காதல்னாலே.... கவிதைதாங்க... அதிலென்ன சந்தேகம்...படிங்க...
Romantic Love Kavithai in Tamil
Romantic Love Kavithai in Tamil
கவலைப்படாதே ....அன்பே....யார் வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்...என பேசியிருக்குமோ காதல் கிளிகள்.
காதல்...காதல்...காதல்... காதலின் அருமை காதலிக்கறவங்களுக்கு மட்டுமே தெரியும். மற்றவர்களின் கண்களுக்கு வெறும் பிம்பமாக தெரிவது கூட காதலிப்பவர்களுக்கு அவர்களுடைய கண்ணோட்டத்தில் அழகிய பிம்பமாக தெரியும். அதுவெல்லாம் காதலித்து பார்த்தால்தாங்க தெரியும்.
உண்மையாக காதலிப்பவர்களுக்கு கவிதைகள் என்பது தானாகவே ஊற்றெடுக்கும்... அதுவும் காதலியை நினைத்து காதலனும்.. காதலனை நினைத்து காதலியும் எழுதும் வரிகள் இவர்களா? எழுதியது என்று கூட நமக்கு கேட்க தோணும்னா பார்த்துக்குங்களேன்...
உண்மையான காதல் எப்போதும் அழியாது... பிறரின் தலையீடு இல்லாத வரை. சில காலங்களுக்கு முன்பாக காதலர்களின் இடையே நடக்கும் சங்கேத பாஷைகள் அனைத்தும் கண்களால்தான் நடக்கும் . கண்கள்தான் பேசும். கண்களாலேயே பதிலும் கிடைத்துவிடும். ஆனால் தற்போது அதற்கெல்லாம் வேலையே இல்லாமல் போய்விட்டது. அதாவது சோஷியல் மீடியாக்களின் வரவுகளால் காதலர்களின் கடிதப்போக்குவரத்து முற்றிலும் முடங்கிப்போனது. இதனால் கவிதைகள் ஊற்றெடுப்பதும் குறைந்துவிட்டது என்று கூட சொல்லலாம். காரணம் வீடியோ காலில் பேசிக்கொள்வதால் கவிதையைப் பற்றி யோசிக்க எங்கே நேரம்-? கவிதைகள் எப்படி உருவாகிறது?- கற்பனையிலதாங்க உருவாகுது...
உண்மையான காதல்தாங்க எப்போதும் நிரந்தரம். நீங்க பார்த்தீர்களானால் தெரியும்... கல்யாணத்துக்கு முன்னால் காதலித்து கல்யாணம் செய்பவர்கள் கூட பல வருடங்கள் சேர்ந்து வாழ்வதில்லை... அதுவே பெண்பார்த்து கல்யாணம் செய்து பின் காதலை (அன்பை) துவங்குபவர்களிடம்தான் காதலின் தாக்கம் அதிகம் உள்ளது என ஆராய்ச்சிகளே தெரிவிக்கின்றன. அவ்வளவு புரிதல்கள்... ஆம் கணவன் மனைவி என்ற பேதம்இல்லாமல்...
விட்டுக்கொடுப்பதே வாழ்க்கை ...என்று யார் விட்டுக்கொடுத்தாலும் அந்த வாழ்க்கைதாங்க முன்னேற்றம் கிடைக்கும்... பதிலுக்கு பதில் என்று பேசிக்கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையில் வார்த்தைகள் தான் தடிமனாக ஆகுமே தவிர வாழ்க்கை தடிமனாவதில்லை...பல காதலர்களிடம் சரியான புரிதல் தன்மை இல்லாததால்தான் வாழ்க்கை எளிதில் கசந்து விடுகிறது. புரிந்து வாழும் எவரின் வாழ்க்கையிலும் புயல் அவ்வளவாக வீசுவதில்லை...வீச விடுவதில்லை அவர்கள்...
என் இதயத்துடிப்பு கூட உன் பெயரைத்
தான் சொல்கிறது... அடிக்கடி..நான் என்ன செய்ய..
எப்போது துடித்தாலும் உன்பெயரைத்தான் சொல்கிறதே...
உயிர்வாழ சுவாசம் என்பது அவசியம் தேவைதான்
ஆனால் உன் வாசமும் இருந்தால்தானே சுவாசமும் வசப்படும்
ஆஹா.... என்னதான் மாயமோ...நான் உன்
நினைவிலேயே கிடக்கிறனே...என்னவளே...
உன் தரிசனத்தைத்தான் தரமாட்டாயே... எப்போது-?
உன் கயல்விழிகள் சிமிட்டும்போது நான்
இமையாக இருக்ககூடாதா? என தோன்றும்...
என்னவளே..உன் மாயையில் நான் மயங்கித்தானேன்...
. போனேன்று சொல்வதா?அழகே...உன்னை ஆராதிக்கிறேன்...
அலுங்காமல் வந்துவிடு....பார்வையாலே நீ என்னை சில நேரத்தில்
பைத்தியமாக்கும்போது...நான் தவித்துதான்போகிறேன்...
என் மனதை திருடிய கள்வனே...நீ எங்கிருக்கிறாய்?
நானும் உன்னைக் காண துடியாய்த் துடிக்கிறேனே?
உன் நினைவுகள் என்னை வாட்டி வதைக்கின்றனவே...
வா...வந்து பார்... உன் எதிர்கால ஆசை கிளியை....
உன் நினைவுகளை மறக்க முடியாத பாவியாகிவிட்டேனே... நீ எப்போது வருவாய்...
நினைவுகள் அனைத்தையும் என் மனது பாரமாக்கி
சுமப்பதால் நான் மரமாகி போய் நிற்கிறேன்....
சிறையிலிருக்கும் கைதிகளுக்கு கூட விடுதலை உண்டு..
ஆனால் ...என்னை மனச்சிறை வைத்த நீ எப்போது
விடுவிப்பாய்... கோமகனே... எப்போது விடுவிப்பாய்...
ஆருயிர் கள்வனே... எப்போது விடுவிக்கப் போகிறாய்?
நீயும் நானும் மழை பெய்த சாரலில் சந்தித்தவைகளே
மறக்க முடியுமா?... மன்னவனே... மடிசாய்ந்து கிடக்கையிலே..
பறவைகளின் சப்தங்களே நமக்குசங்கீதமாய்
இருந்தது...சாயங்கால வேளையிலே... இனி
அப்படி ஒரு சந்திப்பு நமக்குள் இருக்குமா?...என்னவனே...
உனைப்பார்க்கும்போது என் கோபங்கள் அனைத்துமே
சரிவைத்தான் சந்திக்கின்றன... ஏன்?
என்னவளே...மாயையோ....
உன் விழி பார்த்து பேசும்போது வெறுப்புகளும்
சிரிப்புகளாக மாறிவிடுகின்றனவே...முத்துப்பல்லழகியே..
எவ்வளவு கோபங்கள் உன் மீது நான் கொண்டாலும்
என் மனம் கவரும் உன் விழிகளை பார்த்து
பேசும்போது உன் மீது கொண்ட வெறுப்புகள்
கூட என்னுள் சிரிப்புகளாகி உன் முத்தத்தின்
ஈரத்தில் நனைந்து முழுவதுமாக உன்னில்
நான் கலந்து போய் விடுகிறேன்
தென்றல் வீசும் சாயங்கால வேளையிலே...நாம்
சந்திப்போமா? ...என்னவளே...என்னவளே....
உன் வரவின் மீது என் விழி வைத்து காத்திருக்கிறேன்..
வந்துவிடு... அந்தி சாயும் நேரத்திலே...நாம் சந்திக்க...
என் மனவேதனையை உன்னோடு பகிரும்போது நான்
பாக்யசாலியாகிவிடுகிறேன்... பலசாலியாகிவிடுகிறேன்..
ஏன்?....தைரியத்தினை ஊட்டும் தைரியலட்சுமியா நீ.?
சொல்...என்னவளே... ஏன்...இப்படி-? ...இது எப்படி?-
காலங்கள் மாறினாலும் காதலர்களின் ரசனைகள் மாறுமா?
காதலர்களின் வார்த்தை பரிமாற்றங்களுக்கு கண்கள் துாதா?.
... காதல் வசனங்களை பொழிய வாட்ஸ்அப்பா..
முகத்தில் முகம் பார்க்கலாம் ? என ஏன் சொன்னார்கள்
தெரியுமா?,, நீ என்னைப் பார்க்கையிலே உன் முகம்
பிரகாசமாகும்போது நான் அதில் தெரிகிறேன்...
இதுதானே அந்த சூட்சுமத்தின் விளக்கமோ?....
உன் கடைக்கண் பார்வையிலேயே நான்
சரிந்து போகிறேன்... நீ அப்படி பார்க்கையில் பகைவனும்
நண்பனாகிவிடுவேன் போல் உள்ளதே...
என்ன பார்வை அது...? அப்பப்பா... என்ன பார்வை அது அப்பப்பா?
நீ உன் இனிய குரலால் என்னை அழைக்கும்போது நான்
துாக்கத்தில் இருந்தால்கூட எழுந்துவிடுகிறேன்... அதற்காக
உன் குரலை பதிவு செய்து அலாரமாக வைத்தேவிட்டேன்..
.என்னவளே...எப்படி...எப்படி?
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu