சோக காதலைப் பற்றி தெரியணுமா? அழகான தமிழ் வார்த்தைகளில் படியுங்க....
Tamil Sad Story
Tamil Sad Story-காதல் அழிவதில்லை, காதல் ஓய்வதில்லை, காதலுக்கு கண் இல்லை, என்ற வார்த்தைகள் எல்லாம் காதலைப்பற்றிய வார்த்தைகள். அக்கால இலக்கிய காதலுக்கு எல்லாம் நாள் ஏன் வருடமே பிடித்தது. இடைக்காலத்தில் கூடி கடிதங்கள் பரிமாற்றம் மூலம் காதலை வளர்த்தனர்.
ஆனால் தற்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியினால் முகத்திற்கு முகம் பார்க்காமல் பேஸ்புக் , ட்விட்டர், வாட்ஸ்அப் மூலம் காதலை வளர்க்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.இது மட்டும் இல்லைங்க... ஒரு தலைக்காதலும் தலைவரித்தாடுகிறது. இதனால் உயிரிழப்புகள் நடந்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது.
அன்பு என்ற மூன்றெழுத்துக்களால் சேரும் காதல் கடைசியில் ஒரு சில நேரத்தில் பிரிவு என்ற மூன்றெழுத்தால் பிரிவதும் உண்டு. உண்மையான காதல் உள்ளதா? என்ற சந்தேகம் எழும் வகையில் சமுதாயத்தில் பல நிகழ்வுகள் அன்றாட செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது
அக்காலத்தில் காதலிக்க கூட பருவம் வயது இருந்தது. ஆனால் காலத்தின் கோலம் வயதறியா காலத்திலேயே காதல் என்பது அவர்களுக்கு சாதாரணமாக தெரிகிறது. ஒரு சில கும்பல் இதனை சாதகமாக பயன்படுத்தி உடல் இச்சைக்காக காதலை கொச்சைப்படுத்தி கடைசியில் மாட்டிக்கொள்வதும் உண்டு. பெண்களே தயவு செய்து வாழ்வு என்பது சாதாரணமானதல்ல. எனவே உங்களைப் பற்றி நன்கு புரிந்துகொண்டவர்களை தேர்ந்தெடுங்க... அநாவசிய கவர்ச்சி வார்த்தைகளை நம்பி வாழ்க்கையை இழந்து தனிமரமாயிடாதீங்க... உங்கள் பெற்றோர்களின் நிலையை நினைத்து பாருங்க... தற்போதுள்ள உலகில் எவ்வளவு பணம் இருந்தாலும் செலவு இருக்குதுங்க... நமக்கு நிரந்தர வருமானம் என்று இருந்தால்தான் பிரச்னையில்லாமல் வாழ முடியுமுங்க... காதலிப்பது, பிறகு கழட்டிவிடுவது என்பது தற்போதைய உலகில் சர்வ சாதாரணமாகிவிட்டது. தயவு செய்து பொறுத்திருந்து எதையும் முடிவெடுங்க.... வார்த்தைகளால் மாயாஜாலம் பண்ணுவோரிடம் ஏமாந்து விடாதீர்கள்.... யோசியுங்க... ஆக காதல் என்பது உண்மையாயிருக்க வேண்டும்.... அதுவே நிஜ காதல் .... போலி காதலை நம்பி ஏமாந்துடாதீங்க.....
-நீ கொடுத்த வலிகளும் நன்மைக்கு தான்! அவையே உணர்த்துகின்றன, நான் உயிரோடு உள்ளதை!
-வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே! நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே! முள்ளோடு தான் முத்தங்களா? சொல் சொல்!
கனவும் கற்பனையும் நீ தந்தது, வலியும் வார்த்தைகளும் நான் கொண்டது!
-பிறர் வலியை புரிந்துக்கொள்ள முடிகிறது! என் வலியை தான் புரிய வைக்க முடியவில்லை!
-என் காயங்களை என் கண்கள் கூறும் போதெல்லாம் அன்போடு ஏற்கும் என் தலையணைக்கு நன்றி பாடுவேன். என் காயங்கள் "தீரும் வரை அல்ல! என் காலம் தீரும் வரை!"
-எல்லாமே சில காலம் தான்! அது உறவாக இருந்தாலும் சரி, உயிராக இருந்தாலும் சரி!
-ஏனோ காதல் பிரிந்தது, இணையாத தண்டவாளம் போல, வாழ்க்கை கண்ணிர் பயணத்தில்!
-உன்னோடு நான் இருந்த நிமிடங்களை ரசித்தபடியே, மீண்டும் அந்த நிமிடங்கள் வருமா என்ற ஏக்கங்களுடன் நானும் என் தனிமையும்!
-இப்போதெல்லாம் குப்பைக் காகிதங்களை விட, அதிகமாக தூக்கி வீசப்படுகின்றன, காதல் இதயங்கள்!
-தன்மானம் இழந்து பிறரின் அன்புக்கு ஏங்கினால், அதற்கு கிடைக்கும் வெகுமானம் வலி நிறைந்த அவமானம் மட்டுமே!
-வந்த தூக்கத்தை துரத்தி விட்டு, வராத உன்னை பார்க்கிறேன் அறை சுவற்றில் சுவரோவியமாக உன் முகம்!
-கேட்டால் பிரிவு வந்துவிடும்! சொன்னால் மனம் குழப்பம் ஆகிவிடும்! சில உறவுகளின் நிலை...
-நேரமில்லாத நேரத்திலும், உன்னுடன் பேசினேன்! நேரம் போவதற்காக பேசுகிறாய் என்று கொஞ்சம் கூட தெரியாமல்!
-அன்பின் பூக்களுக்கு தான் விதையிட்டேன்! அதில் பிரிவின் முட்கள் எப்படி முளைத்ததென்று இப்போது வரை விளங்கவேயில்லை!
வேண்டும் என்று விரும்பிய ஒன்றை, வேறு ஒருவர் கைகளில் பார்க்கும் பொழுது வேதனை சற்று அதிகம் தான்!
-யார் முதலில் பேசுவது என்ற தலைக்கனத்தில், பலர் பேசாமலே பிரிந்து விடுகின்றனர்!
-விட்டுச் செல்லும் அவளுக்கே, வாழ்க்கை கிடைக்கும் போது, விட்டுக் கொடுக்கும் எனக்கு கிடைக்காதா என்ன?
-தொலைக்கவில்லை! இருந்தும் தேடுகிறேன், நேற்று இருந்த உன்னையும் என்னையும்!
-காதல் இல்லாத அவளும், அவள் இல்லாத நானும் முழுமையடையாத வாக்கியங்கள்!
-மின்மினிப் பூச்சியாய் வந்தவள், கானல் நீராய் மறைந்தது ஏனோ?
-அவள் சென்று விடுவாள் என தெரிந்திருந்தால், என் வாழ்நாள் முழுவதும் இருட்டிலேயே நீந்தி கழித்திருந்துப்பேன்!
-நினைவில் இருந்து நீங்கிவிடு. கனவில் வருவதை நிறுத்திவிடு! கண்கள் கொஞ்சம் காய்ந்தே இருக்கட்டும்! கண்ணீர் வராமலே காலங்கள் கழியட்டும்!
-பழகுவது தவறில்லை, அளவுக்கு அதிகமாக பாசம் வைப்பது தான் தவறு!
அருகில் இருப்பவர் அருமை தெரிவதில்லை, அவர்கள் அருகில் இருக்கும் வரை!
-எவரும் இல்லை என்றது இதயம். இருப்பினும், அவளும் இல்லை என்றது மனம்!
-கண் மூடி நான் காணும் கனவே, கண் விழிக்க நான் மறுக்கக் காரணம்!
சிரிப்பதால் வலியை மறந்து விட்டேன் என்று அர்த்தம் அல்ல! மறைத்து விட்டேன் அவ்வளவு தான்!
-நாம் நேசிக்கும் ஒருவர் நம்மை காயப்படுத்தும் போது, ஏற்படும் வலி மரணத்திலும் கொடியது!
-எல்லாம் இருந்தும், ஏதும் இல்லாதவள் போல் உணர்கிறேன். நீ என்னுடன் இருந்தும், ஏதோ ஏக்கம்! இது நிரந்தரம் தானா என்று விடையில்லை. விடைசொல்ல நீயும் இல்லை!
-மரணப் படுக்கையில் தலைவைத்து உன், விழி நோக்க காத்திருக்கும் என் மனதின் வலி உன் இதயத்தை சுடவில்லையா? மடிகிறேன் உன் நினைவுகளுடன், மறுஜென்மம் வேண்டாம் என்று!
-நம்மை ஒருவர் காயப்படுத்துவது வேதனை! அதையே நியாப்படுத்துவது நரக வேதனை.
