உறவுகளின் வலி பற்றி தெரியுமா? உங்களுக்கு ?படிச்சு பாருங்க....

உறவுகளின் வலி பற்றி தெரியுமா?  உங்களுக்கு ?படிச்சு பாருங்க....
X

உறவுகளின் வலியும் வேதனைகளும் நாம் சிக்கலான நேரத்தில் உள்ளபோதே தெரிகிறது

Relationship Pain Quotes in Tamil-மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உறவுகள் என்று ஒன்று இருக்கும் நிச்சயமாக. அதுவும் திருமணமாகி விட்டால் உறவுகள் பெருகிவிடும். உறவுகளின் வலிகள் பற்றி தெரியுமா?

Relationship Pain Quotes in Tamil

பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்ற சினிமா பாடலை நாம் கேட்டிருக்கிறோம். அதுபோல் உறவுகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று மாற்றிக் கூட இந்த பாட்டைப் பாடலாம்.உறவுகள் என்பது அனைவருக்கும் உண்டு. நெருங்கிப்பழகும் உறவுகள், துாரத்துச் சொந்தங்கள் என பல வழிகளில் நமக்கு சொந்தங்கள் என்ற வரிசையில் பலர் இருப்பார்கள். உறவுகளில் உள்ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் உறவுகளும் உண்டு. உண்மையான ஆத்மார்த்தமான அன்புடன் பேசுபவர்களும் உண்டு. இதனை நாம் ஆளைவைத்துதான் எடைபோடவேண்டுமே தவிர எல்லோரையும் குறை சொல்லி விட முடியாது.

மனிதர்களிடமே இருக்கக்கூடாத குணம் ஒன்று என்றால் அதனை பொறாமை என்று சொல்லலாம். அந்த பொறாமைக்குணம் ஒரு சில உறவுகளிடம் உண்டு. கஷ்டப்பட்டு மிகவும் சிரமப்பட்டு நீங்கள் வாழ்க்கையில் உச்சத்தினை அடைந்தாலும் அதனைப் பற்றி பெருமையாக எண்ணாமல் மற்றவர்களிடம் நீங்கள் அந்த காலத்தில் பட்ட கஷ்டத்தினை மலரும் நினைவுகளாக சொல்லி நம்மைஅவனமானப்படுத்தும் உறவுகளும் உண்டு.

சரிங்க...உறவுகளினால் நமக்கு என்ன நன்மை என்று பார்த்தோமானால் உபகாரம் செய்பவர்களை விட உபத்திரவம் செய்பவர்கள்தான் நம் உறவுகளிடம் அதிகம். அதுவும் கல்யாண விஷயத்தில் ஒரு சில உறவுகள் வரன்கள் வதுாக்கள் அமையாத மாதிரி அதையும் இதையும் நமக்கே தெரியாமல் சொல்லி கெடுக்கும் உறவுகளும்இருக்கத்தான் செய்கின்றனர். என்ன செய்ய? .

ஆக பொறாமை என்ற குணம் இருப்பவர்கள் வாழ்க்கையில் எப்போதும் வெற்றிக் கோட்டினைத் தொட்டிருக்க மாட்டார்கள். அவர்களுடைய வேலையே அடுத்தவர்களைக் கெடுக்க நினைப்பதுதான். உள்ளமே இருட்டாக உள்ள போது உனக்கு மட்டும் கடவுள் வெளிச்சத்தினையே தருவார்.புறம் பேசும் உறவுகளினால் நாம் படும் வலிகளும், வேதனைகளும் அதிகமே. நமக்கே தெரிந்தாலும் நாம் அவர்களிடம் சென்று கேட்க முடியாது. காரணம் நம் உறவுமுறை நம்மைத் தடுத்துவிடுகிறது. இந்த வரிசையில் இக்கால இளைய தலைமுறையினரைச் சொல்லவே முடியாது. பழம்பெருசுகள் செய்யும் சாதுர்யமான வேலைகள்தான் உறவுகளில் பல. காரணம் அவர்களுக்குத்தான் நம் பழைய கதைகள் தெரியும்.ஏன்? நம் குடும்பத்தினைப் பற்றிய ஒரு சில விஷயங்கள் நமக்கு கூட தெரிந்திருக்க வாய்ப்பிருக்காது. ஆனால் பெருசுகள் அதனை நினைவில் வைத்து தக்க நேரம் வரும்போது வெளிப்படுத்தி கழுத்தை அறுத்துவிடுவர் சொல்லிச் சொல்லி.

உறவுகள் அனைத்தும் நிஜமா? உண்மையில் உறவுகள் நிஜ பாசத்தோடு பழகுகிறார்களா? அல்லது போலி பாசத்தினால் உறவுகளை தொடர்கிறார்களா? என்பது நமக்கு நாள் பட நாள் படவே புரியும். தெரியும் ., இந்த காலத்தினைப்பொறுத்தவரை உறவுகள் அனைத்தும் துாரத்தினையே மெயின்டெயின் செய்கின்றனர். கல்யாணம், காட்சி என்றால் மட்டுமே தலை காட்டி விட்டு பின்னர் நல்லது கெட்டதுக்கு மட்டும் தலை காட்டுவர். நடுவில் எந்த பேச்சும்இருக்காது. அக்கால உறவுகள் வலிமையானவை . போலிகள் என்பதைக் காண முடியாது. மனதில் பட்டதை பேசும் குணம் கொண்டவர்களாக இருந்தார்கள். ஆனால் இக்கால உறவுகள் அனைத்துமே உதட்டில் ஒன்று மனதில் ஒன்று வைத்து பேசுவதினால்தான் சிக்கலே.

உறவுகளினால் ஏற்படும் வலிகளை பாருங்களேன் ....

*உன்னிடம் அன்பாக பேசும் அனைவருமே, உண்மையாக உன் மீது அன்பு வைத்துள்ளார்கள் என நினைக்காதே ... அந்த போலி அன்பிற்கு பின்னால் அவர்களுக்கான தேவை உன்னிடம் இருக்கிறது என்பதை நீ மறந்துவிடாதே.

*நேசிக்க தெரியாத மனிதர்களிடம் நேசத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

*நம்ம மனசாட்சிக்கு நாம நல்லவங்களா தெரிஞ்சா போதும் எல்லோருக்கும் நிரூபித்து காட்டவேண்டும் என்ற அவசியம் இல்லை.

*ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்க. ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாக இரு்க்காதீர்கள்.

*அத்தனை அன்பும் பொய்தான் என்று தெரிய வரும்போது, அத்தனை நாள் பழக்கமும் அரை நொடியில் அர்த்தமற்று போகிறது.

*துரோகத்தின் முதல் விதை அதிகபட்ச நம்பிக்கையால்தான் துாவப்படுகிறது.

*போலியானவர்கள் உங்களைப் பற்றி உங்களுக்கு முன்னால் நல்லதும் உங்களுக்கு பின்னால் கெட்டதும் பேசுவார்கள்.

* ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்க.. ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாக இருக்காதீர்கள்.

*நீ கேட்டு வாங்கும் அ ன்பு கடைசி வரை வருவதில்லை


*நிரந்தரம் இல்லாத உலகம், யாரும் யாருக்காகவும் இல்லை என்பது மட்டும் நிஜம்

*சில உறவுகள் நம்முடன்இருப்பதை விட விலகிச்செல்வதே நல்லது

*தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்புஇருக்கும். சில உறவுகளுக்கு தேவை இருக்கும் வரை தான் பாசமும் இருக்கும்

*உங்கள் வாழ்க்கை போலி மனிதர்களால் நிறைந்திருக்கும்போது யாருக்கு எதிரி தேவை.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story