Sad Life quotes in Tamil வலிகளை தாங்கும் இதயம், வலிமையானது
வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள், மகிழ்ச்சி மற்றும் சோகம், இருள் மற்றும் ஒளி இருக்கும். அனைத்தும் எதிர் தளத்தில் உள்ளது. சோகமான விஷயங்களும் நடக்கும், ஆனால் அவை நீண்ட காலம் நீடிக்காது. சோகமான சம்பவத்தை நினைத்து மன அழுத்தத்தை அடைய வேண்டாம். நடக்கும் எல்லாவற்றுக்கு ஒரு காரணமுண்டு. அது நல்ல காரணமாக இருக்கும் என்று நம்புவோம் .
ஆயிரம் வலிகளை சுமந்து அதையும் தாண்டி வாழ்க்கையில் எதையோ யாரையோ சமாளிக்கவும் சகித்துக்கொள்ளவும் சிரித்துக் கொண்டிருக்கும் பல கோடிக்கணக்கான மக்களின் சிரிப்பிற்கு பின்னால் உள்ள வலிகளை புரிந்து கொள்வோம்
அதிகம் பேசி
திகட்டி விடாதீர்கள்
சிலரால்
ஒதுக்கப்படுவீர்கள்
சிலரால்
மட்டம் தட்டப்படுவீர்கள்
சில சமயங்களில்
கலங்கி போகிறது மனம்
சிலர் நாம் தோற்றத்தை வைத்து
நாம் யார் என்று
முடிவெடுத்து விடுகிறார்கள்
விலகிட நினைக்கும்
அந்த கனம் தான்
நாம் இருப்பது
நினைவிற்க்கு வரும்
சிலருக்கு
சில இடங்கள்
நாம் உணராமலே
நம் மனதிற்கு
அமைதியை கொடுக்கும்
அளவில்லா வலிகளினால்
கடந்து போன நிமிடங்கள்
ஏனோ கலைக்க முடியாத
நினைவுகளை மட்டும்
விட்டு செல்கின்றன
புரிந்தவர்களை விட
பிரச்சனை வேண்டாம்
என்பவர்களே
அமைதி காக்கிறார்கள்
உறவுகளை தவிக்க விட்டு
தனிமையில்
போன காலம் மாறி
தனிமையில் உறவுகளைத்
தேடித் தவிக்கும்
காலமாகிவிட்டது
புரிந்து கொண்டால்
தனிமையும் பேரழகு தான்
ஏனென்றால்
நம்மை காயப்படுத்த
அங்கு ஒருவரும்
இல்லை என்பதால்
பிரிந்து செல்லும்
ஒவ்வொரு உறவுகளும்
ஏதோ ஒரு வகையில்
எதையாகினும்
கற்று கொடுத்து
செல்கின்றனர்
அன்பின் கரம் பற்றி
அவஸ்தைகளோடு
நகர்கிறது வாழ்க்கை
தாய் மடிக்குப் பிறகு
நம் கவலைகளுக்கும்
கண்ணீருக்கும்
கனவுகளுக்கும்
ஆறுதலாய் மடி கொடுப்பது
தலையணை மட்டுமே
நிஜங்களை
நினைவுகளாக்கி
பாதுகாக்கின்றது
இமைகள்
கண்ணீரில்
கரைவதேயில்லை
வலிகள்
தேவைப்படும் தருணங்களில்
தேடுகின்றனர்
பின்னர் எளிதாய் மறக்கவும்
செய்கின்றனர்
ஏதாவது பேசிக்கொண்டே
இருந்தபோது
இனித்த நட்பூ
மௌனங்களை
சுவைக்கும் போது
மட்டும் கசந்துவிடுகிறது
மன்னிப்பு கேட்டால்
பேசி விடுவார்கள் என்ற
தைரியத்தில் தான் பலரும்
நேசிப்பவர்களின் மனதை
நோகடிக்கின்றனர்
நினைவுகள் அழிவதில்லை
அவை ஏற்படுத்திய
காயங்கள் மறைவதில்லை
பேசிய புரிதலை விட
பேசாத மவுனங்கள்
உணர்த்தி செல்கின்றன
காதலின் வலி இன்னதென்று
விரும்பிய போது
விரும்பினேன்
என்பதைவிட
வெறுத்த போதும்
விரும்பினேன்
நாம் நேசிக்கும்
ஒருவரின் சிறு
மாற்றங்கள்
கூட நம்மை
அழ வைக்கும்
தவறவிட்ட தருணங்களை
உணரும் நேரத்தில்
உனக்காய் இருப்பதில்லை
சில நேரங்களும்
சில உறவுகளும்
இருப்பதை தொலைப்பதும்
தொலைத்ததை நினைப்பதும்
நிம்மதியை தேடுவதும்
பலர் வாழ்வில்
வாடிக்கையானதே
தனிமையில் இருப்பது
வலி அல்ல
தனிமையில் வெறுமையை
உணர்வதே வலி நிறைந்தது
ஏதோ ஒரு வலி
ஏதோ ஒரு சோகம்
ஏதோ ஒரு தனிமை
தொடர்கிறது நம்மில்
பலரை
கிடைத்தது தொலைந்தது
காரணம் ஒன்றுமில்லை
கண்களை திறந்து விட்டேன்
கனவும் கலைந்து விட்டது
ஏங்கிக் கிடத்தலில்
ஏதும் நடக்கப் போவதில்லை
என்றான பின்
அதை கடத்தல் என்பது
வலி நிறைந்த போராட்டமே
விட்டுக்கொடுத்து
பழகிவிட்டால்
கடைசியில் நமக்கென்று
எதுவுமே மிஞ்சாது
தனிமை ஆரம்பத்தில்
சற்று கொடுமை
ஆனால் பழகிவிட்டால்
அதை போல நிம்மதி
எதிலும் இல்லை
நமக்கே நாம்
துணையாக இருக்கும்
போது தான்
வாழ்க்கையின் ரகசியங்கள் புரியும்
மனதின் வேதனைகளுக்கு
யாரோ ஒருவர் காரணமாக
இருக்கவேண்டிய
அவசியம் இல்லை
சில நேரங்களில்
ஏதோ நினைவுகள்
கூட காரணமாக இருக்கலாம்
பாதி வாழ்க்கை வலிக்கிறது
மீதி வாழ்க்கை வெறுக்கிறது
உயிராகவும்
உணர்வாகவும்
இருந்தவர்கள்
வெறும் நினைவாக
மாறுவது
மிகப்பெரிய வலி
வலிகள்
அழுகையில் மட்டும் தான்
இருக்க வேண்டும் என்பதில்லை
சில நேரங்களில்
அது போலி
சிரிப்பின் பின்னாலும்
மறைந்து இருக்கும்
உணர்வுகள் கொல்லப்பட்ட
நடைபிணமாய் வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர் பலர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu