Ragi Benefis -குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ராகி லட்டு!

Ragi Benefis- ராகி லட்டு செய்வது குறித்து தெரிந்துக்கொள்வோம் (கோப்பு படம்)
Ragi Benefis: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ராகி லட்டு செய்வது குறித்து அறிவோம்.
குழந்தைகளின் எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் கேழ்வரகு உதவியாக உள்ளது.
இன்றைய குழந்தைகளிடம் சாக்லேட் மீதான ஆசை அதிகரித்துள்ளது. அதற்கேற்றால் போல் ஒவ்வொரு நாளும் விதவிதமான கலர் பேப்பர்களில் வரக்கூடிய சாக்லேட்கள் தான் சந்தைகளில் அதிகம் விற்பனையாகிறது. கடைகளுக்கு அழைத்துச் சென்றாலும் கடலை மிட்டாய், எள்ளு உருண்டை போன்ற ஆரோக்கியம் நிறைந்த தின்பண்டங்கள் கண்களுக்குத் தெரியாது. புதிய டிசைன்களில் வரக்கூடிய சாக்லேட்டுகள் தான் தெரியக்கூடும். உங்களது குழந்தைகளும் அப்படி தானா? இனி அந்த கவலை வேண்டாம். நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு சிறு தானிய உணவில் செய்யக்கூடிய ஸ்நாக்ஸ்களைக் கொத்து பழகவும். இதோ இன்றைக்கு குழந்தைகள் அதிகம் விரும்பிச் சாட்டக்கூடிய லட்டுகளை கேழ்வரகில் எப்படி செய்யலாம்? என்பது குறித்து அறிந்துக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு விருப்பமான ராகி லட்டு:
தேவையான பொருட்கள்:
கேப்பை (கேழ்வரகு மாவு) - 1 கப்
வெல்லம் - அரை கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
உலர் திராட்டை - சிறிதளவு
ஏலக்காய், சுக்கு தூள் - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
கேழ்வரகு எனப்படும் ராகி லட்டு செய்வதற்கு முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் வெல்லத்தைத் தூளாக்கிக் கொண்டு, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வெல்லப்பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
நீங்கள் எடுத்து வைத்துள்ள எள்ளையும் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இதையடுத்து மிதமான தீயில் வைத்து கேப்பை மாவை வறுக்கவும். பின்னர் ஏற்கனவே காய்ச்சி வைத்துள்ள வெல்லப் பாகில் மாவை கொட்டி கிளற வேண்டும். இதனுடன் உலர் திராட்டை, எள்,முந்திரி பருப்பு, ஏலக்காய் மற்றும் சுக்கு தூளைக் கொட்டி நன்றாக கிளறி விட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
இறுதியில் கை சூடு தாங்கும் அளவிற்கு சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்தால் போதும். சுவையான ராகி லட்டு ரெடி.
இது போன்ற முறைகளில் நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு செய்துக் கொடுத்து வெல்லத்தின் சுவையைப் பழக்கப்படுத்தினால் போதும் மீண்டும் மீண்டும் செய்துக் கொடுக்க செய்வார்கள்.
கேப்பையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
நம்முடைய முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு உதவியாக இருந்த சிறுதானியங்களில் முக்கியமானது கேழ்வரகு அதாவது கேப்பை. அனைத்து பருவநிலையிலும் இந்த பயிர்கள் விளையக்கூடும் என்பதால் உடலுக்கு எண்ணற்ற ஆற்றலைக் கொடுக்கிறது. கேப்பையில் கால்சியம், புரதம், நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அழிலங்கள் உள்ளது. கல்லீரலில் படியக்கூடிய அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றவும் உதவியாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சந்திக்கும் உடல் நல பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது ரத்த சோகை. இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு கேழ்வரகில் செய்யக்கூடிய உணவுப் பொருள்கள் உதவியாக உள்ளது.
கேப்பையில் உள்ள நார்ச்சத்துக்கள், குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய செரிமானப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. குழந்தைகளின் எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் கேழ்வரகு உதவியாக உள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu