மழைகாலத்தில் எண்ணெய் பசை சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு என்ன தெரியுமா?

மழைகாலத்தில் எண்ணெய் பசை சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு என்ன தெரியுமா?
X

Remedies for oily skin disorders- எண்ணெய் பசை சருமம் ஏற்படும் பாதிப்புகள் ( கோப்பு படம்)

Remedies for oily skin disorders- மழைக்காலத்தில் எண்ணெய் பசை சருமத்தில் ஏற்படும் தொந்தரவுகளுக்கு தீர்வளிக்கும் வைத்தியம் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

Remedies for oily skin disorders- மழைக்காலத்தில் சருமத்தை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால் இந்த பருவத்தில் பெரும்பாலான சரும சார்ந்த பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. எண்ணெய் பசை சருமம் கொண்ட பெண்கள் மழைக்காலங்களில் பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் முகத்தில் பொலிவு இழப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்தப் பிரச்சனையைத் தவிர்ப்பதற்கு சருமத்தின் பொலிவைத் தக்கவைக்கவும், இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்கள் தெரிந்துக்கொள்வோம்.

முல்தானி மெட்டி முகமூடி

எண்ணெய் பசை சருமம் உள்ள பெண்கள் முல்தானி மெட்டி மற்றும் வேப்பம்பூவை பயன்படுத்தி சருமத்தை பராமரிக்கலாம். முல்தானி மெட்டியில் பல சருமம் சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்தும் சத்து உள்ளது. இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் முகத்தின் பொலிவை பராமரிக்க பயன்படுகிறது. முல்தானி மெட்டி முகத்தில் இருக்கும் எண்ணெய்யை உறிஞ்சக்கூடிய தன்மைகொண்டது. வேம்பு பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளதால் இந்த பண்புகள் அனைத்தும் முகத்திற்கு நன்மை பயக்கும். மேலும் இதை முகத்திலும் பயன்படுத்தலாம்.


தேவையான பொருள்கள்

முல்தானி மெட்டி இரண்டு தேக்கரண்டி

10 முதல் 12 வேப்ப இலைகள்

முல்தானி மெட்டி மற்றும் வேப்ப இலைகள் பயன்படுத்தும் முறைகள்

முதலில் வேப்பிலையை மிக்ஸியில் அரைக்க வேண்டும்.

அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் முல்தானி மெட்டியை எடுத்துக் கொள்ளவும்.

இந்த இரண்டு பொருட்களையும் கலக்கவும்.

இதற்குப் பிறகு பேஸ்ட்டை முகத்திற்கு பயன்படுத்துங்கள்.

பேஸ்ட்டைப் பயன்படுத்தி 30 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை கழுவவும்.

அதன் பிறகு ஈரப்படுத்தவும்.

இந்த பரிகாரத்தை வாரத்தில் 2 நாட்கள் செய்யவும்.

தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் முகமூடி

தக்காளி சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. தக்காளியில் இருக்கு எண்ணெய் உறுஞ்சும் அமிலங்கள் சருமத்தில் சேரும் அதிகப்படியான எண்ணெயை நீக்க உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் துளைகளை குறைப்பதால் முகத்தில் எண்ணெய் உருவாக்கத்தை குறைக்கிறது. வெள்ளரிக்காயில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முகத்திற்கு சிறந்த சுத்திகரிப்பு முகவராக செயல்படுகிறது.


தேவையான பொருள்கள்

வெள்ளரிக்காய்

தக்காளி

தக்காளி, வெள்ளரிகாய் எண்ணெய் முகத்திற்கு பயன்படுத்தும் முறைகள்

ஒரு பாத்திரத்தில் தக்காளி 2 ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள்.

அதில் அரைத்த வெள்ளிரிக்காய் ஜூசை சேர்த்துக்கொள்ளுங்கள்.

இந்த கலவையை முகத்திள் தடவி 20 நிமிடங்கள் விடவும்.

பின் முகத்தை தண்ணீரில் கழுவினாக் பளிச்சென்ற சருமத்தை பெறலாம்.

குறிப்பு: இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கும் முன் சருமத்தில் எந்த எதிர்வினையும் ஏற்படாதவாறு பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.

Tags

Next Story
வனத் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியரின் உற்சாக பாராட்டு!