/* */

சங்கரா மீனிலுள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?

Sankara Fish Benefits in Tamil-சங்கரா மீனிலுள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?

HIGHLIGHTS

சங்கரா மீனிலுள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
X

சங்கரா மீன். 

Sankara Fish Benefits in Tamil-கடல் வாழ் உயிரினங்களான மீன்களில் புரதச்சத்து அதிகம் உள்ளது. இதனை விரும்பி சாப்பிடுபவர்கள் நல்ல ஆரோக்யத்தோடும்புத்துணர்ச்சியோடும்இருப்பதை பார்க்கிறோம். மீன் சாப்பிடாதவர்களோடு ஒப்பிடும்போது மீன் சாப்பிடுபவர்களின் ஆரோக்யம் திடகாத்திரமாகவே உள்ளது . ஆராய்ச்சிகள் இதை நிரூபிக்கின்றன.

இறைச்சி வகைகளை அதிகம் சாப்பிட்டால் உடல் ஆரோக்யத்துக்கு பாதிப்பு என சொல்லப்படுகிறது. ஆனால் கடல் வாழ் உயிரினங்களான மீன்களை சாப்பிடுவதால் உடல் ஆரோக்யமானது மேம்படும்.அதுவே அதிகம் சாப்பிடக்கூடாது. அளவோடு சாப்பிட வேண்டும். அந்த வகையில் சங்கரா என்று சொல்லக்கூடிய ரெட் சாப்பர் மீன்களில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.

இறைச்சியை சாப்பிடாமல் மீன் வகைகளை மட்டும் சாப்பிடுவோரின்முதல் சாய்ஸ் இந்த ரெட்சாப்பர் என சொல்லப்படும்சங்கரா வகை மீன்கள்தான். இதனை எப்படி செய்து சாப்பிட்டாலும் அதன் சுவை குறையாதது. மேலும் சுவைமிக்க மீன் வகைகளில் ஒன்றுதான் சங்கரா. இதன் சதைகள் மிகவும் அதிக சுவை தருபவை.

இவ்வகை மீன்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகள், மெக்சிகோ, கரிபீயின் கடல், மற்றும் மெக்சிகோவின் சவுத்ஈஸ்டர்ன் அட்லான்டிக் கடற்கரை, மற்றும் யுனைடைட் ஸ்டேட்ஸ் ஆகிய பகுதிகளில் காணப்படும். இவ்வகை மீன்கள் அதிக புரதசத்தினை கொண்டவை மற்றும் குறைந்த அளவிலான கொழுப்பினைக்கொண்டது. மேலும் இவற்றில் செலீனியம், மற்றும் பி வைட்டமின்களைக் கொண்டது.


170 கிராம் ரெட்ஸ்னேப்பர் மீனில் அடங்கியுள்ள சத்துகள்

கலோரி -218,மொத்த கொழுப்பு 2.9 கி,புரதம் 45 கி.,கொலஸ்ட்ரால் 80 மி.கி,சோடியம் -97 மி.கி,பொட்டாசியம் 887 மி.கி, விட்டமின் ஏ-3.9 சதவீதம், கால்சியம் -5.2 சதவீதம், விட்டமின் சி 4.5 சதவீதம், இரும்பு-2.3 சதவீதம் ஆகியவை.

சங்கரா வகை மீன்களில் குறைந்த அளவிலான கலோரி அதிக புரதம் கொண்டவை. மேலும் செலீனியம், விட்டமின் ஏ மற்றும் பி பொட்டாசியம், ஒமேகா 3 கொழுப்புஅமிலங்கள். மேலும் இ தய சம்பந்தமான பாதிப்புகள் மற்றும் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த மீனை உட்கொண்டால் சற்று நிவாரணம் பெறலாம்.

இவ்வகை மீன்களில் குறைந்த கலோரிகளும் அதிக புரதசத்துகளும்உள்ளன. மேலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் பல தாதுப்பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளதால் இருதயத்துக்கு நல்லது.

மேலும் இவ்வகை மீன்களி்ல் உள்ள செலீனிய தாதுவானது நம் உடலில் ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு உதவுவதோடு ,தைராய்டு சுரப்பியின் செயல்பாடுக்கும் துணைபுரிகிறது. மேலும் இவ்வகை மீன்கள் தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் மற்றும் கண்களில் பார்வை புலம் அதிகரிக்கவும் பயன்படுகிறது. பொட்டாசியத்தின் பயனாக இருதய செயல்பாடுக்கு பயன்படுகிறது.

எடைகுறைப்பு, தசை வளர்ச்சி, ஒமேகா 3 கொழுப்பு அமிலம், தைராய்டு சுரப்பி செயல்பாடு, மனஅழுத்த குறைபாடு, நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்தல், பார்வை புலம் அதிகரிக்க,குறைந்த ரத்த அழுத்தம், இருதய செயல்பாடு, மூளை புத்துணர்ச்சிக்கு, மனஅழுத்த நோய்கள் விரைவில் குணமடைய இம்மீனிலுள்ள தாதுசத்துகள் பெரிதும் பயன் தருகிறது.

மேலும் இவ்வகை கடல் வாழ் உயிரினங்களில் அதிக சத்துகள் நிறைந்துள்ளதால் இடைவெளி விட்டு சாப்பிட வேண்டும். அதிகமாக உண்டாலும் ஆரோக்யத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அளவோடு உண்டு வளமோடு வாழ திட்டமிடுங்கள்.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 March 2024 11:02 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  தமிழக கிராம உணவின் சிறப்புகள்
 2. குமாரபாளையம்
  மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
 4. லைஃப்ஸ்டைல்
  மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
 5. லைஃப்ஸ்டைல்
  இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
 6. இந்தியா
  5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
 7. கடையநல்லூர்
  கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
 8. லைஃப்ஸ்டைல்
  கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
 9. லைஃப்ஸ்டைல்
  இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
 10. தென்காசி
  கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி