சுவையான ஆரோக்கியம் நிறைந்த கம்பு தோசை செய்வது எப்படி?

சுவையான ஆரோக்கியம் நிறைந்த கம்பு தோசை செய்வது எப்படி?
X

Rye dosa recipe- கம்பு தோசை சாப்பிடுங்க... ஆரோக்கியம் தேடி வரும்! 

Rye dosa recipe- கம்பு, ராகி, சோளம் போன்ற தினை வகைகள் உடலுக்கு அதிக ஆரோக்கியம் தரும் உணவு ரகங்களாக இருக்கின்றன. ஆனால் அதன் நன்மை அறியாத பலரும், அத்தகைய உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. கம்பு தோசை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை பலப்படுத்தும்.

Rye dosa recipe- வீட்டில் சுவையான ஆரோக்கியமான கம்பு தோசை செய்வது குறித்து பார்க்கலாம்.

கோடை காலம் வந்து விட்டாலே குழந்தைகளுக்கு விடுமுறை துவங்கிவிடும். வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சுவையான வித்தியாசமான உணவுகளை சமைத்து தரலாம். சில குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட மாட்டார்கள். அந்த வரிசையில் குழந்தைளுக்கு பிடித்த சுவையான கம்பு தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


ஆரோக்கியமான கம்பு தோசை செய்ய தேவையான பொருட்கள்:

ரெண்டு கப் கம்பு அரிசி

கால் கப் முழு வெள்ளை உளுந்து பருப்பு

உப்பு தேவையான அளவு

தண்ணீர் தேவையான அளவு


சுவையான ஆரோக்கியமான கம்பு தோசை

முதலில் கம்பு அரிசியை தண்ணீரில் நன்கு கழுவி குறைந்தது 5 மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். இந்த கம்பு அரிசியை அரைப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு உளுந்தை சேர்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இந்த ஊற வைத்த கம்பு அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு பதத்தில் அரைத்து எடுக்கவும். இப்போது அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து இரவு முழுவதும் வைத்தால் இந்த கம்பு மாவு நன்கு புளித்து தோசை மாவு பதத்திற்கு வந்துவிடும்.


இப்போது காலையில் இந்த மாவை எடுத்து கரண்டியால் நன்கு கலந்து கொள்ள வேண்டும். மறுபுறம் தோசை தவாவை சூடு செய்து தோசை ஊற்றி தோசை ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பி போட்டு ஒரு நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான கம்பு தோசை தயார். இப்போது இந்த சத்தான சுவையான கம்பு தோசை உங்கள் விருப்பப்படி இட்லி பொடி அல்லது ஏதேனும் சட்னி வைத்து சாப்பிடலாம்.

Tags

Next Story
future ai robot technology