-உன்னை மறக்கும் முயற்சியில் உன்னை விட்டு தொலைவில் வந்தாலும், தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கிறாய், தினமும் கனவில் நீ!
-அன்று கால்கள் தடுமாறவே உன் கைகள் வந்து சேர்ந்தேன்! இன்று உள்ளம் தடுமாறவே நீ எங்கே என தேடுகிறேன்!
-அதிகமாக நேசித்த பொருள் நமக்கு சொந்தமாகவில்லை என்ற வருத்தம், நேசித்த அந்த பொருளை அதிகமாக வெறுக்க வைத்துவிடும்!
-நான் இல்லையெனில் உனக்காக காத்திருக்க பலர் இருப்பார்கள்! ஆனால், நீ இல்லையெனில் எனக்காக காத்திருப்பது மரணம் மட்டுமே!
-யாரால் இன்று அதிகமாக நேசிக்கப்படுகிறோமோ, அவர்களால் ஒருநாள் அதைவிட அதிகமாக வெறுக்கப்படுவோம்!
மதம் கொண்டதால் யானை மனிதனை கொன்றது... மதம் கொண்டதால் நம் காதலை மனிதன் கொன்றான்!
-விட்டு விடுவதல்ல, உண்மையான நேசம் விட்டுக்கொடுப்பதே!
-விரும்பிய நாட்களை வெறுக்க நினைக்கிறேன், ஏனோ, விரும்பிய உன்னை இன்னும் வெறுக்க நினைக்கவில்லை!
-என் நிழலிருந்தும் இரத்தம் கசிகிறது உன்னால்!
-நான் இல்லாமல் நீ அங்கு மகிழ்ச்சியாக இருக்கிறாய்! ஆனால் இங்கு நான் மரணத்தின் பிடியில் இருக்கிறேன் என்பதை மறந்து விடாதே!
-சரியான காரணத்தோடு விலகிப் போகலாம். காரணத்தைத் தேடி தேடி விலகிப் போக கூடாது!
-அழகான அன்பினால் மட்டுமே, ஆழமான காயம் தர முடியும்!
-மிகச் சரியாக செய்த, மிகப் பெரிய தவறு, உன்னை உண்மையாக நேசித்தது தான்!
-உன்னை நினைத்து என்னை மறந்தேன்! எதை நினைத்து என்னை நீ மறந்தாய்!
-பிரிந்து போனாலும், பிரியங்கள் போகாது! கடந்து சென்றாலும் காயங்கள் ஆறாது!
-எவ்வளவு சந்தோஷத்தில் இருந்தாலும் அடுத்த நொடி நம்மை கலங்கவைக்க சிலரால் மட்டுமே முடியும்!
-கை தவறினால் பொருள் உடையும் என யோசிப்பவர்கள், வாய் தவறினால் மனம் உடையும் என யோசிப்பதில்லை.
-அளவில்லாத அன்பும் அதிகபட்ச ஆசையுமே அழுகைக்கு காரணமாக அமைகிறது!
-துரத்திவிட்டால் தேடி வருவது ஐந்தறிவு ஜீவன்கள் மட்டுமல்ல! அளவற்ற அன்பு வைத்த அப்பாவிகளும் தான்!
-விட்டு விடாதே என்று சொன்ன நபர், விட்டுச் செல்கையில், அங்கேயே விட்டுச் செல்கிறது உயிரும்!
-பிடிக்கவில்லை என்றால் பொய்யாக நேசிக்காதீர்கள்! அன்பாய் இருப்பவர்களால் ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாது!
-கைப்பேசியும் என்னை கண்டித்தது, காதல் செய்து உன்னை மறந்து சென்ற அவளை எண்ணி தினம் தினம் என்னை தொந்தரவு செய்யாதே, உன் நினைவு அவளுக்கு இருந்தால் அழைப்பாள் அப்போது!
யாரையும் அதிகமாக நேசிக்காதீங்க! அவங்க பேசாத ஒவ்வொரு நொடியும் மரண வேதனை தரும்!
-கஷ்டம், கவலை, துரோகம், தாங்க முடியாத வலிகள்... அனைத்தையும் நான் மறக்க, மறைக்க... இதழ்களில் உதிக்கும் புன்னகைக்கு வலிமை அதிகம்.
-உண்மை இல்லா உறவுகளிடம் ஒட்டி இருப்பதை விட ஒதுங்கி இருப்பதே நல்லது!
-விட்டு செல்ல நினைப்பபவர்களிடம் காரணம் கேட்பது வீண்! அவர்கள் காரணங்கள் சேகரித்ததே விட்டு செல்வதற்கு தான்!
-ஒரு உண்மையான அன்பை எந்த காரணமும் இல்லாமல் நிராகரிப்பதை விட, கொடிய வன்முறை இந்த உலகில் இல்லை.
-பேசி பயனில்லாத போது மௌனம் சிறந்தது! பேசியே அர்த்தமில்லாத போது பிரிவே சிறந்தது!
-பிரிவுகள் பழகி விட்டது! அடுத்தது யாராக இருப்பார்கள் என்பது தான் இப்போதைய யோசனை!
-நேசித்தவர் பிரியும் பொழுது! நெஞ்சம் நெருப்பாய் கொதிக்கத்தான் செய்யும்!
-விளக்கம் கொடுத்து இழுத்து பிடித்து வைத்து தான் சில உறவுகளின் அன்பினை பெற வேண்டுமெனில் அத்தகைய உறவுகளே வேண்டாம் என்று தனிமையில் வாழ்வது சிறப்பு.
-விளக்கம் கொடுத்து இழுத்து பிடித்து வைத்து தான் சில உறவுகளின், அன்பினை பெற வேண்டுமெனில், அத்தகைய உறவுகளே வேண்டாம் என்று தனிமையில் வாழ்வது சிறப்பு.
-அன்புக்கு உரியவர்களை இழந்துவிடாதீர்கள்! ஏனெனில், அவர்களை போலவே இன்னொருவர் அமைவது கடினம்....
-புரியாமல் பிரிந்து சென்றவர்களை விட, புரிந்திருந்தும் பிரிந்து சென்றவர்கள் தான் இங்கே அதிகம்!
-நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் சில உறவுகள்! சொல்லவும் முடியாமல் சில ஆசைகள்! மறக்கவும் முடியாமல், வெறுக்கவும் முடியாமல் சில நினைவுகள்!
-நேசிக்க கற்று கொடுக்கவில்லை. ஆனால் நேசித்த பின்பு யாரையும் நேசிக்காதே என்று கற்று கொடுத்துவிட்டு செல்கிறது - சிலரின் அன்பு
-காதலும் ஒரு நாள் தோற்றுப்போகும், அதன் மதிப்பு தெரியாதவர்கள் மத்தியில்!
-அளவில்லா ஆனந்தம் தருவதும், அளவில்லா சோகம் தருவதும் நம் மனதிற்கு பிடித்தவர்கள் மட்டும் தான்!
-உன் அன்பின் அளவை, பிரிவின் இறுதி அணைப்பிலே உணர்ந்தேன்!
விழியோரம் வழியும் கண்ணீருக்கு வலிகள் ஆயிரம் இருக்கும்! வலி போக்க வழி இனிய தனிமையே!
-இதயத்தை தந்துவிட்டு திரும்பி கேட்கிறாயே! தரவும் மறுக்கிறேன், மறக்கவும் மறுக்கிறேன்! மனதோடு அணைக்கிறேன், மறவாமல் கலந்துவிடு!
-மதி மேல் உன் திருமுகம் கண்டேனடி! அது கனவு என்று தெளிந்தேனடி! உன் நினைவு என்னை வதைக்குதடி! உன்னால் படைத்தவனையும் வெறுத்தேனடி!
-இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளவே சிலர் நம் வாழ்வில் வந்து செல்கின்றனர்!
-பணி கூட சுமையில்லை! ஆனால் பனியும் சுடுகிறது, நீ இல்லாத இரவுகளில்!
-எப்போது நம் மௌனம் ஒருவரை பாதிக்கவில்லையோ, அப்போதே தெரிந்து கொள்ளலாம் நாம் அவருக்கு முக்கியமானவர் இல்லையென்று!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags
- Sad Relationship Quotes in Tamil
- Love Sad Quotes Tamil
- Sad Wife Quotes in Tamil
- Sad Love Quotes in Tamil
- thedi parkiren unnaiyum ennaiyum quotes
- sad feeling quotes in tamil
- santhegam quotes in tamil
- sad quotes in tamil for whatsapp
- saree quotes in tamil
- sogam meaning in tamil
- tamil sad story
- sad lines in tamil
- thedi parkiren unnaiyum ennaiyum
- love sad tamil
- love sad images tamil
- sad memes in tamil
- sad stories in tamil
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu