந்தோஷத்தையோ, அல்லது எப்போதும் சோகத்தோடு இருக்கக்கூடிய நிலையானது அல்ல.

எப்படி? ரோடுகளில் பள்ளம், மேடு போல் மாறி மாறி வருகிறதோ அதுபோல்தான் வாழ்க்கையிலும் இன்பங்களும், துன்பங்களும் மாறி மாறி வரக்கூடியவை. எதுவுமே நிரந்தரமானது அல்ல. எனவே வாழ்க்கையே ஒரு போராட்டந்தான். போராடித்தான் ஜெயிக்க வேண்டிய செயல்கள் இருக்கும்.எளிதாக வெற்றி பெறக்கூடிய செயல்களும் இருக்கும்.

எதுவுமே அந்தந்த பிரச்னைகளை மையமாக கொண்டது. பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை ஏது? பிரச்னைகளை எதிர்நோக்க வேண்டுமே தவிர ஓடி ஒளிந்துகொள்ளக்கூடாது.தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். பிரச்னைகளை கண்டு ஓடி ஒளிந்தால் அவர்களுடைய மனநலம் நிரந்தரமாகவே பாதிப்படையும். எனவே சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொண்டு பிரச்னைகளை எதிர்த்து போராடவேண்டும். வாழ்க்கையில் வரும் சோகங்கள் அனைத்துமே நிரந்தரமானது அல்ல...அது அவ்வ்போது வந்து போக கூடியது. மகிழ்ச்சியும் , சோகமும் மாறி மாறி வருவது தான் வாழ்க்கை . சரிங்க...

சோகமான நேரத்துக்கான வாசகங்கள் இதோ படியுங்க...

sad quotes in tamil

விளக்கின் அடியில் படர்ந்திருக்கும் இருள், யாருக்கும் தெரிவதில்லை! சிரிப்பின் பின்னால் சிதறிக் கிடக்கும் சோகம் யாருக்கும் புரிவதில்லை!

கெட்டவன் சாகும் போது தான் கஷ்டப்படுவான். நல்லவன் சாகுற வரைக்கும் கஷ்டப்படுவான்.

வறுமை என்பது பணமும் பொருளும் மட்டும் அல்ல! அன்பின் வறுமைதான் உலகில் அதிபயங்கரமானது!

ஒருமுறை உதிர்ந்து விட்டால் மறுமுறை அதே அளவில் பூப்பது இல்லை நம்பிக்கை!

நினைத்தது போல் எல்லாம் நடந்தது... ஆனால் கனவுபோல், எல்லாம் ஒருநொடியில் நடந்து முடிந்துவிட்டது!

விருப்பத்தோடு வாழ்பவர்களை விட, விதி என்று வாழ்பவர்களே இந்த உலகில் அதிகம்...

நாம் தேவையில்லை என்று சிலர் நினைக்க துவங்கும் முன், விலகி நிற்க கற்று கொள்வது சிறந்தது.

பல கனவுகளோடு வாழ நினைத்தவர்கள் வாழ்க்கை, கடைசியில் ஒரு கனவாகவே கடந்து போகிறது!

சில கனவுகளை நிஜமாக எண்ணி மகிழ்வதும், நிஜங்களைக் கனவாக எண்ணி மறப்பதும் தான் வாழ்க்கை!

நான் உன் கூட இல்லன்னாலும் உன் கிட்ட, பேசலன்னாலும், எப்பவும் நான் உன்ன நெனச்சிக்கிட்டே தான் இருப்பேன்!

உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே! ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன!

யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினைப்பவன் தான் எல்லோராலும் கஷ்டத்தை அனுபவிக்கிறான்.

தலையில் அதிக பாரம் வைத்து நடப்பவர்களை விட, மனதில் அதிக பாரம் வைத்து நடைபிணமாய் வாழ்பவர்களே இங்கு அதிகம்!

காயமும் வலியும் பழகிப்போவது போல், வாழ்க்கை பழகுவது இல்லை. அவ்வளவு எளிதில்...

காயப்பட்டாலும் சரி, காயப்படுத்தினாலும் சரி, கலங்குவது என்னவோ கண்கள் தான்!

அவமானங்கள் கற்று தந்த பாடங்கள் அவ்வளவு எளிதில் மறக்காது!

காயங்கள் குணமாகும், சில காலம் காத்திரு! கனவுகள் நினைவாகும், சில காயம் பொறுத்திரு!

காலையில் உதிக்கும் கதிரவனும் கவலைகொள்ளும்... அன்பே உந்தன் கலங்கிய விழி கண்டால்!

பிறருக்கு பாரமாய் இருப்பதை விட, சிலதருணத்தில் நாம் ஒதுங்கி இருப்பதே நல்லது!

நல்லது செய்து கெட்டவன்னு பேர்வாங்குறதவிட, கெட்டவன் என்ற முகமூடிக்குள், நல்லவனாகவே இருக்கலாம்!

தேவைப்படும்போது பழகுவதும், தேவை முடிந்தவுடன் எடுத்தெறிவதுமாக இருக்கும் வரை, மனித வாழ்வில் ஏமாற்றங்களும், தோல்விகளும் தொடர்ந்துகொண்டே தான் வரும்!

இன்று நான் உன்னை தேடுவது போல், என்றோ ஓர் நாள் என்னையும் நீ தேடுவாய்!

களைந்து செல்லும் மேகங்கள் தொலைந்து போவதில்லை! அதுபோல, பிரிந்து சென்றாலும் நம் பாசம் மறந்து போவதில்லை!

பிரிவின் வலியே பிடித்ததின் இறப்பின் வலிக்கு உதாரணம்!

புரிந்து கொண்டதை விட, தவறாக புரிந்து கொண்டது தான் வேதனையில் மிக சிறந்த வேதனை!

மாயமானவர்களால் மட்டும் தான் நம் வாழ்க்கையில் மாற்றங்களைத் தர இயலும்!

நீதான் முக்கியம் என தொடங்கும் உறவுகள் எல்லாம், யார் நீ என்று முடிகிறது!

அளவு கடந்த அன்பினால் வரும் கோபங்களையும் புரிந்து கொள்ளாவிட்டால், அதுவும் சில நேரம் பிரிவுக்கு காரணமாகிறது!

விட்டு கொடுப்பதில் நான் முதலிடம் பிடித்தேன்! என்னை விட்டு செல்வதில், அவள் முதலிடம் பெற்றுவிட்டாள்!

ஏமாற்றங்களுக்குக் கூட சிலரை மிகவும் பிடித்துவிடுகிறது, சோகங்களை மறைத்து வெளியே சிரிப்பதால்!

காதலிக்க இங்கு பலருக்கும் காரணம் கிடைப்பதில்லை!

அக்காதலை இழக்க, இங்கு பலருக்கும் எளிதில் காரணம் கிடைத்து விடுகின்றது.

அனைத்தும் இருந்தும் அனாதையாக உணர்கிறேன்! உண்மை உறவை இழந்ததால்...


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story